பெயிலான மற்றும் தனித்தேர்வர்கள் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற பிளஸ்–2 தேர்வை எழுதினார்கள். அந்ததேர்வு முடிவு ஏற்கனவே வெளியிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து, மறுமதிப்பீடு,மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களுக்கான விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டது. மறுகூட்டல் கேட்டுவிண்ணப்பித்தவர்களுக்கு மறுகூட்டலும் செய்யப்பட்டது. மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்களின் பதிவெண்கள் பட்டியல் www.students.hse14rtv.in என்ற இணைய தளத்தில், இன்று ( வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது.
இப்பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண்களில் மாற்றம் உள்ளவர்கள், வருகிற 17–ந்தேதி காலை 11 மணி முதல் சென்னை டி.பி.ஐ.வளாகத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்குனர் அலுவலகத்தில், பழைய மதிப்பெண் சான்றிதழை ஒப்படைத்துவிட்டு, புதிய மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த தகவலை அரசு தேர்வு இயக்குனர் கு.தேவராஜன், இணை இயக்குனர் ராஜராஜேஸ்வரி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

0 comments:
Post a Comment