தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க சிறப்பு முகாம் இன்று நடைபெற இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.
இதுகுறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:–
இன்று சிறப்பு முகாம் தமிழ்நாட்டில் தற்போது உள்ள வாக்காளர்கள், வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டும் ஓட்டு போடமுடியாது. அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலும் இருக்கவேண்டும். எனவே, வாக்காளர்கள் தங்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? என்பதை நேரில் பார்த்து உறுதி செய்யவேண்டும். எத்தனையோ காரியங்களுக்கு நேரத்தை செலவழிக்கிறீர்கள். இதற்கு செலவழிக்கக்கூடாதா? அதிக பட்சம் 30 நிமிடம் செலவழிக்கவேண்டி இருக்கும். வாக்களிப்பது ஜனநாயக கடமை.
எனவே வாக்குரிமை பெற்ற ஒவ்வொருவரும் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்றவேண்டும். வருகிற 2015–ம் வருடம் ஜனவரி மாதம் 1–ந்தேதி அன்று 18 வயது பூர்த்தி ஆகக்கூடிய ஆண்கள், பெண்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்ப்பதற்காக சிறப்பு முகாம் தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (இன்று) நடைபெறுகிறது.
தவறுஇருந்தால் திருத்த வாய்ப்பு இன்று நடைபெறும் முகாம் ஏற்கனவே வாக்குச்சாவடி அமைக்கப்பட்ட இடங்களில் நடைபெறும். பெரும்பாலும் பள்ளிக்கூடங்களில் நடைபெறும். இந்த முகாமில் பெயர்களை சேர்க்கலாம். பெயர்கள் சரியான முகவரியில் இல்லை என்றால் அந்த முகவரியை சரி செய்ய விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையில் பெயர்கள், பிறந்தநாள் உள்பட எதிலும் தவறு இருந்தால் இந்த முகாமில் அதற்கு உரிய படிவம் வாங்கி அதை பூர்த்தி செய்து கொடுக்கலாம்.
நானும் சக அதிகாரிகளும் திடீர் என்று சிறப்பு முகாம்களில் ஆய்வு செய்வோம். புதிதாக விண்ணப்பிப்போர் ஆன்–லைனிலும் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் அட்டையில் தவறு இருந்தாலும் ஆன்–லைனில் சரி செய்யலாம். ஆன்–லைனில் விண்ணப்பிக்க புதிய தொழில்நுட்பம் கொண்டுவர ஆலோசிக்கப்பட்டு வருகிறது. நிதியை பொறுத்தவரை தேர்தல் ஆணையத்திற்கு குறைவில்லை.
கலெக்டர்களுடன் பேச்சு ஞாயிற்றுக்கிழமை நடக்கும் சிறப்பு முகாம் தொடர்பாக, எனது அலுவலகத்தில் இருந்தபடியே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொளி காட்சி (வீடியோ கான்பரன்சிங்) மூலம் பேசினேன். இந்த முகாம் சிறப்பாக நடக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்ய ஆலோசனை கூறி உள்ளேன். இந்த சிறப்பு முகாமில் ஏராளமான விண்ணப்பங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 5–ந்தேதி புதிய வாக்காளர் பட்டியல் ஜனவரி மாதம் 5–ந்தேதி வெளியிடப்படும். தேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25–ந்தேதி வருகிறது. அன்று புதிய வாக்காளர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்படும். சட்டப்படி, நியாயமான முறையில் வாக்காளர்களுக்கு எனது கடமையை செய்வேன்.

0 comments:
Post a Comment