புதுடெல்லி, ஜூலை.9-முந்தைய மன்மோகன் சிங் அரசு, 2014-15 நிதி ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டை முழு அளவில் தாக்கல் செய்யவில்லை.மத்தியில் புதிய அரசுபாராளுமன்ற தேர்தலையொட்டி, இந்த நிதி ஆண்டின் முதல் 4
மாதங்களுக்கான இடைக்கால ரெயில்வே பட்ஜெட்டை அப்போதைய ரெயில்வே மந்திரி மல்லிகார்ஜூன கார்கே, பாராளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 12-ந் தேதி தாக்கல் செய்தார்.இப்போது, நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றியது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு கடந்த மே மாதம் 26-ந் தேதி பதவி ஏற்றது.ரெயில்வே பட்ஜெட்இந்த நிலையில், 2014-15 நிதி ஆண்டின் எஞ்சிய காலத்துக்கான (2014 ஆகஸ்டு முதல் 2015 மார்ச் வரையிலானது) முழுமையான ரெயில்வே பட்ஜெட்டை ரெயில்வே மந்திரி டி.வி.சதானந்த கவுடா, பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். இது பாரதீய ஜனதா கூட்டணி அரசின் முதலாவது ரெயில்வே பட்ஜெட் மட்டுமல்ல, சதானந்த கவுடாவின் முதல் ரெயில்வே பட்ஜெட்டும் இதுதான்.இந்த பட்ஜெட்டில் 5 ஜன சாதாரண ரெயில்கள், 5 பிரிமியம் ரெயில்கள், 6 ஏ.சி. எக்ஸ்பிரஸ் ரெயில்கள், 27 எக்ஸ்பிரஸ் ரெயில்கள், 6 பயணிகள் ரெயில்கள் உள்ளிட்ட புதிய ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் தமிழ்நாட்டுக்கு 5 ரெயில்கள் விடப்பட்டுள்ளன.இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள பிற சிறப்பம்சங்கள் வருமாறு:-தேவை ரூ.1,82,000 கோடி* கடந்த 30 ஆண்டுகளில் 674 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் 317 திட்டங்கள் மட்டுமே நிறைவேறி உள்ளன. 357 ரெயில்வே திட்டங்கள் நிலுவையில் உள்ளன. இவற்றில் 4 திட்டங்கள் 30 வருடங்களாக நிலுவையில் உள்ளன.* நிலுவையில் உள்ள ரெயில்வே திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தேவைப்படும் தொகை ரூ.1 லட்சத்து 82 ஆயிரம் கோடி.* ரெயில்வேயில் நடந்து வரும் திட்டங்களை நிறைவேற்ற ரூ.5 லட்சம் கோடி தேவை.தனியார் - அந்நிய நேரடி முதலீடு* ரெயில்வே கட்டமைப்பில் தனியார் முதலீடுகள் கொண்டு வரப்படும்.* ரெயில்கள் இயக்கம் தவிர்த்து பிற வகைகளில் அந்நிய நேரடி முதலீடுக்கு மந்திரிசபையில் வைத்து அனுமதி பெறப்படும்.* உள்கட்டமைப்பில், உள்நாடு மற்றும் வெளிநாடு முதலீடுகள் கவரப்படும்.நவீனமயத்துக்கு ரூ.5 லட்சம் கோடி* அடுத்த 10 ஆண்டுகளில் ரெயில்வே நவீன மயத்துக்கு ரூ.5 லட்சம் கோடி தேவை.* ரெயில்வேயை மேம்படுத்த அரசும், தனியார் துறையும் இணைந்து செயல்பட வேண்டும்.* பெருமளவு ரெயில்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அரசும், தனியார் துறையும் கரம் கோர்க்க வேண்டும்.ரெயில் நிலையங்களில் வசதிகள்* எல்லா ரெயில் நிலையங் களிலும் நடைமேம்பாலங்கள், ‘எஸ்கலேட்டர்கள்’ என்னும் நகரும் ஏணிகள், ‘லிப்ட்’ என்னும் மின் தூக்கிகள் அரசும், தனியார் துறையும் இணைந்து அமைக்கப்படும்.* வயதானோர், நோயாளிகளை ரெயில் வரை அழைத்துச்செல்ல பேட்டரி கார்கள் இயக்க கவனம் செலுத்தப்படும்.* செல்போன்கள், தபால் நிலையங்கள் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை பிரபலப்படுத்தப்படும்.* ரெயில்வே பல்கலைக்கழகம் அமைக்க திட்டமிடப்படுகிறது.ராமேசுவரத்தில் இருந்து...* ரெயில்களில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தானியங்கி கதவுகள் அமைக்க பரிசீலிக்கப்படும்.* ராமேசுவரத்தில் இருந்து பெங்களூர், சென்னை, அயோத்தி, வாரணாசி, ஹரித்துவார் போன்ற சுற்றுலா தலங்களை இணைத்து சுற்றுலா ரெயில் இயக்கப்படும்.* சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையையும், ஆன்மிக பணிகளையும் சித்தரிக்கும் வகையில் சிறப்பு ரெயில்.புல்லட் ரெயில்* ஏ1 மற்றும் ஏ வகையிலான ரெயில் நிலையங்களிலும், குறிப்பிட்ட ரெயில்களிலும் வை-பை (இணையதள) வசதி செய்து தரப்படும்.* மும்பை-ஆமதாபாத் தடத்தில் அதிவேக புல்லட் ரெயில் இயக்கப்படும்.* ரெயில்களில் பயணிகள் எஸ்.எம்.எஸ். என்னும் குறுந்தகவல்கள் வழியாகவும், செல்போன் வழியாகவும் சாப்பாடு ஆர்டர் செய்யலாம்.பெண்கள் பாதுகாப்பு* பெண்கள் பெட்டிகளில், பயணிகள் பாதுகாப்புக்காக பெண் ரெயில்வே பாதுகாப்பு படையினர் பணி அமர்த்தப்படுவார்கள்.* இணையதளத்தின் வாயிலாக முன்பதிவு இல்லாத சாதாரண பயணிகள் டிக் கெட், பிளாட்பார டிக்கெட்டுகள் எடுத்துக்கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. * மாநகரங்களை, முக்கிய நகரங்களை இணைக்கிற அதிவேக ரெயில்களுக்கான வைர நாற்கர திட்டத்தினை தொடங்கும் வகையில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.* 9 ரெயில் தடங்களில் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம் மணிக்கு 160-200 கிலோமீட்டர் என்ற அளவுக்கு அதிகரிக்கப்படுகிறது. இதில் சென்னை-ஐதராபாத் தடமும் அடங்கும்.இவ்வாறு ரெயில்வே பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.கட்டண உயர்வு இல்லைரெயில் பயணிகள் கட்டணம், சரக்கு கட்டணம் சமீபத்தில்தான் உயர்த்தப்பட்டன. இதன் காரணமாக ரெயில்வே பட்ஜெட்டில் கட்டண உயர்வு எதுவும் அறிவிக்கப்படவில்லை.
0 comments:
Post a Comment