Wednesday, 2 July 2014

பொறியியல் பட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு வரும் 7-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சில பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக, அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் முன்னிலையில் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்க, 7 நாள் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தப்படுவது சரியாக இருக்காது எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. எனவே, உச்சநீதிமன்ற கருத்தின் அடிப்படையில், தமிழகத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்குவதாக இருந்த பொறியியல் மாணவர் சேர்க்கைக்கானபொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட பொதுப்பிரிவு கலந்தாய்வு, வரும் 7-ம் தேதி தொடங்கும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் மாணவர்களுக்கு தனித்தனியே எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பப்பட்டு வருவதாகவும், பொதுக் கலந்தாய்வு அட்டவணை TNEA இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் தரவரிசைப்படி அவர்களின் கலந்தாய்வுக்கான தேதி, நேரம் ஆகியவையும் இந்த இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் என தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது. 

0 comments:

Post a Comment