Wednesday, 9 July 2014

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்: என்ஜினீயர்கள் நியமனத்திற்கு நேர்காணல் 22–ந் தேதி தொடங்குகிறது.

என்ஜினீயர்களின் நியமனத்திற்கு நேர்காணல் 22–ந் தேதி தொடங்குகிறது என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.


என்ஜினீயர்கள் நியமனம்

என்ஜினீயர்களின் காலிப்பணியிடத்தை நிரப்ப கடந்த வருடம் மார்ச் மாதம் எழுத்துதேர்வு நடைபெற்றது. அந்த தேர்வை 32 ஆயிரத்து 969 பேர் எழுதினார்கள். தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் பிற விதிகளின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு 652 விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட்டனர். தற்பொழுது நேர்காணலுக்கு 454 பேர் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in ) வெளியிடப்பட்டுள்ளது.நேர்காணல் தேர்வு தேர்வாணைய அலுவலகத்தில் 22, 25, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும். நேர்காணலுக்கான தேதி மற்றும் நேரம் குறித்த விவரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு குறிப்பாணை மூலம் தனித்தனியே அனுப்பப்படும்.

அரசு உதவி வக்கீல்

உதவி அரசு வக்கீல் நிலை–2 பதவிக்கான 90 காலிப்பணியிடத்திற்காக கடந்த வருடம் ஏப்ரல் மாதம் எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு, விதிகளின் அடிப்படையில் நேர்காணல் தேர்விற்கு முன் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தெரிவு செய்யப்பட்ட 137 பேர் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.137 விண்ணப்பதாரர்களும் தங்களின் ஆன்லைன் விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்களின் அடிப்படையில் சான்றிதழ்களின் நகல்களை சரிபார்ப்பிற்காக 17–ந் தேதிக்குள் இவ்வலுவலகத்தில் கிடைக்கப்பெறுமாறு அனுப்ப வேண்டும்.

நூலகர்கள்

நூலகர் நிலை–1 பதவிக்கான ஒரு காலிப்பணியிடத்திற்காக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் எழுத்துத்தேர்வ நடத்தப்பட்டது. தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் பிற விதிகளின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பதற்கு 5 விண்ணப்பதாரர்கள்அனுமதிக்கப்பட்டனர். தற்பொழுது நேர்காணல் தேர்விற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட 3 பேர் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.நேர்காணல் தேர்வ தேர்வாணைய அலுவலகத்தில் 21–ந் தேதி பிற்பகல் நடைபெறும். நேர்காணலுக்கான தேதி மற்றும் நேரம் குறித்த விவரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு பின்னர் குறிப்பாணை மூலம் தனித்தனியே அனுப்பப்படும். இந்த தகவலை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment