சென்னை,
மத்திய அரசின் கல்வி வாரியத்தின் கீழ் இயங்கும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தமிழ்நாட்டில் ஏராளமாக உள்ளன. இந்த பள்ளிகள் அனைத்தும் இதற்கு
முன்பு தமிழக அரசின் அங்கீகாரம் பெற்றது இல்லை. ஆனால் தமிழக அரசின் அங்கீகாரம் பெற வேண்டும் என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சில பள்ளிகள் நீதிமன்றத்தை நாடினார்கள். இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தமிழக பள்ளிக்கல்வித்துறையிடம் அங்கீகாரம் பெறுவதற்கான காலக்கெடு இந்த மாதம் நிறைவடைவதாக இருந்தது.
அந்த காலக்கெடுவை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை பிப்ரவரி 15–ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.






0 comments:
Post a Comment