Friday, 17 October 2014

10, பிளஸ் 2 காலாண்டுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு பயிற்சி : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

விருதுநகர் : காலாண்டுத்தேர்வில் 10ம்வகுப்பு, பிளஸ் 2 வில் பாடவாரியாக தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சியளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பொதுத்தேர்வில் பள்ளிவாரியாக தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பள்ளிகல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் ஒருபகுதியாக சமீபத்தில் முடிந்த அவ்வகுப்புகளுக்கான காலாண்டுத்தேர்வுகளில் பாடவாரியாக தேர்ச்சி பெறாத அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் சிறப்பு பயிற்சியளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,"எந்தெந்த பாடங்களில் அதிக மாணவர்கள் தோல்வியடைந்தனர். அதற்கான காரணம் என்ன என கண்டறிந்து, அவர்களை அடுத்துவரும் அரையாண்டுத்தேர்வு, பின்னர் இறுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற வைப்பதற்கான வழிமுறைகளை வகுக்க மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி முக்கிய வினா விடை அடங்கிய கையேடு தயாரித்து வழங்கப்பட்டு அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் அம்மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இதுபோல் பாட ஆசிரியர்களுக்கும் பயிற்சியளிக்கப்படும்,”என்றார்.

0 comments:

Post a Comment