மருத்துவ படிப்புமருத்துவ படிப்புக்கு ஆகும் செலவு அதிகம் ஆகும். ஆனால் மருத்துவ படிப்பு சேவை படிப்பு என்றும், மக்களுக்கு சேவை செய்ய உள்ள படிப்பு என்றும், அது புனிதமானது என்றும் கூறப்படுகிறது. ஆனால், அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ்.
படிக்க இடம் கிடைத்தும் அந்த படிப்பை படிக்காமல் அதை உதறித்தள்ளிவிட்டு அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் என்ஜினீயரிங் முதல் நாள் கலந்தாய்வில் மட்டும் 11 பேர் என்ஜினீயரிங் சேர்ந்தனர். நேற்று 2-வது நாளாக நடைபெற்ற கலந்தாய்வில் 10 பேர் மருத்துவ படிப்பை உதறித்தள்ளிவிட்டு என்ஜினீயரிங் சேர்ந்தனர்.2 நாட்கள் நடந்த கலந்தாய்வில் மட்டும் 21 பேர் மருத்துவ படிப்பு கிடைத்தும் அந்த படிப்பை உதறித்தள்ளிவிட்டு என்ஜினீயரிங் படிப்பை தேர்ந்து எடுத்தனர். காரணம் என்ன?மருத்துவ படிப்பை உதறித்தள்ளிவிட்டு என்ஜினீயரிங் படிப்பை தேர்ந்து எடுத்த சில மாணவர்கள் கூறியதாவது:-எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்து படித்தால் மட்டும் போதாது. மருத்துவ பட்டமேற்படிப்பு படித்தால்தான் மருத்துவத்துறையில் நிலைத்து நிற்க முடியும். மருத்துவ பட்டமேற்படிப்பு படிக்க இடங்கள் மிகக்குறைவு. எனவே அந்த இடங்கள் கிடைப்பது. பெற்றோர்கள் டாக்டர்களாக இருந்தால் மட்டுமல்ல. அவர்கள் கிளினிக் வைத்திருந்தால் மகன்கள் படிக்கலாம்.மேலும் மருத்துவம் படிக்க ஆர்வம் இருந்தால் தான் அந்த படிப்பை படிக்க முடியும்.இவ்வாறு அந்த மாணவர்கள் தெரிவித்தனர்.ஒரு லட்சம் பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள் என்ஜினீயரிங் படிப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுப்பதில் மாணவ-மாணவிகளுக்கு கடந்த ஆண்டை விட மோகம் இருந்தாலும் எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் பிரிவைதான் அதிக மாணவர்கள் எடுத்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக மெக்கானிக்கல் பிரிவை தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள். கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவிகளில் ஒரு லட்சம் பேர் முதல் தலைமுறை பட்டதாரிகளாக போகிறவர்கள்.
0 comments:
Post a Comment