புதுடெல்லி, ஜூலை.8-பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படும் ரெயில்வே பட்ஜெட்டில் ரெயில்வே இலாகாவுக்கு வருமானத்தை பெருக்கும் வகையிலான அறிவிப்புகள் அதிகம் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரெயில்வே பட்ஜெட்இன்று தாக்கல்தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவி ஏற்ற பின்பு 2014-15-ம் ஆண்டுக்கான முதல் ரெயில்வே பட்ஜெட்டை இன்று (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்கிறது. மத்திய ரெயில்வே மந்திரி சதானந்தா கவுடா இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். ஏற்கனவே பயணிகள் ரெயில் கட்டணம் 14.2 சதவீதமும், சரக்கு கட்டணமும் கணிசமாக உயர்த்தப்பட்டுவிட்டதால் இந்த பட்ஜெட்டில் கட்டண உயர்வு எதுவும் இடம் பெறாது என்றே தெரிகிறது. அதே நேரம் 26 ஆயிரம் கோடி ரூபாய் நிதி சுமையால் தத்தளிக்கும் ரெயில்வே இலாகாவுக்கு புத்துயிர் தந்து அதிக வருமானத்தை ஈட்டித்தரும் வகையில் இந்த பட்ஜெட்டில் பல்வேறு விதமான அறிவிப்புகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எரிபொருள் செலவை சமாளிக்க...ரெயில்வே இலாகாவுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருப்பது, எரிபொருளுக்கு ஆகும் செலவுதான். நாளுக்கு நாள் உயர்ந்து வரும் எரிபொருட்களின் விலை உயர்வு ரெயில்வே இலாகாவின் பெரும்பகுதி வருமானத்தை விழுங்கிவிடுவதால் சூரியசக்தி, பயோ டீசல் போன்ற எரிபொருட்களை பெரும் அளவில் பயன்படுத்துவது தொடர்பான அறிவிப்புகளை சதானந்த கவுடா இந்த பட்ஜெட்டில் அறிவிப்பார் என தெரிகிறது. ஏனெனில் மரபு சாரா எரிசக்தியை பயன்படுத்துவதன் மூலம் ரெயில்வே இலாகாவில் எரிபொருளுக்காக செலவிடப்படும் தொகையை குறைக்க முடியும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் பார்வையாக இருப்பதால் இது தொடர்பான அறிவிப்புகள் ரெயில்வே பட்ஜெட்டில் நிச்சயம் இடம்பெறும்.குறிப்பாக ரெயில்வே பணிமனைகள், காலனிகள், மருத்துவமனைகள் மற்றும் ரெயில் நிலையங்கள் சூரிய சக்தியால் இயங்குபவைகளாக மாற்றப்படும். இதேபோல், காலியாக உள்ள நிலங்களில் சூரிய சக்தி நிலையங்களை நிறுவுவது, ரெயில்களின் கூரைகளில் சூரிய சக்தி பேனல்களை அமைப்பது, ரேபரேலி ரெயில் பெட்டி தொழிற்சாலையில் சூரிய சக்தி திட்டங்களை அமைப்பது ஆகியவை குறித்தும் அறிவிக்கப்படலாம்.90 புதிய ரெயில்கள்ரெயில் சேவையை மேம்படுத்தும் விதமாகவும், ஓடும் ரெயில்களில் இருந்து கீழே விழுந்து ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் விதமாகவும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகளிலும், மும்பை புறநகர் மின்சார ரெயில்களிலும் தானாகவே திறந்து மூடும் கதவுகளை அமைப்பது போன்ற முன்னோடி திட்டத்தை சதானந்த கவுடா அறிவிக்கும் வாய்ப்பு உள்ளது. இதேபோல் பிரிமியம் மற்றும் ஆன்மிக தலங்களை இணைக்கும் வகையிலான ரெயில் சேவைகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கப்படலாம். நாடு முழுவதும் புதிதாக 90 ரெயில்கள் வரை விடுவதற்கான அறிவிப்பும் இதில் இடம் பெறலாம்.அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதிமேலும் நிதி ஆதாரத்தை பெருக்கும் வகையில் ரெயில் நிலையங்களை நவீனப்படுத்துவது, அதிகவேக ரெயில்களை விடுவதிலான கட்டமைப்புகளில் அன்னிய நேரடி முதலீடு குறித்த அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என தெரிகிறது. இதேபோல் எதிர்காலத்தில் நவீன அதிவேக ரெயில்களை அறிமுகம் செய்யும் விதமாக வைர நாற்கர திட்டம் குறித்தும் அறிவிக்கப்படலாம். இந்த பட்ஜெட்டில் ரெயில் கட்டண ஆணையம் மற்றும் அதிவேக ரெயில்கள் ஆணையம் ஆகியவை பரிந்துரை செய்துள்ள திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது. சரக்கு ரெயில்களின் சுமக்கும் திறனை மேம்படுத்தும் வகையில், தேசிய பால் மேம்பாட்டு வாரியத்திற்கான பால் வேன்கள், பார்சல் வேன்கள், எடை குறைவான பெட்டிகள் ஆகியவற்றை அறிமுகம் செய்வதற்கான பரிந்துரையும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம்.விபத்துகளை தடுக்கநவீன கருவிகள்இதேபோல், ரெயில் விபத்துகளை தடுக்கும் விதமாக ரெயில் பாதையில் ஏற்படக்கூடிய அதிவெப்ப பேரிங் பாதிப்புகள், சக்கரங்கள், பிரேக் முறை மற்றும் ரெயில்களை சேதப்படுத்தும் பொருட்களை உடனடியாக கண்டறியும் நவீன தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்துவதை ரெயில்வே மந்திரி ஊக்கப்படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.ரெயில் பெட்டிகளை கண்காணித்து பயணிகளுக்கு தகவல்களை தெரிவிக்கும் விதமாக ரெயில் சரியான நேரத்துக்கு வந்து சேரும் நேரம், அடுத்து வரும் ரெயில் நிலையம், ரெயில்கள் புறப்பாடு, வருகை, நடைமேடைகள், பெட்டிகள் நிற்கும் சரியான இடம் போன்றவற்றை விரிவுபடுத்துவது தொடர்பான அறிவிப்புகளும் இந்த ரெயில்வே பட்ஜெட்டில் இடம் பெறலாம்.விரைவான பயணம்ரெயில்வே மந்திரியாக சதானந்த கவுடா பொறுப்பேற்றபோது பாதுகாப்பான, விரைவான ரெயில் பயணத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார். எனவே பயணிகளுக்கு மேம்படுத்தப்பட்ட உணவு சேவை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை சிறப்பாக அளிப்பது தொடர்பான அறிவிப்புகளை இந்த பட்ஜெட் மையமாக கொண்டிருக்கலாம்.இதேபோல் அனைத்து ரெயில் பெட்டிகளிலும் பூச்சி, எலி தொல்லை இல்லாத பயணத்தை உறுதி செய்யும் அறிவிப்புகளும் இடம் பெறலாம்.இலக்கு அதிகரிப்பு?முன்னாள் ரெயில்வே மந்திரி மல்லிகார்ஜூன கார்கே தனது இடைக்கால ரெயில்வே பட்ஜெட்டில் வருவாய் இலக்கை ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் கோடியாக நிர்ணயம் செய்திருந்தார். முழுமையான பட்ஜெட்டில் இந்த இலக்கு அதிகரிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.மேலும் ரெயில்வே இலாகா தனது வருடாந்திர திட்டங் களை நிறைவேற்றுவதற்காக ரூ.40 ஆயிரம் கோடியை உதவியாக அளிக்கும்படி ரெயில்வே அமைச்சகத்தை கேட்டுக்கொண்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இந்த ரெயில்வே பட்ஜெட்டில் வருவாயை பெருக் கும் அம்சங்களே அதிகம் இருக் கும் என்று கருதப்படுகிறது.

0 comments:
Post a Comment