கும்பகோணம், ஜூலை.17-கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் 10-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட¢டது.
இதில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். 94 குழந்தைகள் பலி கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் கருகி பரிதாபமாக இறந்தனர். 18 குழந்தைகள் தீக்காயமடைந்தனர். தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் 10-ம் ஆண்டு நினைவுதினம் கும்பகோணத்தில் நேற்று அனுசரிக்கப்பட்டது. தீயில் கருகி உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர் அவரவர் வீட்டில், இறந்த குழந்தைகளின் புகைப்படத்தை வைத்து அவர்களுக்கு பிடித்தமான பண்டங்கள் மற்றும் புத்தாடைகளை வைத்து வழிபட்டனர். சிறப்பு அபிஷேகம் அதைத்தொடர்ந்து காலை 7 மணிக்கு இறந்த குழந்தைகளின் பெற்றோர்கள் சார்பில் அமிர்தா நகரில் உள்ள அமிர்த விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கும்பகோணம் காசிராமன் தெருவில் தீ விபத்து ஏற்பட்ட பள்ளி முன்பு இறந்த 94 குழந்தைகளின் உருவப்படங்கள் முன்பு குழந்தைகளை இழந்த பெற்றோர் மலர் வளையம் வைத்தும், மாலைகளை அணிவித்தும் குழந்தைகளை நினைத்து கதறி அழுது கண்ணீர் அஞ்சலி செலுத்தினர் தீயில் கருகி இறந்த குழந்தைகளுக்கு சக மாணவிகள், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நினைவிடத்தில் அஞ்சலிபின்னர் காலை 11 மணிக்கு கும்பகோணம் பாலக்கரையில் பள்ளி தீ விபத்து நினைவாக கட்டப்பட்டுள்ள நினைவு மண்டபத்தில் உள்ள ஸ்தூபியில் குழந்தைகளை இழந்த பெற்றோர், அரசு அதிகாரிகள், பல்வேறு அரசியல் கட்சியினர் மலர் வளையம் வைத்து மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் மாலை ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் இருந்து குழந்தைகளை இழந்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள் 94 அகல் தீபங்களை நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து சென்று கும்பகோணம் மகாமக குளத்தை சென்றடைந்தனர். அங்கு மோட்சதீபம் ஏற்றினர்.
0 comments:
Post a Comment