புதுடெல்லி, ஜூலை.10-மோடி அரசு பதவியேற்ற பின்னர் முதன் முதலாக பாராளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் தனிநபர் வருமான வரி வரம்பு உயர்வு, சலுகை அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.முதல்
பட்ஜெட்பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் பாரதீய ஜனதா கூட்டணி அரசு கடந்த மே மாதம் 26-ந் தேதி பதவி ஏற்றது.புதிய அரசு தனது முதலாவது ரெயில்வே பட்ஜெட்டை கடந்த 8-ந் தேதி, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அதைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் நிதி மந்திரி அருண் ஜெட்லி, பொருளாதார ஆய்வு அறிக்கையை நேற்று தாக்கல் செய்தார். இன்று (வியாழக்கிழமை) அவர் நரேந்திர மோடி அரசின் முதலாவது பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.வருமான வரி உச்சவரம்பு உயர்வுஇந்த பட்ஜெட், மோடி அரசின் முதலாவது பட்ஜெட் என்ற வகையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின் நிதி நிலைமை மோசமாக உள்ளதால், கசப்பு மருந்து வழங்கப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டு, பட்ஜெட்டில் வரி உயர்வு, புதிய வரிகள் விதிப்பு இருக்கும் என்பதை சூசகமாக தெரிவித்துவிட்டது. எனவே பட்ஜெட்டில் நிச்சயம் வரி உயர்வுகள் இருக்கும். புதிய வரி விதிப்புகள் இருக்கும்.அதே நேரத்தில் தனிநபர் வருமான வரி வரம்பை உயர்த்துவதுடன், வரிச் சலுகைகளையும் மோடி அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தற்போதைய தனி நபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.2 லட்சம் என்றிருப்பது ரூ.2½ லட்சம் அளவுக்கு உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.வருமான வரிச்சலுகைஅதே போன்று 80(சி) பிரிவின்கீழ், வழங்கப்படுகிற வரிச்சலுகை அளவு தற்போதைய ரூ.1 லட்சம் என்ற அளவிலிருந்து ரூ.1½ லட்சம் அளவுக்கு உயர்த்தப்படலாம். இந்த பிரிவின்கீழ்தான் வீட்டுக்கடனுக்கான அசலை திருப்பிச்செலுத்துதல், தேசிய சேமிப்பு பத்திரம் போன்றவற்றில் சேமிப்பு, 5 வருட நிலைத்த வைப்பு போன்றவை வருகின்றன. இந்த சலுகை வழங்குவதால் சேமிப்பு ஊக்குவிக்கப்படுகிறது. இதன் மூலம் திரட்டப்படுகிற நிதியை உள்கட்டமைப்பு துறையில் பயன்படுத்த முடியும்.வருமான வரிசட்டத்துக்கு மாற்றுபொதுத்துறை நிறுவனங்களில் அதிகளவு பங்கு விற்பனை செய்து நிதி திரட்டுவது பற்றிய அறிவிப்பு இன்றைய பட்ஜெட்டில் முக்கிய இடம் வகிக்கும்.60 ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்து வருகிற வருமான வரிச்சட்டத்தை மாற்றிவிட்டு டி.டி.சி. என்றழைக்கப்படுகிற நேரடி வரிகள் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகலாம். இந்த சட்ட வரைவில் வருமான வரிச்சலுகையை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1½ லட்ச அளவுக்கு உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இதே போன்று ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக வருமானம் ஈட்டுகிறவர்களுக்கு 30 சதவீத வரி விதிக்கப்பட்டு வருகிறது. இந்த 30 சதவீதம் என்பது 35 சதவீத அளவுக்கு உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.தங்கம் மீதான வரி குறையும்பிற முக்கிய எதிர்பார்ப்புகள் வருமாறு:-* மோட்டார் வாகனத்துறை, நுகர்வோர் பயன்பாட்டு சாதனங்கள் துறையில் உற்பத்தி வரி சலுகையை ஏற்கனவே வரும் டிசம்பர் மாதம் வரை நிதி மந்திரி அருண்ஜெட்லி நீட்டித்து அறிவிப்பு வெளியிட்ட நிலையில், மேலும் 3 மாதங்களுக்கு அது நீட்டிக்கப்படலாம்.* நடப்பு கணக்கு பற்றாக்குறை ஓரளவு குறைந்து விட்டதால் தங்கம் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படலாம். * பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு இல்லாத நிலையில், விவசாயிகளுக்கு சலுகை அறிவிப்புகள் பட்ஜெட்டில் வரலாம்.* ஜி.எஸ்.டி. என்னும் பொருட்கள் மற்றும் பணிகள் சட்ட அமல்பற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகலாம்.* பொருளாதார சீர்திருத்தங்கள் பற்றிய புதிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறும்.கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம்* கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்குகிற முந்தைய மன்மோகன் சிங் அரசின் மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டம், உணவு பாதுகாப்பு திட்டம் போன்றவற்றில் மாற்றங்களை அறிவிக்கலாம்.* சமையல் கியாஸ் விற்பனை மூலம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டு வருகிற இழப்பினை ஓரளவு ஈடுகட்டுகிற வகையில் டீசலை போன்று மாதம் தோறும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்துவது பற்றிய அறிவிப்பு வரலாம்.
0 comments:
Post a Comment