Sunday, 6 July 2014

5 ஆண்டு சட்டப் படிப்பு இன்று முதல் கலந்தாய்வு

அரசு சட்டக் கல்லூரிகளில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 7) தொடங்க உள்ளது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில்காலை 10 மணிக்குத் தொடங்கும் இந்த கலந்தாய்வில் தரவரிசைப் பட்டியலில்முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சட்டத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கல்லூரி சேர்க்கை கடிதங்களை வழங்க உள்ளார்.ஜூலை 10-ஆம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதற்கானதரவரிசைப் பட்டியல் மற்றும் கட்-ஆஃப் மதிப்பெண் விவரங்கள் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிட்டுள்ளன. 


0 comments:

Post a Comment