Monday, 7 July 2014

5 வருட பி.ஏ.பி.எல். சட்டக்கல்வியில் சேர, கலந்தாய்வு தொடங்கியது பிற்பட்டோரை விட எஸ்.சி.அருந்ததியினருக்கு கட் ஆப் மார்க் அதிகம்

சென்னை, ஜூலை.8-5 வருட பி.ஏ.பி.எல். சட்டக்கல்வியில் சேர்வதற்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. பிற்பட்டோர் பிரிவு கட்-ஆப் மார்க்கை விட எஸ்.சி. அருந்ததியினருக்கு கட்-ஆப் மார்க் அதிகம்.சட்டக்கல்வி கலந்தாய்வு

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழகம் அடையாறில் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு ஆகிய 6 இடங்களில் உள்ள அரசு சட்டக்கல்லூரிகளில் பி.ஏ.பி.எல். படிக்க 1052 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவர்களை சேர்க்க விண்ணப்பம் கோரப்பட்டது. 6 ஆயிரத்து 570 பேர் விண்ணப்பித்தனர். அமைச்சர் வேலுமணி விண்ணப்பித்த மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் கடந்த மாதம் 23-ந்தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. கலந்தாய்வு நேற்று சென்னையில் உள்ள சட்ட பல்கலைக்கழகத்தில் தொடங்கியது.சட்டத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு கலந்தாய்வை தொடங்கி வைத்தார். அப்போது முதல் 10 ரேங்க் எடுத்து கல்லூரிகளை தேர்ந்து எடுத்த மாணவ-மாணவிகளுக்கு அவர்கள் படிப்பதற்கான உத்தரவுகளை வழங்கினார்.10 பேர்கள் பெயர் மற்றும் அவர்கள் தேர்ந்து எடுத்த கல்லூரிகள் விவரம் வருமாறு:-1.மிட்டல் பி.ஜெயின், இவர் சென்னை டாக்டர் அம்பேத்கார் அரசு சட்டக்கல்லூரி.2.பி.அஜித்குமார், கோவை அரசு சட்டகல்லூரி.3.எம்.சித்ரா, சென்னை டாக்டர் அம்பேத்கார் அரசு சட்டக்கல்லூரி.4.வி.பாண்டீஸ்வரி, மதுரை அரசு சட்டகல்லூரி.5.டி.வாஜிதா தபஸ்ம், திருச்சி அரசு சட்டக்கல்லூரி.6.ஏ.அனந்தகுமார், திருச்சி அரசு சட்டக்கல்லூரி.7.எல்.விமலன், கோவை அரசு சட்டக்கல்லூரி8.எம்.பிரேமா, நெல்லை அரசு சட்டக்கல்லூரி.9.பி.இளையராஜா, நெல்லை அரசு சட்டக்கல்லூரி.10.எம்.தங்கராஜா, நெல்லை அரசு சட்டக்கல்லூரி.கட் ஆப் அதிகம் கலந்தாய்வில் பொதுப்பிரிவினருக்கு 90 மதிப்பெண், மலைஜாதியினருக்கு 69 மதிப்பெண், எஸ்.சி. அருந்ததியினருக்கு 81.500 மதிப்பெண்ணும், பிற்பட்டோருக்கு 81.375 மதிப்பெண்ணும் கட்-ஆப் மார்க் ஆக உள்ளது. பிற்பட்டோரைவிட எஸ்.சி.அருந்ததியினருக்கு கட் ஆப் மார்க் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.கலந்தாய்வு 10-ந்தேதி முடிவடைகிறது. கலந்தாய்வு தொடக்க விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி.வணங்காமுடி, சட்டக்கல்வி இயக்குனர் (பொறுப்பு) சந்தோஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

0 comments:

Post a Comment