சென்னை, ஜூலை.8-தமிழக அரசு நிர்வகிக்கும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் மருத்துவ கல்லூரியில் அதிக கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்கும்படி உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் உள்ளிட்டோருக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தாலுகாவை சேர்ந்தவர் கே.ரமேஷ்குமார் ராஜா. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-மருத்துவ படிப்புஎன்னுடைய மகள் பிரியதர்ஷினி பிளஸ்-2 பொது தேர்வில், 1,200 மதிபெண்ணுக்கு 1,161 மதிப்பெண் எடுத்துள்ளார். 196.75 கட்-ஆப் மதிப்பெண் பெற்றுள்ள என் மகளுக்கு, சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகம் கீழ் செயல்படும் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் தகுதி அடிப்படையில் இடம் கிடைத்துள்ளது. தற்போது அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க நிர்வாகியை அரசு நியமித்துள்ளது. விவசாயி இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கடந்த ஜூன் 25-ந் தேதி அனுப்பிய கடிதத்தில், 2014-15 கல்வியாண்டிற்கு ரூ.5 லட்சத்து 54 ஆயிரத்து 370-யை கல்வி கட்டணமாகவும், ரூ.85 ஆயிரம் விடுதி கட்டணமாகவும் ஜூலை 2-ந் தேதிக்கு முன்பாக செலுத்தவேண்டும். அவ்வாறு பணம் செலுத்தவில்லை என்றால் என் மகளுக்கு ஒதுக்கப்பட்ட எம்.பி.பி.எஸ். இடம் தானாகவே ரத்தாகிவிடும் என்று கூறியுள்ளார். இதனால், அந்த தொகையை செலுத்திவிட்டேன். நான் கிராமபுறத்தை சேர்ந்த மிகவும் பின்தங்கிய நிலையில் வாழும் விவசாயி. என்னுடைய ஆண்டு வருமானமே ரூ.60 ஆயிரம் மட்டும்தான். 5 ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்புக்கு சுமார் ரூ.28 லட்சம் வரை செலுத்தவேண்டியது வரும். அதிக கட்டணம் என்னால் இவ்வளவு பெரிய தொகையை செலுத்த இயலாது. மேலும், அண்ணாமலை பல்கலைக்கழகம் தற்போது அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரத்து 500-ம், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் ரூ.2 லட்சமும் ஆண்டு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், அரசு கட்டுப்பாட்டில் உள்ள இந்த ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் மட்டும் பெரும் தொகை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தற்போது, இந்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் அரசு கட்டுப்பாட்டில் உள்ளதால், அரசு மருத்துவ கல்லூரியில் வசூலிக்கப்படும் கல்வி கட்டணத்தைத்தான் வசூலிக்கவேண்டும். சட்ட விரோதம் எனவே, ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில், அரசு மருத்துவ கல்லூரியில் வசூலிக்கும் கல்வி கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிடவேண்டும். அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் இந்த கல்லூரியில் ரூ.5.54 லட்சம் ஆண்டு கல்வி கட்டணமாக வசூலிப்பதை சட்டவிரோதம், அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.இந்த மனு நீதிபதி எம்.சத்தியநாரயணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் கே.பாலு ஆஜராகி வாதிட்டார்.நோட்டீசு இதையடுத்து, மனுவுக்கு வருகிற ஆகஸ்டு 1-ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி அண்ணாமலை பல்கலைக்கழகம் பதிவாளர், நிர்வாகி, உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

0 comments:
Post a Comment