Monday, 13 October 2014

ஐஐடி, என்ஐடி ஆகிய முன்னணி அரசு உயர்கல்வி நிறுவனங்களில் மாணவிகள் அதிக எண்ணிக் கையில் சேரும் வகையில் “உதான்” என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.

ஐஐடி, என்ஐடி ஆகிய முன்னணி அரசு உயர்கல்வி நிறுவனங்களில் மாணவிகள் அதிக எண்ணிக் கையில் சேரும் வகையில் “உதான்” என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஆயிரம் மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்
. நாட்டின் முன்னணி உயர் கல்வி நிறுவனங்களாக கருதப் படும் ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங் களில் மாணவிகள் குறைந்த எண்ணிக்கை யில்தான் சேருகிறார்கள். இந்த கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு ஜெஇஇ எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஜெஇஇ நுழைவுத் தேர்வு மற்றும் அதற்குத் தயாராவது குறித்த விழிப் புணர்வு மாணவிகள் மத்தியில் குறைவாகவே உள்ளது. எனவே ஐஐடி, என்ஐடி போன்ற முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் மாணவிகள் அதிகளவில் சேரும் வகையில் “உதான்” என்ற சிறப்பு கல்வி திட்டத்தைச் செயல்படுத்த மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) முடிவுசெய்துள்ளது. இந்த திட்டத்தின்படி, பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளை முன்கூட்டியே தேர்வு செய்து அவர் களுக்கு ஆன்லைன் வழியாகவும், நேரடி வகுப்பு மூலமாகவும் ஜெஇஇ நுழைவுத் தேர்வுக்குப் பயிற்சி அளிக்கப்படும். 

மேலும், பயிற்சி புத்தகங்களும், கணினியில் பார்த்து படிக்கும் வகையில் டேப்லெட்டும் இலவச மாக வழங்கப்படும். தேர்வு தொடர்பான சந்தேகங்களுக்கு ஹெல்ப்லைன் எண்ணில் தொடர்பு கொண்டும் விளக்கம் பெறலாம். நுழைவுத் தேர்வுக்கு விண்ணப் பிப்பது தொடங்கி தேர்வு குறித்து மாணவிகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் தொடர்ச்சியாக ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த திட்டத்தின்கீழ் ஆண்டு தோறும் 1000 மாணவிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அவர்களில் 50 சதவீதம் பேர் எஸ்சி, எஸ்டி மற்றும் இதர பிற்படுத் தப்பட்ட வகுப்பினராக (ஓபிசி) இருப்பார்கள். பிளஸ்-1 அல்லது பிளஸ்-2-வில் இயற்பியல், வேதியியல், கணித பாடங்களை படிப்பவர்களாக இருக்க வேண்டும். 11-ம் வகுப்பு படிப்பவர்களாக இருந்தால் 10-ம் வகுப்பில் குறைந்த பட்சம் 70 சதவீத மதிப்பெண்ணும், கணிதம், அறிவியல் பாடங்களில் 80 சதவீத மதிப்பெண்ணும் தேவை. 12-ம் வகுப்பு மாணவி களாக இருப்பின், 10-ம் வகுப்பில் மேற்கண்ட மதிப்பெண் தகுதியுடன் 11-ம் வகுப்பில் 75 சதவீத மதிப்பெண்ணும் அவசியம். 
மதிப்பெண் அடிப் படையில் தகுதியானோர் தேர்வு செய்யப்படுவர். பயிற்சியில் ஏழை மாணவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

இந்த திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்று ஐஐடி, என்ஐடி கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவிகள் படிப்பை தொடரவும் நிதியுதவி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவிகள் மட்டுமின்றி மாநில பாடத் திட்டத்தில் படிப்போரும் இந்த சிறப்பு பயிற்சியில் சேரலாம். தகுதியுள்ள மாணவிகள் அக்டோபர் 27-ம் தேதிக்குள் சிபிஎஸ்இ இணையதளத்தில் (www.cbse.nic.in) ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் மட்டுமின்றி நேரடியாக விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கவும் ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட நகரங்க ளில் ஒருங்கி ணைப்பாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கோவை சாய்பாபா காலனி அங்கப்பா கல்வி அறக்கட்டளை முதுநிலை மேல்நிலைப் பள்ளி முதல்வர், மதுரை நரிமேடு கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் ஆகியோரை ஒருங்கிணைப்பாளர் களாக சிபிஎஸ்இ நியமித்துள்ளது. “உதான்” திட்டத்தில் பயிற்சி பெற விரும்பும் மாணவிகள் மேற்கண்ட ஒருங்கிணைப்பாளர் களிடம் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்திசெய்து அவர்களி டமே சமர்ப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்று ஐஐடி, என்ஐடி கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவிகள் படிப்பை தொடரவும் நிதியுதவி செய்யப்படும். 

0 comments:

Post a Comment