Thursday, 10 July 2014

மத்திய பட்ஜெட்டில் ரூ.22 ஆயிரத்து 200 கோடிக்கு வரிச்சலுகைகளை நிதிமந்திரி அருண் ஜெட்லி அறிவித்தார். ரூ.7,525 கோடிக்கு புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. - DINATHANTHI


புதுடெல்லி, ஜூலை.11-பாராளுமன்ற தேர்தல் காரணமாக முந்தைய மன்மோகன்சிங் அரசு கடந்த பிப்ரவரி மாதம் 17-ந் தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது.மத்தியில் ஆட்சி மாற்றம்நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில்
பாரதீய ஜனதா கூட்டணி அபார வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாரதீய ஜனதா கூட்டணி அரசு கடந்த மே மாதம் 26-ந் தேதி பதவி ஏற்றது. ‘2014-15-ம் நிதி ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி, 10-ந் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வார்’ என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்து, நரேந்திரமோடி அரசின் முதல் பட்ஜெட் என்ற வகையில் இது நாடு முழுவதும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.பட்ஜெட்டில்வரிச்சலுகை தாராளம்இந்த நிலையில், பாராளுமன்றத்தில் 2013-14-ம் நிதி ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று தாக்கல் செய்தார். நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக பொருளாதார ஆய்வறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தாலும், பட்ஜெட்டில் அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பையும் ஈடு செய்கிற வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட அவர் தவறவில்லை.அவர் தனது பட்ஜெட் உரையில், “இந்தியாவை துடிப்பான இந்தியாவாக மாற்றுவதற்கான ஒரு வாய்ப்பை கூட தவற விடமாட்டோம்” என சூளுரைத்தார். பண வீக் கத்தைக் கட்டுப்படுத்த முதல் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அவர் கூறினார். மத்திய பட்ஜெட்டில் வரிவீதங்களை (மறைமுக வரிகள்) மாற்றி அமைத்ததின் மூலம் ரூ.7,525 கோடி வரி வருவாய் கிடைக்கும். அதே நேரத்தில் ரூ.22 ஆயிரத்து 200 கோடிக்கு வரிச்சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.8 சதவீத வளர்ச்சிக்கு இலக்குஅருண் ஜெட்லியின் பட்ஜெட் உரையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் இவை:-* அடுத்த 3-4 ஆண்டுகளில் 7 முதல் 8 சதவீத வளர்ச்சி சாதனையை அடைவதே எங்கள் விருப்பம். வறுமை ஒழிப்பு திட்டங்கள். மக்களை நல்ல முறையில் சென்றடைய செய்வோம். * கறுப்பு பணம் மிகப்பெரிய பிரச்சினை. இதில் முழுமையாக கவனம் செலுத்துவோம்.* பொருளாதார செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் துணிச்சலான நடவடிக்கைகளை எடுப்போம். மானிய திட்டங்கள் மறு ஆய்வு* ஒட்டுமொத்த மானிய திட்டங்களையும் மறு ஆய்வு செய்வோம். குறிப்பாக, உணவு, எண்ணெய் மானியங்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அதே நேரத்தில் இதில் சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் நலன் பாதுகாக்கப்படும்.* வரிச்சட்டங்களில் திருத்தம் தேவைப்பட்டால் தொழில் துறையுடன் கலந்து விவாதிக்க உயர் மட்டக்குழு ஒன்று அமைக்கப்படும். உற்பத்தித்துறையினர் தங்கள் தயாரிப்புகளை சில்லறை வணிகம், மின்னணு வணிகம் வாயிலாக விற்பனை செய்ய அனுமதிக்கப்படும்.அனைவருக்கும் வீடு* இன்சூரன்சு என்னும் காப்பீட்டுத்துறையில், 49 சதவீத அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும்.* 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு வழங்கப்படும்.* பருத்திக்கு சேவை வரியிலிருந்து விலக்கு.வருமான வரி விலக்கு சலுகை* தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2½ லட்சமாக உயர்த்தப்படுகிறது.* சேமிப்புக்கான வரிச்சலுகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1½ லட்சம் ஆகிறது.* வீட்டுக்கடனுக்கான வட்டி வரிச்சலுகை ரூ.1½ லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படுகிறது..விலை குறையும் பொருட்கள்பட்ஜெட் வரிச்சலுகையை தொடர்ந்து விலை குறையும் பொருட்கள் வருமாறு:-* கேத்தோடு கதிர் டெலிவிஷன் (சாதாரண டெலிவிஷன் பெட்டிகள்)* எல்.இ.டி. மற்றும் எல்.சி.டி. டெலிவிஷன்கள் (19 அங்குலத்துக்கு உட்பட்டவை)* ஜோடி ரூ.500 முதல் ரூ.1000 வரையிலான காலணிகள்* சோப்புகள்* டெஸ்க் டாப் கம்ப்யூட்டர், லேப்-டாப், டேப்லட் கம்ப்யூட்டர்* தண்ணீர் சுத்திகரிப்பான்கள்* எல்.இ.டி. விளக்குகள்* ஆபரணக் கற்கள்* விளையாட்டு வீரர்கள் அணிகிற கையுறைகள்* வர்த்தக முத்திரை கொண்ட பெட்ரோல்* தீப்பெட்டி* காப்பீட்டு பாலிசிகள்* எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி. மாத்திரைகள்* டி.டி.டி. பூச்சிக்கொல்லிகள்* எவர்சில்வர் பாத்திரங்கள்விலை உயரும் பொருட்கள்* சிகரெட்* காற்றடைக்கப்பட்ட மென்பானங்கள்* பான் மசாலா* குட்கா, மெல்லும் புகையிலை* ஜர்தா வாசனை புகையிலை* ரேடியோ டாக்சி என்னும் வாடகைக்கார்கள்* இறக்குமதி செய்யப்பட்ட மின்னணு பொருட்கள்* கையில் எடுத்துச்செல்லத்தக்க எக்ஸ்ரே எந்திரம்* பாதி வெட்டிய, உடைந்த வைரங்கள்.

0 comments:

Post a Comment