சென்னை,ஜூலை.17-240 எம்.பி.பி.எஸ்.படிப்பில் சேரவும், 950 பி.டி.எஸ். இடங்களில் சேரவும் 2-வது கட்ட மருத்துவ கலந்தாய்வு 21-ந்தேதி தொடங்கி 25-ந் தேதி முடிவடைகிறது. எம்.பி.பி.எஸ்.இடங்கள்தமிழ்நாட்டில் 19 அரசு
மருத்துவக்கல்லூரிகளும், ஒரு அரசு பல் மருத்துவக்கல்லூரியும் உள்ளன. அதுபோல சுயநிதி மருத்துவக்கல்லூரிகளும், சுயநிதி பல்மருத்துவக்கல்லூரிகளும் உள்ளன. எம்.பி.பி.எஸ்.சேர முதல் கட்டமாக மருத்துவ கலந்தாய்வு கடந்த மாதம் 18-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி முடிவடைந்தது. அந்த கலந்தாய்வில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்து 380 இடங்களும் நிரம்பின. கடந்த ஆண்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு 100 இடங்கள், திருச்சி அரசு மருத்துவக்கல்லூரிக்கு கூடுதலாக 50 இடங்கள், சேலம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு கூடுதலாக 25 இடங்கள் சேர்த்து 175 இடங்கள் புதிதாக வந்தன. அந்த இடங்களுக்கு முதல் கட்ட கலந்தாய்வில் அனுமதி கிடைக்கவில்லை. 21-ந்தேதி தொடங்குகிறதுஆனால் இப்போது அந்த அனுமதி இந்திய மருத்துவ கவுன்சிலில் இருந்து கிடைத்துள்ளது. மேலும் கே.கே.நகரில் உள்ள ஈ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரியில் இருந்து 65 இடங்கள் கிடைத்துள்ளது. மொத்ததில் 240 இடங்கள் உள்ளன.இந்த இடங்களுக்கு 2-வது கட்ட மருத்துவ கலந்தாய்வு 21-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி முடிவடைகிறது. மேலும் சுயநிதி பல்மருத்துவக்கல்லூரிகளில் இருந்தும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 950 வந்துள்ளன. அந்த இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. கலந்தாய்வுக்கான ஏற்பாடுகளை டாக்டர் கீதா லட்சுமி, மருத்துவ கல்வி தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் சுகுமார் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
0 comments:
Post a Comment