Wednesday, 5 November 2014

அலுவலக வேலை நேரத்தை இணையத்தில் குறிப்பிட உத்தரவு

புதுடில்லி : 'மத்திய அரசின் அனைத்து துறைகளும், தங்களின் அலுவலக வேலை நேரத்தை இணையதளங்களில் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசின் பணியாளர் நலம் மற்றும் பயிற்சி துறையான, டி.ஓ.பி.டி., உத்தரவிட்டுள்ளது.



இது தொடர்பாக, டி.ஓ.பி.டி., சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளும், தங்கள் அலுவலகங்களின் வேலை நேரம், விடுமுறை தினம், பொதுமக்களின் குறைகளை கேட்கும் நேரம் ஆகியவற்றை, தங்களின் இணையதளங்களில் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். அலுவலகங்கள் செயல்படும் நேரத்தை பொதுமக்கள் எளிதாக தெரிந்து கொள்வதற்கு வசதியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment