சென்னை, ஜூலை.18-தமிழகத்தில் உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம், இரண்டு மடங்குக்கும் மேலாக உயர்ந்துள்ளதாக சட்டசபையில் அமைச்சர் பி.பழனியப்பன் கூறினார்.வீடியோ கான்பரன்சிங்தமிழக சட்டசபையில் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்தில் எம்.எல்.ஏ.க்கள் பலர் பேசினர்.
அவர்களுக்கு பதிலளித்த அமைச்சர் பி.பழனியப்பன் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:-பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் (பாலிடெக்னிக்) மற்றும் பொறியியல் கல்லூரிகளின் தரத்தினை உறுதி செய்யும் வகையில், 20 பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் 10 பொறியியல் கல்லூரிகளில் ‘‘வீடியோ கான்பரன்சிங் பிராட்காஸ்டிங் சென்டர்’’ ரூ.30 லட்சம் செலவில் நிறுவப்படும்.ரோபோ உருவாக்க பயிற்சிபொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த, தமிழ்நாட்டில் உள்ள சுமார் 350 பொறியியல் கல்லூரிகளுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் தயாரித்த உயிரோட்ட இயக்கப் படங்களைக் கொண்ட வேலை தேடுவோருக்கான தொகுப்பினை (அனிமேட்டட் வீடியோ) ரூ.3.5 லட்சம் செலவில் வழங்கப்படும்.பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்துவதற்காக, 10 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் 6 அரசு பொறியியல் கல்லூரிகளில் ‘இ-யந்த்ரா’ ரோபாடிக்ஸ் ஆய்வகங்கள் ரூ.80 லட்சம் செலவில் நிறுவப்படும். அங்கு ரோபோக்களை உருவாக்கும் பயிற்சி பெறலாம்.ஆசிரியர் பயிற்சி மையம்பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் தங்களது ஆங்கில பேச்சுத்திறனை மேம்படுத்திக் கொள்வதற்காக, உள்ளூர் சூழலுக்கேற்ப இருமொழி பாடப்புத்தகங்கள் (தமிழ் மொழிபெயர்ப்புடன் கூடிய ஆங்கிலம்) மற்றும் ஒளி ஒலி குறுந்தகடுகள் ஆகியவை 140 பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு சுமார் ரூ.6.30 லட்சத்தில் முதற்கட்டமாக வழங்கப்படும்.அரசு பொறியியல் கல்லூரிகளில் 10 கிலோவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி சாதனங்கள் ரூ.60 லட்சம் செலவில் நிறுவப்படும். தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களின் பயிற்றுவிக்கும் திறனை மேம்படுத்திக்கொள்ள வசதியாக, கோயம்புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் விடுதி வசதிகளுடன் ஆசிரியர்களுக்கான பயிற்சி மையம் ரூ.9 கோடி செலவில் நிறுவப்படும்.மாற்றுத்திறனாளி விளையாட்டு மையம்நவீன அறிவியல் வளர்ச்சியினை பரவலாக்குவதற்காக, இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காவுடன் கோயம்புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரி, இணைந்து, அந்தக் கல்லூரி வளாகத்தில் மென்பொருள் அடைகாப்பு மையம் (சாப்ட்வேர் இன்குபேஷன் செண்டர்) நிறுவப்படும்.தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு கழகம் மற்றும் இந்திய மாற்றுத் திறனாளிகள் குழுவின் இணைவுபெற்ற மதுரை, மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு தேசிய கல்விக் கழகம், அழகப்பா பல்கலைக்கழகத்தின் உடற்பயிற்சி கல்லூரியுடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு மையம் ரூ.65 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டைக்கு அருகில் உள்ள சாந்திநகரில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மாலைநேரக் கல்லூரி 2014-15-ம் கல்வியாண்டு தொடங்கப்படும். இவ்வாறு அமைச்சர் பி.பழனியப்பன் அறிவிப்புகளை வெளியிட்டார்.மொத்த மாணவர் சேர்க்கைஎம்.எல்.ஏ.க்களுக்கு பதிலளித்து அவர் பேசியதாவது:-ஸ்ரீரங்கம், கோவை, தர்மபுரி மற்றும் மதுரை மாவட்டங்களில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் மண்டல மையங்களும், உறுப்பு சமுதாயக் கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளன, மீதமுள்ள மாவட்டங்களிலும் தொழில் கல்வி வழங்கும் நோக்கில் சமுதாயக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.உயர் கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் (18 முதல் 23 வயதுக்கு உட்பட்டோர்) 2011-ம் ஆண்டில் 18 சதவீதமாக இருந்தது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையின் பேரில் அது 25 சதவீதம் என்ற இலக்கையும் தாண்டி, தற்போது 38.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் இந்தியாவில் தமிழகம்தான் முதலிடம் பெறுகிறது.2011-12-ம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் ஆயிரத்து 93 உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் நிரப்ப ஆணையிடப்பட்டது. சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு இந்த ஆண்டு ஆகஸ்டு முதல் வாரத்தில் நேர்காணல் நடத்தப்படும்.புதிய பணியிடங்கள்2013-14-ம் கல்வியாண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில், 513 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பிடத் தேர்வு வாரியத்திற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.கடந்த மூன்று ஆண்டுகளில், புதியதாகத் தொடங்கப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு 827 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் புதியதாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 3 ஆயிரத்து 120 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டு, நிரப்பப்பட்டுவருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

0 comments:
Post a Comment