புவி வெப்பமயமாகுவதை தடுக்காவிடில், 90 ஆண்டுகளில் கடல் நகரங்கள், தீவுகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும். நிலங்கள் அனைத்தும் பயிரிடத்தக்க தன்மையினை இழந்துவிடும் என தமிழகஅரசு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் முனைவர் மூ.ராஜாராம் தெரிவித்தார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், பல்கலைக்கழக தமிழியல்துறை இணைந்து நடத்திய சங்க இலக்கியங்களில் சுற்றுச்சூழல் என்ற தேசியக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கில் தமிழகஅரசு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் முனைவர் மூ.ராஜாராம் தலைமை வகித்துப் பேசினார். அவர் பேசியது:
சங்க இலக்கியங்கள் பழம் தமிழர்கள் நமக்கு வழங்கிய கொடையாகும். அகநாறு, புறநாரு, தொல்காப்பியம் உள்ளிட்ட பல்வேறு இலக்கியங்களில் சுற்றுச்சூழல் கருத்துகள் இடம் பெற்றுள்ளன. சுற்றுச்சூழல் மேம்பாடு 20-ம் நூற்றாண்டு வந்தததல்ல. கி.மு 2-ம் நூற்றாண்டிலேயே வந்துள்ளது. வாடிய பயிரை கண்டு வாடிய வள்ளலார், முல்லைக்கு தேர் கொடுத்த பாரி, மயிலுக்கு துகில் தந்த பேகன், நீரின்றி அமையாது உலகு என உணர்த்திய வள்ளுவர் மற்றும் ஒளவையார் உள்ளிட்டோர் சுற்றுச்சூழல் ஆர்வலர்களாக திகழ்ந்த்துள்ளனர். நிலம், நீர் நெருப்பு, காற்று, வானம் ஆகிய ஐம்பூதங்களும் ஒன்றை, ஒன்று சார்ந்துள்ளன. இதை ஐம்பூதம் கலந்த மயக்கம் என தொல்காப்பியர் கூறுகிறார். மனிதர்கள் இயற்கை வலத்தை அழித்து வருவதால் பூமி 2 டிகிரி வெப்பம் அதிகரித்துள்ளது. இதனால் கடல்நகரங்கள், தீவுகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும்.
மதுராவில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான் தாஜ்மகால், அருகில் உள்ள எண்ணை சுத்திகரிப்பு நிலையத்தால் தனது நிறத்தை இழந்து வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புஸ்கர் ஏரி. குஜராஜ் ஜாம்நகர் ஏரி, பெங்களூர் ஏடியூர் ஏரி ஆகியவற்றின் நீர் குடிக்க தகுதியற்ற நீராக மாறியுள்ளது. யமுனா, கங்கை, காவேரி ஆறுகளும் தனது நிலையை மாற்றியுள்ளது. எண்ணெய் கசிவுகளின் பசையினால் கடல் பறவைகள் பறக்கும் தன்மையை இழந்து இனப்பெருக்கம் குறைந்து வருகிறது.
1952-ம் ஜப்பானில் மினாமிட்டா என்ற கொடிய நோய் கண்டறியப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் தொழிற்சாலை கழிவுகளில்லிருந்து கடலுக்கு வெளியேற்றப்பட்ட பாதரசத்தை உண்ட மீன்கள், அதனை உண்ட மனிதர்கள் இந்த நோய்க்கு ஆளாகியுள்ளனர். தற்கால கணக்கெடுப்பின்படி சுமார் 400 வகை ஊர்வன இனங்களும், 3 ஆயிரம் வகை மீனினங்களும், 3 ஆயிரம் வகை பறவைகளும், 20 ஆயிரம் வகை பூக்கும் தாவரங்களும், 4100 வகை பாலுாட்டிகளும் இந்தியாவில் காணப்படுகின்றன. இவைகளை நாம் பாதுகாக்க வேண்டும். அனைத்தையும் அரசே செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே மக்களே நீர், நிலங்கள், வனங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என மூ.ராஜாராம் தெரிவித்தார்.
அண்ணாமலையில் திருக்குறள் இருக்கை அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு!
விழாவில் பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஆய்வுக்கோவை தொகுப்பு நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியது: பழங்கால சங்க இலக்கியங்களில் சுற்றுச்சூழல் பற்றி கூறியதை இன்று நாம் இழந்துவிட்டோம். கோயில் குளங்களை மழைநீர் சேகரிப்பு திட்டங்களாக பண்டைய காலத்தில் அமைத்திருப்பது அதற்கு சிறந்த உதாரணமாகும். இதனை பராமரிக்காததால் நூறு அடியில் கிடைத்த நிலத்தடி நீர், தற்போது ஆயிரம் அடிக்கு கீழ் சென்றுவிட்டது.
அண்ணாமலைப் பல்கலைக்கு நவ.11-ம் தேதி முதல் வெவ்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த முன்னாள் துணைவேந்தர்கள், மூத்த பேராசிரியர்கள் 13 பேர் கொண்ட மூன்று நாக் கமிட்டி ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. பல்கலைக்கழகத்திற்கு கிரேடு வழங்கப்படவுள்ளது. ஏ கிரேடு கிடைத்தால் கூடுதல் நிதிகள், கூடுதல் திட்டங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே நமது பல்கலைக்கழகம் பல்வேறு சிறப்பு வாய்ந்தது. மத்தியஅரசின் செம்மொழி தமிழாய்வு நிறுவனம், அண்ணாமலைப் பல்கலையில் திருக்குறள் இருக்கை (Thirukkural Chair) அமைக்க ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளது என ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தார்.
விழாவில் முன்னதாக தமிழ் வளர்ச்சி்த்துறை இயக்குநர் முனைவர் கா.மு.சேகர் வரவேற்றார். சிதம்பரம் உதவிஆட்சியர் எம்.அரவிந்த் வாழ்த்துரையாற்றினார். மொழியியல் உயராய்வு மைய முன்னாள் இயக்குநர் முனைவர் செ.வை.சண்முகம், இந்திய மொழிப்புல முதல்வர் வி.திருவள்ளுவன், தமிழியல் துறைத் தலைவர் ப.ஞானம், பேராசிரியர் அரங்க.பாரி உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துரையாற்றினர். கடலூர் மாவட்ட மக்கள்-தொடர்பு அலுவலர் கு.தமிழ்செல்வராஜன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். மதுரை உலகத் தமிழ்ச் சங்க தனிஅலுவலர் (பொ) முனைவர் க.பசும்பொன் நன்றி கூறினார்.

0 comments:
Post a Comment