Thursday, 10 July 2014

பட்ஜெட் - 2014-15 : பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட கல்வித்துறை தொடர்பான அறிவிப்புகள்

ஆசிரியர் பயிற்சிக்கான மதன் மோகன் மாளவியா திட்டம்

* நாட்டில், புதிதாக 5 ..டி.,கள் மற்றும் 5 ..எம்.,கள்அமைக்கப்படும்
* பல் மருத்துவ வசதியுடன் கூடிய, 12 கூடுதல் அரசு மருத்துவகல்லூரிகள்
ஏற்படுத்தப்படும்

* வேலைவாய்ப்பை பெறுவதற்கான பயிற்சிகளையும், உதவிகளையும் வழங்கும் திறன் இந்தியா திட்டம்(Skill India Programme) விரைவில்அறிமுகம்
* நாட்டிலுள்ளஅனைத்து மகளிர் பள்ளிகளிலும், தேவையானகழிப்பறை மற்றும் குடிநீர் வசதிஏற்படுத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கப்படும்
* பெண்குழந்தைகளின் கல்விக்கான, தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டத்தின் மேம்பாட்டிற்காகரூ.100 கோடி ஒதுக்கீடு
* ஹிமாலயன்படிப்புகளுக்கான தேசிய மையத்தை உத்ரகாண்ட்மாநிலத்தில் அமைக்க, ரூ.100 கோடிஒதுக்கீடு
* ஆந்திராமற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில், புதிய வேளாண் பல்கலைக்கழகங்கள்தோற்றுவிக்கப்படும்
* தெலுங்கானாமற்றும் ஹரியானா மாநிலங்களில் புதியதோட்டக்கலை பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தப்படும்
* நாட்டின்இளைஞர்களிடையே தலைமைத்துவப் பண்பை வளர்க்கும்பொருட்டு, இளம்தலைவர்கள் திட்டத்தை(Young Leaders Programme) உருவாக்க, ரூ.100 கோடி ஒதுக்கீடு
* மணிப்பூர்மாநிலத்தில் புதிதாக விளையாட்டுப் பல்கலைக்கழகம்அமைக்க, ரூ.100 கோடி ஒதுக்கீடு
* எதிர்வரும்ஆசிய விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு, விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியளிக்க, ரூ.100 கோடி ஒதுக்கீடு
* வெகுவிரைவில், நாட்டில், தேசிய விளையாட்டு ஆணையம்அமைக்கப்படுவதோடு, காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச தரத்திலான விளையாட்டுமையங்களும் உருவாக்கப்படும்
* புனேவிலுள்ளஎப்.டி..., கொல்கத்தாவிலுள்ள எஸ்.ஆர்.எப்.டி.., ஆகியவை, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களாகதரம் உயர்த்தப்படும்.
* முஸ்லீம்மத கல்வி நிறுவனமான மதரஸாக்களைநவீனமாக்க, ரூ.100 கோடி ஒதுக்கீடு
* லோக்நாயக் ஜெய்ப்பிரகாஷ் நாராயண் பெயரில், மத்தியபிரதேச மாநிலத்தில் ஒரு உயர்மதிநுட்ப மையம்(Centre of Excellence) அமைக்கும் திட்டம்
* பருவநிலைமாற்றத்தைப் பற்றி ஆய்வுசெய்ய புதியஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்படும்
* பொதுத்துறைமற்றும் தனியார் பங்களிப்புடன், கைவினைக்கலைகள் தொடர்பான ஹஸ்ட்கலா அகடமியை மேம்படுத்த திட்டம்
* சமூகரேடியோ மையங்களுக்கு(Community Radio Centres), ரூ.100 கோடி ஒதுக்கீடு

* தேசியகிராமப்புற இணையம் மற்றும் தொழில்நுட்பதிட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு

0 comments:

Post a Comment