பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 6ம் தேதி நடக்க இருக்கும் பிளஸ் 2 தேர்வு 10ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்காக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் துணைத் தேர்வு நடத்துவது வழக்கம்.
அந்த தேர்வு கடந்த மாதம் 25ம் தேதி முதல் நடக்கிறது. இந்நிலையில், வரும் 6ம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அரசு பொது விடுமுறையாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் 6ம் தேதி நடப்பதாக இருந்த வேதியியல், கணக்குப் பதிவியல் பாடத் தேர்வுகள் 10ம் தேதி அன்று நடக்கும். மற்ற பாடங்களுக்கான தேர்வுகள் அட்டவணையில் அறிவித்த தேதிகளில் நடக்கும்.
0 comments:
Post a Comment