சென்னை,
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடல்சார் ஆராய்ச்சிக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-சி என்ற செயற்கை கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-26 ராக்கெட் 10-ந் தேதி ஏவப்படுகிறது.
கடல்சார் ஆராய்ச்சிக்காக
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இருவகையான ராக்கெட்டுகள் மூலம் விண்வெளிக்கு செயற்கை கோள்களை அனுப்பி விண்வெளி ஆராய்ச்சி செய்து வருகிறது.
செவ்வாய்க்கிரகம் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5-ந் தேதி பி.எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட்மூலம் மங்கள்யான் விண்கலம் ஏவப்பட்டது.
அது கடந்த மாதம் 24-ந் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இது பெரிய வரலாற்று சாதனை மட்டுமல்ல, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு கிடைத்த வெற்றியும் ஆகும்.
3-வது செயற்கைகோள்
இஸ்ரோ நிறுவனம் கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கை கோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே 2 செயற்கை கோள்கள் அனுப்பப்பட்டுவிட்டன. இப்போது 3-வது செயற்கை கோளாக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-சியை பி.எஸ்.எல்.வி. சி-26 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு செலுத்த உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்த ராக்கெட் வருகிற 10-ந் தேதி பகல் 1-56 மணிக்கு செலுத்த உள்ளது.
ஏற்கனவே ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-ஏ, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-பி. ஆகிய செயற்கை கோள்கள் ஏற்கனவே விண்ணில் செலுத்தப்பட்டுவிட்டது.
இயற்கைசீற்றம், இயற்கை இடர் மேலாண்மை, கடல்சார் கண்காணிப்பு ஆகியவற்றை கண்காணிப்பதற்காக இந்த செயற்கை கோள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்படுகிறது. |
0 comments:
Post a Comment