Friday, 14 November 2014

பிருத்வி - 2 ஏவுகணை மீண்டும் வெற்றிகரம்

பாலாசோர்: அணுகுண்டுகளை சுமந்து, தரையிலிருந்து தரையில், 350 கி.மீ., சென்று தாக்கும், முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, பிருத்வி - 2
ஏவுகணை, நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. நகரும் வாகனம் ஒன்றிலிருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை, குறிப்பிட்ட இலக்கை குறி தவறாமல் தாக்கி அழித்தது. ஒடிசாவின் சந்திப்பூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை தளத்திலிருந்து, இந்த ஏவுகணை சோதிக்கப்பட்டது. ஏற்கனவே பல முறை வெற்றிகரமாக நடைபெற்றது போல, இந்த முறையும் சோதனை வெற்றி பெற்றது. இந்த ரக ஏவுகணைகள், 11 ஆண்டுகளுக்கு முன்பே தயாரிக்கப்பட்டு, இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து ஒன்றை எடுத்து நேற்று ஏவி, அதன் செயல்திறன், ஆற்றல் சோதனை செய்யப்பட்டது. அனைத்தும் துல்லியமாகவும், சோதனை வெற்றிகரமாகவும் இருந்ததாக, ஏவுதள அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment