பொறியியல்கலந்தாய்வு தேதி இன்னும் தெரியாததால்மாணவ, மாணவியர் தவியாய் தவித்து வருகின்றனர்.இதற்கிடையேஏ.ஐ.சி.டி.இ. (அகிலஇந்திய தொழில்நுட்ப கல்விக் குழு) நிலவரத்தைஅறிவதற்காக
தொழில்நுட்ப கல்வி கமிஷனர் குமார்ஜெயந்த் டில்லியில் முகாமிட்டுள்ளார்.
குமார்ஜெயந்த் சென்னை திரும்பியதும், புதியகலந்தாய்வு தேதி மற்றும் புதியகலந்தாய்வு அட்டவணை ஆகியவை குறித்தஅறிவிப்பு இன்று வெளியாகலாம் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்நுட்ப கல்வி கமிஷனர் குமார்ஜெயந்த் டில்லியில் முகாமிட்டுள்ளார்.
தமிழகத்தைச்சேர்ந்த புதிய பொறியியல் கல்லூரிகளுக்குஅனுமதி வழங்குவது தொடர்பான விவகாரத்தில் ஏ.ஐ.சி.டி.இ.க்குஒரு வாரம் கால அவகாசம்வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 27ம்தேதி துவங்க இருந்த பி.இ. பொதுப்பிரிவு கலந்தாய்வுதள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கலந்தாய்வுதுவக்கம், திருத்தப்பட்ட கலந்தாய்வு அட்டவணை, எப்போது வெளியாகும் என்றுதெரியாமல் மாணவ, மாணவியர், தவியாய்தவித்து வருகின்றனர். இது குறித்து அறியதினமும் ஏராளமான மாணவ,
மாணவியர் அண்ணா பல்கலைக்கு வந்தபடி உள்ளனர்.கலந்தாய்வுதேதி நேற்று வெளியாகும் எனஎதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த அறிவிப்பையும்அண்ணா பல்கலை வெளியிடவில்லை. தமிழகத்தைச்சேர்ந்த பொறியியல் கல்லூரிகள் மீது ஏ.ஐ.சி.டி.இ. எடுத்துள்ள நடவடிக்கையை அறிந்தால் தான் அதற்கேற்ப கலந்தாய்வுதேதியை அண்ணா பல்கலை நிர்ணயிக்கமுடியும்.
எனவே ஏ.ஐ.சி.டி.இ. நிலவரத்தைஅறிவதற்காக தொழில்நுட்ப கல்வி கமிஷனர் குமார்ஜெயந்த் நேற்று டில்லி விரைந்தார். அண்ணா பல்கலை துணைவேந்தர் ராஜாராம்உள்ளிட்ட அதிகாரிகள், நேற்று உயர்கல்வித்துறை செயலர்ஹேமந்த் குமார் சின்காவுடன் ஆலோசனைநடத்தினர்.
குமார்ஜெயந்த் சென்னை திரும்பியதும், புதியகலந்தாய்வு தேதி மற்றும் புதியகலந்தாய்வு அட்டவணை ஆகியவை குறித்தஅறிவிப்பு இன்று வெளியாகலாம் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment