புதுடெல்லி, ஜூலை.9-குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்ற 83 பேரின் நியமனம் செல்லாது என்ற தீர்ப்பில், மாற்றம் கோரி பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் டி.என்.பி.எஸ்.சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேர்வில் முறைகேடு துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு, கடந்த 2000-01-ம் ஆண்டில் குரூப்-1 தேர்வை டி.என்.பி.எஸ்.சி. நடத்தியது. இதில் தேர்ச்சி பெற்ற 83 பேர் வெவ்வேறு அரசு உயர்பதவிகளில் அமர்த்தப்பட்டனர். ஆனால் இந்த தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி நடராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த தேர்வில் 83 பேரும் முறைகேடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக கூறியது.சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடிஎனவே அவர்கள் தேர்ச்சி பெற்றது செல்லாது என்று கூறிய நீதிபதிகள், அவர்கள் அனைவரும் உடனடியாக தாங்கள் வகித்து வரும் அரசு பதவிகளில் இருந்து விலக வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினர்.இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் டி.என்.பி.எஸ்.சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் இந்த மனுவை கடந்த மாதம் 30-ந் தேதி தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு, சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்தது. புதிய மனுஇந்த தீர்ப்பில் மாற்றம் கோரி பாதிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தேர்வை நடத்திய டி.என்.பி.எஸ்.சி சார்பாக சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் 2000-01-ம் ஆண்டு நடந்த தேர்வில் முறைகேடுகள் நடந்தனவா? என்பது குறித்து ஆய்வு செய்ய, ஐகோர்ட்டு நியமித்த நிபுணர் குழு முறையான ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை என்றும், அந்த குழு அளித்த தவறான அறிக்கையின் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கியிருப்பதாகவும் சுட்டி காட்டப்பட்டுள்ளது. எனவே, புதிய நிபுணர் குழு மூலம் மீண்டும் விசாரணை செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாத்தியமற்றதுமேலும், தற்போது தேர்வாகியுள்ள 83 பேரும் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உயர் அதிகாரிகளாக பணி புரிந்து வருகிறார்கள். அவர்களது வயது காரணமாக மீண்டும் ஒருமுறை டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது சாத்தியமற்றது. எனவே, உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் மாற்றங்கள் தேவை என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் அனில் ஆர்.தவே மற்றும் விக்ரம்ஜித் சென் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை உடனே விசாரணைக்கு எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் டி.என்.பி.எஸ்.சி சார்பில் முறையிடப்பட்டது. ஆனால் மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை 17-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
0 comments:
Post a Comment