Thursday, 16 October 2014

அரசு பள்ளிகளில் இரவுக்காவலர் பணியிடம் நிரப்ப அரசு உத்தரவு!!

 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலியாக உள்ள இரவுக்காவலர் மற்றும் துப்புரவாளர் பணியிடங்களை, உடனடியாக நிரப்ப பள்ளி கல்வித்துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. 

          மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வித்துறை வழங்கியுள்ள உத்தரவில்,' பள்ளிகளில் இரவுக்காவலர் மற்றும் துப்புரவாளர் பணியிடங்களுக்கு, கலந்தாய்வு மூலம் நிரப்பட்ட பணியிடங்கள் போக மீதமுள்ள, இரவு காவலர் மற்றும் துப்புரவாளர் பணியிடங்களுக்கு, தகுதியானோர் விபரங்களை, வேலைவாய்ப்பகம் மூலம் பெற்று, கல்வித்துறை அதிகாரிகளை கொண்ட குழு, நேர்காணல் நடத்தி, நவம்பர் 15ம் தேதிக்குள், இப்பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment