சென்னை, ஜூலை.15-அரசு மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 225 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்து உள்ளது. இந்த இடங்களுக்கு 2-வது கட்ட மருத்துவ கலந்தாய்வு விரைவில் நடத்தப்பட
உள்ளது.19 அரசு மருத்துவக்கல்லூரிகள்தமிழ்நாட்டில் 19 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கடந்த ஆண்டு 2 ஆயிரத்து 555 இடங்கள் இருந்தன. இந்த இடங்களில் கடந்த ஆண்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு புதிதாக 100 இடங்களை இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்தது. அதுபோல திருச்சி அரசு மருத்துவக்கல்லூரிக்கு கூடுதலாக 50 இடங்களும், சேலம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு கூடுதலாக 25 இடங்களும் கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்டன. இந்த 175 இடங்களும் புதிதாக வந்துள்ளதால் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் இந்திய மருத்துவ கவுன்சில் சம்பந்தபட்ட அரசு மருத்துவக்கல்லூரியை பார்வையிட்டு கட்டமைப்பு வசதி உள்ளதா ? சரியாக கல்லூரி நடத்தப்படுகிறதா? உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை நடத்துவது வழக்கம். அதுபோல இந்த வருடமும் ஆய்வு நடத்தப்பட்டது.225 இடங்களுக்கு அனுமதிஇப்போது இந்திய மருத்துவ கவுன்சில் அந்த 175 இடங்களிலும் மாணவர்களை சேர்க்க அனுமதி வழங்கி உள்ளது. இந்த நிலையில் முதல் கட்ட மருத்துவ கலந்தாய்வு கடந்த மாதம் 18-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி முடிவடைந்தது. 2-வது கட்ட கலந்தாய்வு விரைவில் தொடங்கப்பட உள்ளது.தற்போது அனுமதி கிடைத்துள்ள 175 இடங்கள் மற்றும் கே.கே.நகரில் உள்ள ஈ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரிக்கும் 100 இடங்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கி உள்ளது. அந்த 100 இடங்களில் 50 இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு வர உள்ளது. இந்த இடங்களையும் சேர்த்து 225 இடங்கள் உள்ளன.இந்த தகவலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment