Thursday, 10 July 2014

கால்நடை மருத்துவ படிப்பில் சேர கலந்தாய்வு 30-ந்தேதி தொடங்குகிறது


சென்னை, ஜூலை.11-கால்நடை மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் 30-ந்தேதி தொடங்குகிறது.கால்நடை மருத்துவ படிப்புதமிழ்நாடு
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் 2014-2015-ம் ஆண்டுக்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு, பி.டெக்.உணவு தொழில்நுட்பம், பி.டெக். கோழியின உற்பத்தி தொழில்நுட்பம் ஆகிய பட்டப்படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பம் கடந்த மே மாதம் 12-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை வழங்கப்பட்டது. 19 ஆயிரத்து 748 விண்ணப்பங்களை மாணவ-மாணவிகள் வாங்கிச் சென்றனர். மாணவர்கள் அனுப்பியதில் 18 ஆயிரத்து 78 விண்ணப்ப படிவங்கள் தகுதியானவையாக அறிவிக்கப்பட்டன.இந்த விண்ணப்பங்களில் உள்ள தகவல் அடிப்படையில் தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. சிறப்பு பிரிவினருக்கான தரவரிசை பட்டியல் பின்னர் வெளியிடப்பட உள்ளது. 30-ந்தேதி கலந்தாய்வு தொடக்கம்கலந்தாய்வு சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரியில் நடைபெறுகிறது. பி.வி.எஸ்.சி. மற்றும் ஏ.எச். படிப்பில் சேர 30-ந்தேதி கலந்தாய்வு நடத்தப்படும். அன்று சிறப்பு பிரிவினர் மற்றும் தொழில்கல்வி மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.31-ந்தேதி பி.வி.எஸ்.சி. மற்றும் ஏ.எச்.படிப்புக்கு பொது கலந்தாய்வு (கலையியல் படிப்பு) நடத்தப்பட உள்ளது. ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி பி.டெக். உணவு தொழில்நுட்பம், பி.டெக். கோழியின உற்பத்தி தொழில் நுட்பம் ஆகிய படிப்புக்கு சிறப்பு பிரிவினர் மற்றும் கலையியல் படிப்பு படித்தவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. தகுதியானவர்களுக்கு கலந்தாய்வுக்கான அழைப்புக்கடிதம் 3-வது வாரத்தில் அனுப்பப்படும். இந்த தகவலை மாணவர் சேர்க்கை குழு தலைவர் டாக்டர் எம்.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment