Thursday, 2 October 2014

தேர்ச்சி மட்டுமே நோக்கமல்ல; ஆசிரியர்களுக்கு அறிவுரை

கற்பித்தலில், எளிய முறையை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும்; தேர்ச்சி
மட்டுமே நோக்கமாக இருக்கக்கூடாது,' என, பட்டதாரி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வாகி, புதிதாக நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம், திருப்பூர் அவிநாசிபாளையம், ஜெய்ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் நடந்தது.முதன்மை கல்வி அலுவலர் முருகன் பேசுகையில்,""கற்பித்தலில், எளிய முறையை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும்; படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு, புரியும் விதமாக கற்பித்தல் இருக்க வேண்டும். ""தேர்ச்சியை மட்டுமே நோக்கமாக கொள்ளாமல், மாணவனின் கற்பித்தலுக்கு உதவும் வகையில், ஆசிரியர்களின் நடவடிக்கை அமைய வேண்டும்,'' என்றார்.தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்கள் குறித்து மூத்த ஆசிரியர்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி மைய விரிவுரையாளர்கள் மற்றும் எஸ்.எஸ்.ஏ., ஆசிரிய பயிற்றுனர்கள் பயிற்சி அளித்தனர்.கல்வி கற்பிக்கும் வழிமுறை, பள்ளி நிர்வாகம், மாணவர்களை அணுகும் விதம், கல்வி நல திட்டங்கள் குறித்து இப்பயிற்சியில் விளக்கப்பட்டது. 400 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

0 comments:

Post a Comment