பணி நியமன ஆணை பெற்றும் பணியில் சேராத ஆசிரியர்களின் பணிநியமனத்தை ரத்து செய்ய கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது
இதுதொடர்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர், அனைத்துமாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ளசுற்றறிக்கையில் (ந.க.எண்: 025400, நாள் 15-10-14) கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தொடக்க கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடைநிலை, பட்டதாரிஆசிரியர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிட ஒதுக்கீடும்,சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களால் பணிநியமன ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பணி நியமன ஆணை பெற்ற பல இடைநிலைஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் இதுவரை பணியில்சேரவில்லை. அப்படி பணியில் சேராதவர்களுக்கு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் காரணம் கேட்டு அறிவிக்கை அனுப்ப வேண்டும்.
அதன்பின்பும் 27-10-14-க்குள் பணியில் சேராவிட்டால் அவர்களின் பணிநியமன ஆணையை ரத்து செய்ய வேண்டும் என அந்தசுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment