Saturday, 5 July 2014

11, 12ம் வகுப்புகளுக்கு அறிவியல் பாட பயிற்சி ஏடுகளை ரூ.14க்கு வழங்க உத்தரவு




                   
தமிழகத்தில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல்  பாடங்களுக்கான பயிற்சி ஏட்டை ரூ.14க்கு அச்சிட்டு வழங்க வேண்டும்  என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  தமிழகத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு பாட புத்தகங்களில் அறிவியல்  பாடங்களுக்கு பாடநூல் வல்லுநர்களால் தயாரிக்கப்பட்ட பயிற்சி  ஏடுகளை அச்சிட்டு பள்ளிகளுக்கு வழங்க மாவட்ட முதன்மை கல்வி  அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வி இயக்குநர்  உத்தரவிட்டுள்ளார். தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் ஒவ்வொன்றும்  ரூ.14க்கு மாணவர்களுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும். 

மேலும் செய்முறை பயிற்சி ஏட்டுக்குரிய தொகையை தவிர வேறு  தொகை ஏதும் வசூல் செய்யக்கூடாது. இந்த பயிற்சி ஏட்டின்  அட்டையிலோ அல்லது வேறு பகுதிகளிலோ பெற்றோர் ஆசிரியர் கழகம்  என்ற பெயர் வராமல் பயிற்சி ஏடுகள் அச்சிடப்பட வேண்டும்.  மாணவர்கள் அனைவருக்கும் இந்த பயிற்சி கையேடுகள் உடனே  கிடைக்கும் வகையில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
                                                    


0 comments:

Post a Comment