Thursday, 24 July 2014

அங்கன்வாடி மையங்கள், குழந்தைகள் குதூகலமான சூழலில் வளர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டு, "எழுச்சிமிகு முன்பருவ குழந்தை வளர்ச்சி மற்றும் கற்றல் மையங்கள்" ஆக தரம் உயர்த்தப்படும் என முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவிப்பு.

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்கள், குழந்தைகள் குதூகலமான சூழலில் வளர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டு,
"எழுச்சிமிகு முன்பருவ குழந்தை வளர்ச்சி மற்றும் கற்றல் மையங்கள்" ஆக தரம் உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில்இன்று விதி எண் 110-ன் கீழ் அறிக்கைஒன்றை தாக்கல் செய்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, அங்கன்வாடி மையங்களுக்கு முதலுதவி மற்றும் முதலுதவிப் பெட்டிகள் வழங்குதல் உட்பட பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

0 comments:

Post a Comment