புதுடில்லி : பாஸ்போர்ட் நடவடிக்கைகள் தொடர்பாக, மத்திய அரசு சார்பில் ஒரு அறிவிப்பு வெளியானதாக, நேற்று முன்தினம் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்ததாவது: திருமணமாகாத பெண்கள், தங்கள் குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும்போது, அந்த குழந்தை, தனக்கு யார் மூலம் பிறந்தது என்ற விவரத்தை குறிப்பிட வேண்டும். வளர்ப்பு தந்தையின் பெயரை குறிப்பிடக் கூடாது. இல்லையெனில், கற்பழிக்கப்பட்டதால் குழந்தை பிறந்தது என்றோ, முறைகேடான பழக்கவழக்கத்தால் குழந்தை பிறந்தது என்றோ குறிப்பிட வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, மத்திய அரசு இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மத்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் செய்யது அக்பருதீன் கூறியதாவது: இந்த அறிவிப்பு, மத்திய அரசின் சார்பில் வெளியிடப்பட்டதல்ல. பாலின ரீதியான பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையிலான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஒருபோதும் ஈடுபடாது. திருமணமாகாத பெண்கள், தங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழையும், நீதித் துறை மாஜிஸ்திரேட் முன் அளிக்கப்பட்ட உறுதிமொழிக்கான அபிடவிட்டையும் விண்ணப்பத்துடன் தாக்கல் செய்தால் போதும். கடத்தல் போன்ற பிரச்னைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக இந்த அபிடவிட் தேவைப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

0 comments:
Post a Comment