Wednesday, 9 July 2014

தமிழக சட்டசபை இன்று கூடுகிறது - DINATHANTHI


சென்னை, ஜூலை.10-தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. பட்ஜெட் தாக்கல்2014-15-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த பிப்ரவரி 13-ந் தேதி தாக்கல் செய்தார்.
இது இந்த ஆட்சியில் 4-வதாக தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டாகும்.அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் சில நாட்கள் நடந்தது. பாராளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் நிலையில், அந்த பட்ஜெட் கூட்டத்தொடரின், துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம், வாக்கெடுப்பு போன்ற தொடர் நிகழ்ச்சிகள், சட்டசபையில் ஒத்திவைக்கப்பட்டன.சபாநாயகர் அறிவிப்புஒத்திவைக்கப்பட்டிருந்த இந்த நிகழ்வுகள் இன்று (10-ந் தேதி) தொடங்குகின்றன. மத்திய அரசின் பட்ஜெட் இன்று தாக்கலாகும் சூழ்நிலையில், தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரும் தொடங்குகிறது.அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இந்த கூட்டத்தொடர் ஆகஸ்டு 12-ந் தேதி வரை நடக்கும் என்று சபாநாயகர் தனபால் ஏற்கனவே அறிவித்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் என்னென்ன துறை ரீதியான மானிய கோரிக்கை, விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பது பற்றியும் அவர் கூறியுள்ளார்.மவுலிவாக்கம், அலமாதி உயிரிழப்புக்கு இரங்கல்இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூடியதும், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கோ.பூவராகன், அ.மலர்மன்னன், ரா.உமாநாத், ராம.நாராயணன், எஸ்.ராஜு ஆகியோரின் மறைவு குறித்த இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும்.அதைத் தொடர்ந்து, மத்திய மந்திரி கோபிநாத் பாண்டுரங் முண்டே, மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் ஏற்பட்ட மனித உயிரிழப்புகள், அலமாதி கிராமத்தில் சேமிப்பு கிடங்கில் மதில்சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் நேரிட்ட உயிரிழப்புகள் ஆகியவை குறித்த இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்படும்.அமைச்சர்களின் பதிலுரைஅதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் எழுப்பும் கேள்விகள் மற்றும் துணை கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்கும் நிகழ்வுகள் நடைபெறும். சபாநாயகர் ஏற்கனவே அறிவித்தபடி, இன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை ஆகிய துறைகளுக்கான மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது.இந்த விவாதத்தில் எம்.எல்.ஏ.க்கள் கூறும் கருத்துகளுக்கு, சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பதிலளிக்கின்றனர். அப்போது துறை ரீதியான அறிவிப்புகளை அவர்கள் வெளியிடுவார்கள்.

0 comments:

Post a Comment