Friday, 11 July 2014

தமிழகத்தில் 11 அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளும், 37 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் தொடங்கப்பட்டிருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பெருமிதம்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா 3-வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், தமிழகத்தில் 11 அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளும், 37 கலை மற்றும் அறிவியல்
கல்லூரிகளும் தொடங்கப்பட்டிருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. P. பழனியப்பன் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. P. பழனியப்பன், தமிழ்நாட்டில் தற்போது 499 அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகள் உள்ளதாக தெரிவித்தார்.

மற்றொரு கேள்விக்கு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி பதில் அளிக்கையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாதலைமையிலான 3 ஆண்டுகால ஆட்சியில், தமிழகத்தில் 5,700 கிலோ மீட்டருக்கு மேல் சாலைகள் அகலப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அடுத்த 2 ஆண்டுகளில் 1,500 கிலோ மீட்டர் சாலைகள் அகலப்படுத்தப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment