This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Sunday, 30 November 2014

இந்தியாவில் கல்வியின் தரத்தை உயர்த்த வலியுறுத்தல்

உலகளவில்உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் அதிகமாககொண்டுள்ள நாடாக இந்தியா விளங்கிவரும் வேளையில் கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும்.  
 
     அதிக மதிப்பெண் பெற்று அனைத்து தரப்பினருக்கும்கல்வி கிடைக்க செய்ய வேண்டும்என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.உலக நாடுகளிலேயே இந்தியாவில்தான்இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. கல்வியையும்முறையான பயிற்சியையும் அளித்து அவர்களின் திறன்களைகவனிக்க வேண்டும். நாட்டில் மொத்தம் 10.7 கோடி பேர் உயர்நிலைப்பள்ளி கல்வி பயின்று வருகின்றனர். இதன் மூலம் கல்வியை வழங்குவதில்உலகில் மிகப் பெரிய நாடாகஇந்தியா விளங்குகிறது. ஆனால் மாணவர்களின் விகிதாசாரஅடிப்படையில் உயர்நிலைப் பள்ளி கல்வியில் மாணவர்சேர்க்கையானது மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில்இந்தியா 53 சதவீதமே பெற்றுள்ளது.இதுஅமெரிக்காவில் 93 சதவீதமும், தென் ஆப்பிரிக்காவில் 94 சதவீதமும், ரஷ்யா, மெக்ஸிகோ நாடுகளில் 89 சதவீத மாணவர்களும், உயர்நிலைபள்ளி கல்வி பெறுகின்றனர். நாட்டில்2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் உயர்கல்வி பயிலுவதற்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். உலகில் சிறந்த 200 பல்கலைக்கழகங்களில் இந்தியாவின் ஒரு பல்கலைக் கழகமும்இடம் பெறவில்லை என்று சமீபத்திய ஆய்வுதெரிவிக்கிறது.ஆனால் கி.மு. 6ம் நூற்றாண்டு முதல் கி.பி. 12ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் நாளந்தா, தட்சசீலம், விக்ரமசீலம் போன்ற கல்வி நிறுவனங்களில்பயில வெளிநாடுகளில் இருந்து மாணவர்கள் குவிந்தனர்என்று அவர் தெரிவித்தார்.

மத்திய அரசு வழங்கும் ஊதியத்திற்கு இணையான ஊதியத்தை தமிழக ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்

மத்திய அரசு வழங்கும் ஊதியத்திற்கு இணையான ஊதியத்தை தமிழக ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்று கமுதி வட்டார ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதில் கோரிக்கை வலியுறுத்தப்ப ட்டுள்ளது.   

         கமுதி வட்டார ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம், வட்டார தலைவர் டி.ஞான செல்வம் தலை மையி்ல் நடைபெற்றது. செயலர் ஆ.ராமர் வரவேற்று, சங்க பணிகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில் மாவட்ட செயலர் எஸ்.முத்து முருகன், துணைத்தலைவர் ஆர்.அரிகிருஷ்ணன், வட்டார முன்னாள் பொரு ளாளர் டி.குலசேகர பாண்டியன் உள்பட பலரும் பேசினர்.

தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு கண க்குச்சீட்டுகள் வழங்குதல், ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர்களை இணைய தளத்தில் இ.எம்.ஐ.எஸ். விவரங்களை ஏற் ற வலியுறுத்துவதை கைவிட்டு, வட்டார உதவி தொடக்க கல்வி அதிகாரிகளையை இணைய தளத்தில் ஏற்றச்செய்தல் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேறறப்பட்டன. பொருளாளர் ஐ.சித்ரா நன்றி கூறினார்.

7 பள்ளிகள் தாரை வார்ப்பா; 'ஏழரை' நடவடிக்கையா? ஜெ., வாக்குறுதியை மீறும் சென்னை மாநகராட்சி

'அரசு - தனியார் கூட்டு மாதிரிப் பள்ளிகளுக்கு அனுமதியில்லை' என்ற, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாக்குறுதியை மீறும் வகையில், மாநகராட்சி பள்ளிகளை தனியாருக்கு தரை வார்க்கும் திட்டத்தை அமல்படுத்த, சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது, கல்வித் துறையினரிடம், பெரும் எதிர்ப்பை உருவாக்கி உள்ளது.'மாநகராட்சியின் திட்டத்தை எதிர்த்து, போராட்டம் நடத்துவோம்' என, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.

'அரசு - தனியார் கூட்டு மாதிரிப் பள்ளிகள் துவங்கப்படும்' என, முந்தைய ஐ.மு., கூட்டணி அரசு அறிவித்தது. இதன் மூலம், பள்ளி துவங்க, 60 சதவீத பணத்தை தனியார் கொண்டு வந்தால், 40 சதவீத தொகையை அரசு அளிக்கும்.பள்ளி நிர்வாகம் முழுவதும், தனியார் கட்டுப்பாட்டில் இருக்கும். 10 ஆண்டுகளுக்குப் பின், முற்றிலும் தனியார் பள்ளியாக்கப்படும். இத்திட்டத்துக்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த, 2013 நவம்பரில், இத்திட்டம் குறித்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், 'விரைவில், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படப் போகிறது. எனவே, அரசு - தனியார் கூட்டு மாதிரிப் பள்ளிகள் திட்டம் மாற்றப்படும். தமிழகத்தில், இத்திட்டத்தின் கீழ், பள்ளிகள் துவங்க, எந்த விண்ணப்பமும் பெறவில்லை' என, கூறியிருந்தார். ஆனால், இத்திட்டத்தைப் போலவே உள்ள, ஒரு புதிய திட்டத்தை, சென்னை மாநகராட்சி தற்போது அறிமுகம் செய்ய உள்ளது.

*மாநகராட்சி பள்ளிகளில், 50 மாணவர்களுக்கு கீழ் சேர்க்கை உள்ள, ஏழு பள்ளிகளை, முதல் கட்டமாக தனியாருக்கு அளிக்க உள்ளனர்.
*இப்பள்ளிகளின் கட்டடம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் தனியாருக்கு அளிக்கப்படும்.
*இப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பிற அரசுப் பள்ளிகளுக்கு மாற்றப்படுவர்.
*ஆண்டுக்கு, மாணவர் ஒருவருக்கு, 10 ஆயிரம் ரூபாயை, பள்ளியை நடத்தும் தனியாருக்கு, மாநகராட்சி அளிக்கும்.
*பள்ளி நிர்வாகம் முழுவதும், தனியார் வசமே இருக்கும்.இந்த திட்டத்திற்கு, கல்வியாளர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது.


எந்த வகையில் சிறந்தவை?

பள்ளிக்கு தேவையான கழிப்பறை, துப்புரவாளர், இரவு பாதுகாவலர், மொழி ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் என, எதையும் செய்து தராமல், சேர்க்கை விகிதம் குறைந்து விட்டது என, மாநகராட்சி காரணம் சொல்கிறது. 'அரசு - தனியார் கூட்டு மாதிரிப் பள்ளிகள் திட்டம் செயல்படுத்தப்படாது' என, ஜெயலலிதா உறுதி அளித்தார்.அவர் அளித்த வாக்குறுதிக்கு மாறாக, மாநகராட்சிப் பள்ளிகளை, தனியாருக்கு அளிக்கும் வேலையை, சென்னை மாநகராட்சி மேற்கொள்கிறது. தனியார் பள்ளிகள், எந்த வகையில் தரமானது என்பதை முதலில் அறிவிக்க வேண்டும்; என்ன மாற்றம் வரும் என்பதையும் தெரிவிக்க வேண்டும்.மேயர் சைதை துரைசாமி, ஐ.ஏ.எஸ்., அகாடமி நடத்துகிறார். அதன்மூலம், பல ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை உருவாக்கினோம் என, சொல்பவர்கள், மாநகராட்சிப் பள்ளிகளில், அந்த நிர்வாகத்தை ஏன் அமல்படுத்தவில்லை.
பிரின்ஸ் கஜேந்திர பாபு
மாநில பள்ளிகள் பொது மேடை அமைப்பின் பொதுச்செயலர்


தனியாருக்கு துணைபோகும் அரசு :

இலவச கல்வி அளிப்பதை முற்றிலுமாக உதறிவிட, அரசு நினைக்கிறது. அதன் ஒரு கட்டமாக, மாநகராட்சிப் பள்ளிகளை தனியாருக்கு அளிக்கின்றனர்.ஒரு மாணவனுக்கு, 10 ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும் என்றால், அத்தொகையை மட்டும் கொண்டு, பள்ளியை தனியார் நடத்தி விடுவரா? மாறாக, மாணவர்களிடம் கட்டண வசூலில் ஈடுபடுவர். இதனால், கல்வி மூலம், தனியார் சம்பாதிக்க அரசே துணை போகிறது.மாணவர் சேர்க்கை குறைவுக்கான காரணத்தை கண்டறிந்து, அதை சீர்செய்ய, மாநகராட்சி ஏன் முன்வரவில்லை. தனியாரிடம் என்ன எதிர்பார்க்கின்றனரோ அதை மாநகராட்சியால் ஏன் செய்ய முடியாது. இந்தக் கேள்விகளுக்கு எல்லாம், மாநகராட்சி பதில் சொல்ல வேண்டும்.
வசந்தி தேவி,
முன்னாள் துணைவேந்தர்


கொள்கை இல்லாத அரசு:

அட்டவணை பாடம் (Activity Learning), புத்தக வழிப்பாடம் இதில் எதை நடத்துவது என, ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்குத்
தெரியவில்லை. இத்தகைய குழப்பமான ஆரம்பப் பள்ளி கல்விக் கொள்கையை, அரசு வைத்து உள்ளது.இருபது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தை, 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என, மாற்றினர். பல பள்ளிகள், ஓராசிரியர் பள்ளியாகவே நீடிக்கின்றன. இந்நிலையில், 'கல்வித் தரம் குறைந்து விட்டது' என, அரசு எப்படி கூற முடியும்.அரசிடம் தெளிவான கல்விக் கொள்கையோ, இலவச கல்வியை தொடரும் எண்ணமோ இல்லை. தனியாரிடம் கல்வித் துறையை முழுமையாக அளிக்க திட்டமிடுகின்றனர். இத்திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த, டிச., 7ம் தேதி நடக்கும், எங்கள் கூட்டணியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்வோம்.
கண்ணன்,
தலைவர்
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி

தொழில் நிறுவனங்கள் பங்களிப்பை பெறலாம் :

மாநகராட்சி பள்ளிகளை, முழுமையாகவும், நிரந்தரமாகவும் தனியாருக்கு அளிப்பது சரியல்ல. தற்காலிகமாக அளிப்பதானாலும், எப்போது வேண்டுமானாலும், பள்ளிகளை மாநகராட்சி எடுத்துக்கொள்ளும் வகையில், விதிகளை வகுக்க வேண்டும். பெருகிவரும் வேலைவாய்ப்புப் போட்டிக்கு ஏற்றவாறு, இளைஞர்களைத் தயார் செய்ய, பெரும் தொழில் நிறுவனங்களின் ஆலோசனைகள், பங்களிப்புகளைப் பெறுவதில் தவறில்லை.
ஜெயபிரகாஷ் காந்தி,
கல்வியாளர்

அறிவியல் செய்முறை தேர்வு:தனி தேர்வர்களுக்கு கண்டிப்பு


சென்னை:'பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும், தனித்தேர்வர்கள், அறிவியல் பாட செய்முறை தேர்விற்கு பதிவு செய்யாவிட்டால், தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.இதுகுறித்த, தேர்வுத்துறை அறிவிப்பு:
மார்ச், ஏப்ரலில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும், தனித்தேர்வர்கள், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகளில், தங்கள் பெயரை பதிவு செய்து, பயிற்சி பெற, ஜூன், 11 - 30 மற்றும் அக்., 29 - நவ., 7ம்
தேதி வரை, அனுமதி அளிக்கப்பட்டது. அந்த தேதிகளில் பெயர்களை பதிவு செய்யாத தனித்தேர்வர்களும், இ.எஸ்.எல்.சி., தேர்வில் தேர்ச்சி பெற்ற தனித்தேர்வர்களும், 10ம் வகுப்பு தேர்வை எழுத விரும்பினால், இன்று அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் தங்கள் பெயரை பதிவு செய்து பயிற்சி பெறலாம்.

செய்முறை பயிற்சி வகுப்பில் சேருவதற்கு உரிய பள்ளிகள் விவரங் களை, அரசு தேர்வு சேவை மையங்களை அணுகி, தெரிந்து கொள்ளலாம். மேலும், 'www.tndge.in' என்ற இணைய தளத்திலும், முதன்மை கல்வி அலுவலகங்களிலும், தெரிந்து கொள்ளலாம். செய்முறை பயிற்சிக்கு பெயர் பதிவு செய்யாத தனித்தேர்வர்கள், மார்ச், பொதுத்தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்குசெய்முறைதேர்வு பதிய இன்று கடைசி

ராமநாதபுரம்:முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜ் அனுப்பிய சுற்றறிக்கை:
வரும் 2015 மார்ச், ஏப்ரலில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் பெயர் பதிவு செய்து பயிற்சி பெற ஏற்கனவே இரு முறை அனுமதி வழங்கப்பட்டது.



இவ்விரு வாய்ப்பில் பதிவு செய்யாமல் விடுபட்ட தனித்தேர்வர்கள், எட்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியுறும் தனித்தேர்வர்கள், 2015ல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத விரும்பினால் இன்று ( டிச.,1) தங்களது பெயர்களை பதிய இதுவே கடைசி வாய்ப்பு.

செய்முறை பயிற்சிக்கான விபரம் அறிய அரசுத் தேர்வு சேவை மையத்தை அணுகலாம். www.tndge.in என்ற இணையளத்தில் விபரங்களை பெறலாம். செய்முறை தேர்வுக்கு பதிவு செய்யாத தனித் தேர்வர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதியில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பின்பற்றப்படும் 10+2+3 கல்வி முறை மாறுகிறது: வருகிறது பல சிறப்பம்சங்களுடன் புதிய 8+4+3 திட்டம்


புதுடில்லி : இந்தியாவில் பின்பற்றப்படும், 10+2+3 கல்வி முறையை மாற்ற, மத்திய அரசு விரைவில் முடிவு செய்யும். இதற்காக, ஆர்.எஸ்.எஸ்.,சின் ஒரு அமைப்பான, பி.எஸ்.எம்., புதிய கொள்கை திட்டத்தை, மத்திய அரசிடம் வழங்கியுள்ளது. அதன்படி, 8+4+3 என, விரைவில் கல்வி முறை மாற உள்ளது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 6 -
8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, மூன்றாம் மொழிப்பாடமாக இருந்த ஜெர்மன் நீக்கப்பட்டு, சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்பட்டது. அது போல, நாடு முழுவதும் ஒருங்கிணைந்த கல்வி முறையை கொண்டு வருவதற்காக, மாநில பட்டியலில் உள்ள கல்வியை, மத்திய பட்டியலில் சேர்க்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.அந்த வகையில், இம்மாதம், 17 மற்றும் 18ம் தேதிகளில், ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள, ஆர்.எஸ்.எஸ்.,சின் கல்வி பிரிவான, 'பாரதிய சிக் ஷா மண்டல் - பி.எஸ்.எம்.,' மாநாட்டில், புதிய கல்வி முறைக்கான வரைவுத் திட்டம் வெளியிடப்பட உள்ளது.அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள, 10 + 2 + 3 என்ற முறை மாற்றப்பட்டு, 8 + 4 + 3 என்ற புதிய முறையை அறிமுகப்படுத்த, அந்த மாநாட்டில் விரிவான விவாதம் நடத்தப்பட உள்ளது.


ஸ்மிருதியுடன் சந்திப்பு:

பிரதமர் மோடி, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, மூத்த அமைச்சர் வெங்கையா நாயுடு, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா போன்ற பலர், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பிலிருந்து, பா.ஜ.,வில் இணைந்தவர்கள். பா.ஜ.,வை கட்டுப்படுத்தும் உயரிய அமைப்பாக, ஆர்.எஸ்.எஸ்., விளங்குகிறது என சொல்லப்படுகிறது.இந்திய கல்வி முறையில் மாற்றத்தை கொண்டு வர, மத்திய அரசு, படிப்படியாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு முன்னோடியாக, கடந்த அக்., 30ல், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை, ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் சிலர் சந்தித்தனர் என, டில்லி வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர்கள், சுரேஷ் சோனி, தத்தாத்ரேயா ஹோசபலே போன்றோர், அமைச்சர் ஸ்மிருதியை சந்தித்து, கல்வி முறையை எந்தெந்த விதங்களில் மாற்ற வேண்டும் என கூறியதன் அடிப்படையில் தான், மத்திய அரசு, சமீப காலமாக செயல்படுகிறது எனவும் கூறப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ்., சொல்வதென்ன?


*வெறும் எழுத்தர்களை உருவாக்கும், மெக்காலே கல்வி முறையை நாட்டிலிருந்து அகற்ற வேண்டும். சிந்திக்கத் தெரிந்த, நாட்டின் நலன், பொருளாதார வளர்ச்சிக்கான அடிப்படை போன்றவற்றுடன் இயைந்தவாறு கல்வி முறை இருக்க வேண்டும்.
*நவீன தொழில்நுட்ப யுக்திகளுடன், பாரம்பரிய கல்வி முறையையும் இணைத்து, புதியதொரு கல்வி முறை பின்பற்றப்பட வேண்டும்.
பொறுப்பு

யார் வசம்?

கல்வி முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற, ஆர்.எஸ்.எஸ்., அதற்கான வடிவமைப்பு, செயல்திட்டத்தை, அந்த அமைப்பின் சிறந்த கல்வியாளரான தினாநாத் பத்ராவிடம் வழங்கியுள்ளது. அவர், இதற்காக ஆராய்ச்சி செய்து வடிவமைத்துள்ள கல்விமுறை, குஜராத்தில் பின்பற்றப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுகிறது.

புதிய கல்வி திட்டத்தின் முக்கிய அம்சங்களாவன:



*இப்போது நடைமுறையில் உள்ள, 10 + 2 + 3 கல்வி முறை, 1968ல், கோத்தாரி கமிஷன் பரிந்துரைப்படி அமலில் உள்ளது; இந்த முறை, விரைவில் மாற்றப்பட உள்ளது.
*மாணவர்களின் முதல் எட்டாண்டு படிப்பு, தனி பிரிவாகவும்; அதன் பின், நான்காண்டு தனிப்பிரிவாகவும்; அதன் பின், மூன்றாண்டு தனிப்பிரிவாகவும் பிரிக்கப்பட உள்ளது.
*முதல் எட்டாண்டு படிப்பு, மாணவர்களின் அடிப்படை கல்வி தொடர்பானதாக இருக்கும்; இதில், அவர்களின் தாய்மொழி தான், முதல் மொழியாக இருக்கும்; ஆங்கிலம், இந்தி துணை மொழிகளாக இருக்கும்.
*முதல் எட்டாண்டு படிப்பில், கணிதம், பொது அறிவியல், சமூக அறிவியல், உடற்கல்வி, வேலை, சுத்தம், பாரம்பரிய கல்வி, சமூக சேவை ஆகிய பாடப்பிரிவுகள் இருக்கும்.
*முதல் எட்டாண்டு படித்து முடிக்கும் மாணவன், விரும்பினால், படிப்பை அத்துடன் நிறுத்திக் கொண்டு, தொழில்கள் செய்யவோ, அல்லது தொழிற்கல்வி
படிக்கவோ செய்யலாம்.
*அதன் பின், விரும்பினால், நான்காண்டு படிப்பை தொடரலாம்.

கல்லூரி மட்ட படிப்பு:



*நான்காண்டு படிப்பு, கல்லூரி மட்ட படிப்பை ஒரே வீச்சில் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. விரும்பினால், முதலாண்டுடன் நிறுத்திக் கொள்ளலாம்; அப்போது முதலாண்டு சான்றிதழ் வழங்கப்படும். இரண்டாம் ஆண்டு முடித்த பிறகு, இன்னொரு சான்றிதழ் வழங்கப்படும்; அது, டிப்ளமோ சான்றிதழாகவும், மூன்றாம் ஆண்டு, டிகிரி சான்றிதழாகவும், நான்காம் ஆண்டு சான்றிதழ், ஹானர்ஸ் டிகிரி சான்றிதழாகவும் வழங்கப்படும்.
*இதனால், கல்வி, தொழில் ரீதியாகவும், நாட்டின் உற்பத்திக்கு உகந்ததாகவும் இருக்கும்.
*எந்த படிப்பில் சேரவும், நுழைவுத் தேர்வு முறை இருக்காது என்பது, பி.எஸ்.எம்., வரைந்துள்ள கல்வித் திட்டத்தின் முக்கிய அம்சம். மதிப்பெண் மட்டுமின்றி, பிற தகுதிகளும், பொருளாதாரமும் கவனத்தில் கொள்ளப்படும்.
*எல்லா வகையான படிப்பிலும், செய்முறை எனப்படும் பிராக்டிகல் அவசியம் இருக்கும்.

சபாஷ்! நீலகிரியில் ஞாயிறும் பள்ளிகள் திறப்பு; ஆசிரியர்கள் அதிரடி முடிவு

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க நேற்று ஞாயிறன்றும் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் செயல்பட்டன. ஆசிரியர்களின் அதிரடி முடிவால் மாணவர்களின் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

'தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகளில், வரும் கல்வியாண்டில், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும்' என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் 50 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 33 மேல்நிலைப்பள்ளிகள் என, மொத்தம் 83 அரசு பள்ளிகள் மற்றும் சுமார் 40 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இங்குள்ள அரசு பள்ளிகளில் ஆண்டுக்காண்டு மாணவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆசிரியர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

கடந்த காலாண்டு தேர்வு முடிவுகளை பார்க்கும் போது, தேர்ச்சி விகிதம் 50 சதவீதத்திற்கு குறைவாகவே இருந்துள்ளது. மேலும், மலைமாவட்டம் என்பதால், அவ்வப்போது ஏற்படும் மழை மற்றும் மண்சரிவு காரணங்களால் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.இதனால், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி கல்வித் துறையின் ஒப்புதலுடன், ஞாயிறன்று வகுப்பு நடத்துகின்றனர். ---நேற்று மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன.

கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, இந்த வாரத்தில் இருந்து ஞாயிறு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது,' என்றனர்.

பள்ளியில் புகுந்து தாக்குதல்: அடியாட்களை ஏவிய தொழிலதிபர் கைது

சென்னை கோடம்பாக்கம் லயோலா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் 8–ம் வகுப்பு படிக்கும் மாணவரை அடித்ததாக, அந்த பள்ளியின் ஆசிரியர் பாஸ்கர் ராஜ் என்பவர் மீது புகார் கூறப்பட்டது.
இதையொட்டி, ஆசிரியர் பாஸ்கர்ராஜும் தாக்கப்பட்டார். மாணவரின் தந்தை தொழிலதிபர் அருளானந்தம், அடியாட்களை ஏவி ஆசிரியரை தாக்கியதாக கோடம்பாக்கம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. கோடம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆசிரியர் பாஸ்கர்ராஜை தாக்கியதாக 35 பேரை கைது செய்தனர்.
தொழிலதிபர் அருளானந்தம் தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்ய வலியுறுத்தி கோடம்பாக்கத்தில் சாலை மறியல் போராட்டமும் நடந்தது. சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஜெயக்குமார், தேனாம்பேட்டை உதவி கமிஷனர் சிவபாஸ்கர் ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் தொழிலதிபர் அருளானந்தத்தை கைது செய்ய, திருச்சி மற்றும் மதுரையில் முகாமிட்டு இருந்தனர். இந்தநிலையில் நேற்றிரவு 10 மணியளவில் திருச்சியில் வைத்து தொழிலதிபர் அருளானந்தம் கைது செய்யப்பட்டார். இன்று (திங்கட்கிழமை) காலையில் அவர் சென்னைக்கு கொண்டு வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென் கடலோர மாவட்டங்களில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும் வானிலை மையம் தகவல்

சென்னை,

தென் கடலோர மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்துவருகிறது. தென் மாவட்டங்களில் போதிய மழை பெய்துள்ளது. ஆனால் அந்த அளவுக்கு வடதமிழ்நாட்டில் மழை பெய்யவில்லை. குறிப்பாக சென்னைக்கு குடிநீர் சப்ளை செய்யக்கூடிய ஏரிகள் இன்னும் நிரம்பவில்லை. எனவே அந்த ஏரிகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யக்கூடிய பகுதிகளில் பலத்த மழை பெய்தால் நல்லது என்று அந்த பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் நினைக்கிறார்கள்.

இந்த நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. நேற்றும் பரவலாக மழை பெய்தது. சென்னையில் ஆங்காங்கே லேசான மழை பெய்தது.

இன்றைய வானிலை குறித்து சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி மைய அதிகாரி கூறியதாவது:-

இன்று மழை பெய்யும்

தென் மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உள்ளது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) அநேக இடங்களிலும், வட மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்யும். நாளை முதல் மழையின் தன்மை தென் மாவட்டங்களில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

நேற்று காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

மழை அளவு

பூதப்பாண்டி 7 செ.மீ., சிதம்பரம், கடலூர், காரைக்கால் தலா 5 செ.மீ., இரணியல், பரங்கிப்பேட்டை, தரங்கம்பாடி, பேச்சிப்பாறை தலா 4 செ.மீ., மணிமுத்தாறு, நாகர்கோவில், ஆணைக்காரன் சத்திரம், ஸ்ரீமுஷ்ணம், புதுச்சேரி, கீழ் கோதையாறு, சீர்காழி, மயிலாடுதுறை, தக்கலை, மயிலாடி, நெய்வேலி தலா 3 செ.மீ., வானூர், நன்னிலம், திருமயம், பாபநாசம், மரக்காணம், விழுப்புரம் தலா 2 செ.மீ., சேத்தியாதோப்பு, காட்டுமன்னார்கோவில், வேதாரண்யம், உளுந்தூர் பேட்டை, தென்காசி, தேவகோட்டை, திருவாரூர், குடவாசல், திருப்புவனம், சேரன்மகாதேவி, ஆடுதுறை, திருவிடைமருதூர், மதுரை, நீடாமங்கலம், கொளத்தூர், மாமல்லபுரம், கும்பகோணம், திருவாடானை, திண்டிவனம், அம்பாசமுத்திரம், விருத்தாசலம், மன்னார்குடி தலா 1 செ.மீ.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 96 பைசா; டீசல் விலை 91 பைசா குறைப்பு


நாடு தழுவிய அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு முறையே 91 பைசா மற்றும் 84 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலை குறைப்பை அறிவித்துள்ளன.
உள்ளூர் வரிகளுக்கு ஏற்ப, இந்த விலை குறைப்பு மாறுபடும். அதன்படி, சென்னையில் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 96 பைசாவும், டீசல் விலை 91 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது.
நகரவாரியாக பெட்ரோல் விலைக் குறைப்பு விவரம்:
சென்னையில் லிட்டர் ரூ.67.01 என்பது 96 பைசா குறைந்து லிட்டர் ரூ.66.05 ஆகிறது.
டெல்லியில் லிட்டர் ரூ.64.24 என்பது 91 பைசா குறைந்து லிட்டர் ரூ.63.33 ஆகிறது.
கொல்கத்தாவில் ரூ.72.21 என்பது 95 பைசா குறைந்து லிட்டர் ரூ.70.73 ஆகிறது.
மும்பையில் ரூ.71.91 என்பது 96 பைசா குறைந்து ரூ.70.95 ஆகிறது.
டீசல் விலைக் குறைப்பு விவரம்:
சென்னையில் லிட்டர் விலை ரூ.56.84 ஆக இருந்தது 91 பைசா குறைந்து ரூ.55.93 ஆகிறது.
டெல்லியில் ரூ.53.35 ஆக இருந்த விலை 84 பைசா குறைந்து ரூ.52.51 ஆகிறது.
கொல்கத்தாவில் ரூ.57.95 ஆக இருந்த விலை லிட்டருக்கு 87 பைசா குறைந்து ரூ.57.08 ஆகிறது.
மும்பையில் ரூ.61.04 ஆக இருந்த விலை லிட்டருக்கு 93 பைசா குறைந்து ரூ.60.11 ஆகிறது.

ரயில்வே காவல்துறை அறிமுகம் : வாட்ஸ் அப்.பில் புகார் அனுப்பலாம்

ரயில்வே காவல்துறையில் புதிய முயற்சியாக ரயில் பயணிகள் புகார்களை வாட்ஸ்அப் (செயலி) மூலம் உதவி மைய எண்ணுக்கு அனுப்பும் வசதியை முதல்முறையாக இருப்புபாதை காவல்துறை சென்னை கோட்டம் இன்று முதல் அறிமுகம் செய்கிறது.


வாட்ஸ்அப் மூலம் எழுத்து மூலமான புகார் களை மட்டுமின்றி படங்களாகவும், வீடியோவாகவும் அனுப்பலாம். புகார் தெரிவிப்பவர்களின் விவரங்கள் வெளியிடப்படாது. வாட்ஸ்அப் புகார்களை அனுப்புவதற்கான எண் 9962 500 500.
இந்த தகவலை, தமிழ்நாடு இருப்புப்பாதை காவல்துறையின் சென்னை கோட்ட கண்காணிப்பாளர் விஜயகுமார் தெரிவித்தார்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பல்வேறு பணி.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் ஃபாரிதாபாத் பரிதாபாத் இந்தியன் ஆயில் கழக நிறுவனத்தில் ரிசர்ச் அதிகாரி, சீனியர் அதிகாரி, துணை மேலாளர், சீனியர் ரிசர்ச் அதிகாரி, சீப் ரிசர்ச் மேலாளர் போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Research Officer (Chemistry)(Gr A)- 06
தகுதி: வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.  
பணி: Research Officer(Biotechnology)(Gr A)- 02
வயது வரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Microbiology, Biotechnology, Biochemistry, Biosciences,Biochemical அல்லது Bioprocess engineering துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Research Officer(Automotive Research) (Gr A)- 04
தகுதி: Mechanical, Automobile, Thermal Engg,IC Engines போன்ற துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.   பணி: Research Officer(ChemicalEngineering)(Gr A)- 07
தகுதி: வேதியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.  
பணி: Sr. Officer (Gr B) - 01
தகுதி: 65 சதவிகித மதிப்பெண்களுடன் Chemical,Mechanical அல்லது M.Sc Chemistry, Bio-technology, Polymer துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.12.2014 மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.iocl.com/download/Recruitment_Research_Development_2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

கல்வி மாவட்டத்துக்கு வந்த பொதுத்தேர்வு விடைத்தாள்

விருத்தாசலம் கல்வி மாவட்டத்துக்கான பொதுத் தேர்வு விடைத்தாள்கள், அரசு அச்சகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், தேர்வுக்கான விடைத்தாள்கள் அரசு அச்சகம் சார்பில், அந்தந்த கல்வி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இதன்படி, விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விடைத்தாள்கள் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனைப் பள்ளி நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர். இதனையடுத்து விடைத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் இணைப்பு பெற ஆதார் எண் தரலாம்

பிஎஸ்என்எல் செல்போன் இணைப்பு பெற விண்ணப்பத்தில் ஆதார் எண் இருந்தால் குறிப்பிடலாம். எண் இல்லை என்றாலும் இணைப்பு பெறலாம் என்று சென்னை தொலைபேசி தெரிவித்துள்ளது.

              சென்னை தொலைபேசி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மத்திய தொலைத் தொடர்பு துறையின் உத்தரவின்படி புதிதாக பிஎஸ்என்எல் செல்போன் இணைப்பு பெறுபவர்கள் விண்ணப்பத்தில் ஆதார் எண்ணை கு றிப்பிட வேண்டும். ஆதார் எண் இல்லாதவர்கள் ‘ஆதார் எண் இல்லை என்று குறிப்பிட வேண்டும். இந்த மாற்றம் டிச.1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறதுÕ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தது காலாண்டு தேர்ச்சி சதவீதம்: அதிருப்தியில் கல்வித்துறை உயர் அதிகாரிகள்

அரசுப் பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டுக்கான காலாண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்ததால், கல்வித்துறை உயர் அதிகாரிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், விடைக்குறிப்பு இல்லாததால், சரியான மதிப்பெண் மதிப்பீடு செய்ய முடியவில்லை என, மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

          பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஆண்டுதோறும் நடத்தப்படும் இடைத் தேர்வு, திருப்பத் தேர்வு, காலாண்டு, அரையாண்டு, அலகுத் தேர்வு ஆகியன, மாநிலம் முழுவதும், பொதுத்தேர்வு நடத்துவது போல், ஒரே தேதியில் நடத்தப்படுகின்றன. அதற்கான தேர்வு அட்டணையை, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என, கல்வித் துறை அறிவுறுத்தி வருகிறது. இதில், கடந்த, செப்., 15ம் தேதி, பிளஸ் 2, அதே மாதம், 17ம் தேதி, ??ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவருக்கு, காலாண்டுத் தேர்வு நடத்தப்பட்டது. அதில், ஒவ்வொரு பள்ளி வாரியாக, காலாண்டுத் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் எடுக்காத மற்றும் தேர்ச்சியற்ற பொதுத்தேர்வு மாணவர் பட்டியல், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் எடுக்க உத்தரவிடப்பட்டது. நடப்பு கல்வியாண் டில், பொதுத்தேர்வு எழுதக்கூடிய மாணவர்களில், பெரும்பாலானோர், குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் கூட எடுக்கவில்லை. பாடம் வாரியாக, குறைந்தபட்ச மதிப்பெண் கூட எடுக்காத மாணவரின் எண்ணிக்கை மற்றும் அவர் தேர்ச்சி குறைவுக்கான காரணப் பட்டியலுடன், மாவட்ட கல்வி அதிகாரிகள், சில நாட்களுக்கு முன், பள்ளிக்கல்வி இயக்குனரகத்திற்கு சென்றனர். அப்போது, கல்வி மாவட்டம் வாரியாக காலாண்டுத் தேர்வு தேர்ச்சி சதவீதத்தை பார்த்த உயர் அதிகாரிகள், மூன்றில் ஒரு பாகம் பாடத்திட்டத்தில், மாணவர் அதிகபட்ச மதிப்பெண் எடுக்கவில்லையே என்ற அதிருப்தியை, மாவட்ட அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். நடப்பாண்டு, பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்தால், சம்பந்தப்பட் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் மாவட்ட அதிகாரிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விடைக்குறிப்பு இல்லை:

பொதுத்தேர்வு போல, காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுக்கு, விடைக்குறிப்பு வழங்கப்படுவதில்லை. இதனால், ஒவ்வொரு பள்ளி ஆசிரியரும், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப, மாணவர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வர். சில பள்ளி ஆசிரியர்கள், குறைந்த மதிப்பெண் கொடுத்தால் தான், பொதுத் தேர்வுக்கு மாணவர் கடுமையாக படிப்பார் என நினைத்து, குறைந்த மதிப்பெண்ணை வழங்குவர். செய்முறை தேர்வுக்கு என, தனியாக மதிப்பெண் இருந்தாலும், அந்த மதிப்பெண்ணை கணக்கிடாமல், மீதமுள்ள, மதிப்பெண்ணுக்கு தேர்வு நடத்தி, அதை, மொத்த மதிப்பெண்ணுக்கு கணக்கிட்டுக் கொள்வர். காலாண்டு, அரையாண்டு மதிப்பீட்டை வைத்து, எந்த முடிவும் கூற முடியாது. இதற்கு முன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அளவில், காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் குறித்து ஆய்வு நடத்தப்படும். தற்போது, மாநில அதிகாரிகளே களத்தில் இறங்கி, மதிப்பெண்களைஆய்வு நடத்தி, நெருக்கடி கொடுப்பதால், எப்படி வகுப்பு எடுப்பது என்றே தெரியவில்லை. இப்பிரச்னைக்கு தீர்வு காண, பொதுத் தேர்வைப் போல, மற்ற தேர்வுகளுக்கும், விடைக் குறிப்பு வழங்கினால், விடைத்தாள் மதிப்பீடு சரியாக இருக்கும்.

Saturday, 29 November 2014

சமஸ்கிருத மொழிப்பாட விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

அரசு செய்த தவறுக்கு மாணவர்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? எனவே நடப்பு கல்வியாண்டில் மூன்றாவது மொழிப் பாடமாக ஜெர்மன் மொழியே தொடர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
     மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா
பள்ளிகளில் 6 முதல் 8 வரையிலான வகுப்புகளில், ஜெர்மானிய மொழிக்கு பதிலாக சமஸ்கிருதத்தை மூன்றாவது மொழிப் பாடமாக சேர்க்க மனிதவள அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நேற்று கூறியதாவது: முறையான ஒப்புதல் இல்லாமல் ஜெர்மானிய மொழியை, மூன்றாவது மொழிப் பாடமாக முந்தைய மத்திய அரசு சேர்த்து விட்டதாகவும், அதை தற்போது தொடர முடியாது என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
அரசு செய்த தவறுக்கு மாணவர்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? எனவே நடப்பு கல்வியாண்டில் மூன்றாவது மொழிப் பாடமாக ஜெர்மன் மொழியே தொடர வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கள்ளர் பள்ளியிலிருந்து பள்ளிகல்வித்துறைக்கு துறைமாறுதல் பெற்றவர் பணியிலிருந்து விடுவித்து ஆணை

அரசாணை86 ன் படி கள்ளர் பள்ளியிலிருந்துபள்ளிகல்வித்துறைக்கு துறைமாறுதல் பெற்றவர் பணியிலிருந்து விடுவித்து 
ஆணை

கல்லூரிகளில் 10 ஆயிரம் ஆசிரியர்கள் இல்லை: நிரப்ப உத்தரவிடுமா யு.ஜி.சி.,

கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை, தகுதியான ஆசிரியர்களை கொண்டு நிரப்ப, யு.ஜி.சி., உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

'பல்கலைகளில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களை, அடுத்த கல்வி ஆண்டிற்குள் நிரப்ப வேண்டும்' என, பல்கலை மானியக் குழு - யு.ஜி.சி., சமீபத்தில் உத்தரவிட்டது. சில பல்கலைகளில், ஏற்கனவே இப்பணி துவங்கி விட்டது. சென்னை பல்கலையில், சமீபத்தில், 90 பணியிடங்கள் நிரப்பப்பட்டன; தற்போதும் நேர்காணல் நடந்து வருகிறது. அதே நேரத்தில், தமிழகத்தில் உள்ள அரசுக்கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், 10 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஈரோடு, கோவையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில், தகுதியான பேராசிரியர்கள் இல்லாததை கண்டித்து, மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, கல்வியாளர் ஒருவர் கூறியதாவது: அரசு உதவி பெறும் கல்லூரிகளில், பல, யு.ஜி.சி.,யின் நிதி பெறுகின்றன. எனவே, அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில், காலிப்பணியிடங்களை நிரப்ப, உத்தரவிட வேண்டும். கல்லூரிகளில், கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை எடுக்கும் நிலை உள்ளது. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சில கல்லூரிகளுக்கு மட்டும், பணியிடங்கள் நிரப்ப அரசு ஒப்புதல் வழங்குகிறது. இதையும் யு.ஜி.சி., கண்காணிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

விண்கலத்தை கொண்டு செல்லும் ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்: 'இஸ்ரோ' நிறுவனத்தின் அடுத்த அதிரடி

சென்னை: ''இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் மைல் கல்லாகக் கருதப்படும், ஜி.எஸ்.எல்.வி., மார்க் - 3 ராக்கெட், டிச., 20ம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது,'' என, சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர், பிரசாத் தெரிவித்துள்ளார்.

மாதிரி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான, 'இஸ்ரோ' மனிதனை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக, 'கேர்' என்ற பெயர் கொண்ட மாதிரி விண்கலத்தை உருவாக்கியுள்ளது. இந்த விண்கலத்தை, ஜி.எஸ்.எல்.வி., மார்க் - 3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த, இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.

இதுகுறித்து, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இயக்குனர், பிரசாத் கூறியதாவது: இந்திய தொழில்நுட்பத்தில் உருவான, அதிக எடை சுமந்து செல்லும் திறன் கொண்ட, ஜி.எஸ்.எல்.வி., மார்க் - 3 ராக்கெட்டை சோதனை முறையில் விண்ணில் ஏவ, இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், 'கேர்' மாதிரி விண்கலம், விண்ணில் செலுத்தப்படும். ஜி.எஸ்.எல்.வி., மார்க் - 3 ராக்கெட், டிசம்பர், 20ம் தேதிக்குள் விண்ணில் ஏவப்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


ஜி.எஸ்.எல்.வி., மார்க் - 3 ராக்கெட்:

ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட், நான்கு டன் எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தவல்லது. இதன் மொத்த எடை, 630 டன்; 42.5 மீட்டர் உயரமுள்ளது. நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்ட, அடுத்த தலைமுறை ராக்கெட்.


'கேர்' மாதிரி விண்கலம்:

இந்த மாதிரி விண்கலம், 3,735 கிலோ எடையுள்ளது. உயரம், 2.7 மீட்டர்; அகலம், 3.1 மீட்டர். மூன்று பேர் அமர்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலம், மீண்டும் பூமிக்கே திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த விண்கலம் பூமிக்கு திரும்பும் போது, அதன் வேகத்தை கட்டுப்படுத்த, மூன்று நிலைகள் கொண்ட, 'பாராசூட்'கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், வெப்பத்தை கட்டுப்படுத்தும் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விண்கலம், அந்தமானுக்கு அருகே, 600 கி.மீ., தொலைவில் கடலில் விழும் வகையில் இயக்கப்படும். ஜி.எஸ்.எல்.வி., மார்க் - 3 ராக்கெட் விண்ணில் செலுத்துவதில் இருந்து, விண்கலம் பூமிக்கு திரும்புவது வரை அனைத்து நடவடிக்கைகளும், 25 நிமிடத்திற்குள் நடந்து முடியும். கடலில் விழும் விண்கலத்தை, கடலோர காவல் படை படகைக் கொண்டு கண்காணிக்கவும், ஹெலிகாப்டர் கொண்டு மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனுமதியின்றி மேற்படிப்பு படித்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

முன் அனுமதி பெறாமல் மேற்படிப்பு படித்து ஊக்க ஊதியம் வழங்கக்கோரும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் உத்தரவிட்டுள் ளார்.

இதுதொடர்பாக மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
தொடக்கக்கல்வி இயக்குநரகத் தின் கீழ் பணிபுரியும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் துறையின் முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி படித்து ஊக்க ஊதியம் வழங்கக் கோரும் பட்சத்தில் அத்தகைய ஆசிரியர்கள் மீது மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த ஒழுங்கு நடவடிக்கையின் இறுதி உத்தரவு நகலுடன் சம்பந்தப்பட்ட ஆசிரியர், துறை முன்அனுமதி பெறாமல் படித்த உயர்கல்விக்கு பின்னேற்பு அனுமதி கோரும் கருத்துருக்களை உரிய விவரங்களுடன் இயக்குநரகத்துக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் பள்ளிகளில் திருவள்ளுவர், பாரதியார் நூல்கள் அறிமுகம் மத்திய மந்திரி அறிவிப்பு


புதுடெல்லி
திருவள்ளுவர், பாரதியார் எழுதிய நூல்கள் இந்தியா முழுவதும் உள்ள பள்ளிக்கூடங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி தெரிவித்தார்.

தருண் விஜய் உத்தரகாண்டை சேர்ந்த பா.ஜனதா எம்பி தருண் விஜய் டெல்லி மேல்–சபையில் பேசும்போது தமிழ் மொழி இந்தியாவின் மிகவும் பழமையான செம்மொழியாகும். வரும் ஆண்டு முதல் திருவள்ளுவரின் பிறந்த நாளை வட இந்திய மாநிலங்களின் அனைத்துப் பள்ளிகளிலும் கொண்டாடுவதற்கும் வள்ளுவரின் குறளில் உள்ள சிறப்புக்களை வட இந்தியாவின் பள்ளிக் குழந்தைகள் அறிந்து கொள்ளும் வகையில் மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இது கட்சி வேறுபாடின்றி அனைத்துத் தரப்பினராலும் பெருத்த வரவேற்பை பெற்றது. தருண் விஜய் உரையைத் தொடர்ந்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிரிதி இரானி வரும் ஆண்டில் இருந்து இந்தியாவின் அனைத்துப் பள்ளிகளிலும் திருவள்ளுவர் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறினார்.
நன்றி தெரிவித்தனர் இதனைத் தொடர்ந்து நேற்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தருண் விஜய் மற்றும் தில்லித் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட சில தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானியை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்
பின்னர் ஸ்மிரிதி இரானி கூறும்போது, விரைவில் திருக்குறள் நூல் அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களுக்கும் மத்திய அரசு சார்பில் பரிசாக வழங்கப்படும். அவருடைய வாழ்க்கை வரலாறும் படைப்புக்களும் பரவலாக அறிமுகப்படுத்தப்படும். திருவள்ளுவரின் பிறந்தநாள் இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் விமர்சையாகக் கொண்டாடப்படும். அதே போல மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் படைப்புக்கள் வட இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.
மேலும் இந்திய மொழிகளான கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளும் தகுந்த முறையில் கவுரவிக்கப்படும். இந்திய மொழிகளின் வளமை மற்றும் பாரம்பரியம் மாணவர்களுக்கு பரவலாக அறிமுகப்படுத்தப்படும். இது நமது அரசின் மிகவும் முக்கியமான பணியாகும் என்று கூறினார்.
பொன்.ராதாகிருஷ்ணன் இது குறித்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
பாராளுமன்றத்தில் பா.ஜனதா எம்.பி தருண் விஜய், திருவள்ளுவர் பிறந்த நாளை நாடு முழுவதும் கொண்டாட வேண்டும்; திருக்குறளையும் பாடநூல்களில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனை ஏற்றுக்கொண்ட மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிரிதி இரானி திருவள்ளுவர் பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.
இதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்க சென்ற போது, நாடு முழுவதும் பள்ளிகளில் திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்படும், திருக்குறள் நூலை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நாடு முழுவதும் பள்ளிகளில் விநியோகிக்கப்படும் என்றும், மாணவ, மாணவியர்களிடைய திருவள்ளுவர் வாழ்க்கை வரலாற்றை தெரியபடுத்த திருவள்ளுவர் பிறந்தநாளில் வருடம்தோறும் விழிப்புணர்வு விழா மற்றும் போட்டிகள் அரசால் நடத்தபட்டு சான்றுகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பாரதியார் அதேபோல் பாரதியார் பிறந்த நாள் விழாவையும் தேசிய விழாவாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி, பாரதியார் பிறந்தநாள் விழாவையும் தேசிய விழாவாக கொண்டாட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளி வகுப்பறையில் 8-ம் வகுப்பு மாணவர் கொலை: விளாம்பட்டியைத் தொடர்ந்து பந்தல்குடியில் 2-வது சம்பவம்

பாஸ்கர் கொலை செய்யப்பட்ட வகுப்பறையைப் பார்வையிட்ட மாவட்ட எஸ்பி எஸ்.மகேஸ்வரன். உள்படம்: பாஸ்கர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள பந்தல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நேற்று 8-ம் வகுப்பு மாணவர் வகுப்பறையிலேயே முன்னாள் மாணவரால் கொடூரமாக குத்திக் கொலை செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், அயன்கரிசல்குளத்தைச் சேர்ந்தவர் கோபால். மும்பையில் கூலித் தொழியாளியாக உள்ளார். இவரது மனைவி தேவி, மகள் அஸ்வினி (16), மகன் பாஸ்கர். அஸ்வினி, பந்தல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். பாஸ்கர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பில் படித்து வந்தார்.
வழக்கம்போல நேற்றும் காலை 8 மணிக்கே பாஸ்கர் வகுப்பறைக்கு வந்து விட்டார். சக மாணவர்களுடன் அமர்ந் திருந்தபோது, பள்ளியில் 2012-13-ம் கல்வியாண்டில் பிளஸ் 1-ல் தோல்வி யடைந்து, படிப்பை நிறுத்திய அயன்கரிசல் குளத்தைச் சேர்ந்த செல்வம் மகன் மாரீஸ்வரன் அந்த வகுப்பறைக்குள் நுழைந்தார்.
திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பாஸ்கரை கொடூரமான முறையில் பல இடங்களில் குத்தியுள்ளார். இதைக் கண்டு மற்ற மாணவர்கள் அனைவரும் வகுப்பறையிலிருந்து அலறியடித்து வெளியே ஓடிவிட்டனர். மாரீஸ்வரன் அங்கிருந்து வெளியேறி, பள்ளியின் பின்பக்க சுவரில் ஏறிக் குதித்து, அங்கு மோட்டார் சைக்கிளில் காத்திருந்த ஒருவருடன் தப்பிச் சென்றுள்ளார்.
சக மாணவர்கள் ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்துவிட்டு, பள்ளிக்கு எதிரே சற்று தொலைவில் உள்ள காவல் நிலையத்துக்கும் ஓடிச் சென்று சம்பவம் குறித்து போலீஸாரிடம் தெரிவித்தனர். பின்னர், ஆம்புலன்ஸில் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பாஸ்கர் உயிரிழந்தார். தவகலறிந்து வந்த பாஸ்கரின் உறவினர்கள், பந்தல்குடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
தனியார் மில் ஊழியர்
மாரீஸ்வரன் குறித்து போலீஸார் கூறும் போது, படிப்பை நிறுத்திய மாரீஸ்வரன், மல்லாங்கிணற்றில் உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வந்துள்ளார்.
மாரீஸ்வரன் அடிக்கடி தனது கையில் காம்பஸ் கருவியால் கிழித்துக் கொள்வாராம். நோட்டுப் புத்தகங்களில் அரிவாள், கத்தி போன்ற படங்களையும், வெட்டிக் கொலை செய்வது போன்ற படங்களையும் வரைவதை மாரீஸ்வரன் வழக்கமாகக் கொண்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
மாரீஸ்வரனும், பாஸ்கரும் ஒரே ஊர் என்பதால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன் பாஸ்கர் மற்றும் அயன்கரிசல்குளத்தைச் சேர்ந்த வெங்கடேஷ், சந்தோஷ், யுவராஜ், சண்முகம் முத்துராஜ் ஆகியோரை மாரீஸ்வரன் திருச்செந்தூருக்கு அழைத்துச் சென்று அங்கு 5 நாட்கள் தங்கியுள்ளார்.
மகன்களைக் காணவில்லை என்று மாணவர்களின் பெற்றோர் தூத்துக்குடி மாவட்டம், மாசார்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து பாஸ்கரின் தந்தை கோபால் கூறியது: 6 மாதங்களுக்கு முன் எனது மகனை கடத்திச் சென்றபோதே மாரீஸ்வரனை போலீஸார் கைது செய்திருந்தால், இப்போது எனது மகன் பலியாகியிருக்க மாட்டான் என்றார்.
கொலையாளியை கைது செய்யக் கோரி பாஸ்கரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், விளாம்பட்டி யில் பிளஸ் 1 மாணவர் வினோத், சக மாணவரால் வகுப்பறையிலேயே அண்மையில் கொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் வகுப்பறையிலேயே மாணவர் கொலை செய்யப்பட்டது பெற்றோர்களையும், கல்வியாளர்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
மாணவர்களுக்கு கவுன்சலிங்
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ. ஜெயக்குமாரிடம் கேட்டபோது, ‘ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி யில் மாணவ-மாணவிகளுக்கு கவுன்சலிங் கொடுக்க திட்டமிட் டுள்ளோம். மன அழுத்தத்துடன் காணப்படும் மாணவர்களை அழைத்து உரிய ஆலோசனை வழங்கவும், மனநல மருத்துவர் களிடம் அழைத்துச் செல்லவும் பள்ளித் தலைமை ஆசிரியருக் கும், ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.
கொலை நடந்த பந்தல்குடி பள்ளியில் மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரனும் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.
தன்பாலின சேர்க்கையாளர்?
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ். மகேஸ்வரனிடம் கேட்டபோது, ‘பாஸ்கரைக் கொலை செய்ததாகக் கூறப்படும் மாரீஸ்வரன் தன்பாலின சேர்க்கையாளர் என்று கூறப்படுகிறது. இதையறிந்த பாஸ்கர், அதுகுறித்து ஊருக்குள் பலரிடம் சொல்லியதாகவும், இதனால் மாரீஸ்வரனை ஒதுக்கிவைக்க ஊரில் சிலர் முடிவு செய்ததாகவும் தெரிகிறது. இதனால், அவமானமடைந்த மாரீஸ்வரன், பாஸ்கரை கொலை செய்திருக்கலாம். மாரீஸ்வரனைப் பிடிக்க 4 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன’ என்றார்.

அடுத்த ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் திருவள்ளுவர் பிறந்தநாள்

நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அடுத்த ஆண்டு முதல் திருவள்ளுவர் பிறந்த நாள் கொண்டாடப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று அறிவித்தார்.


உத்தராகண்ட் மாநில பாஜக உறுப்பினர் தருண் விஜய் இதுதொடர்பாக மாநிலங்களவையில் கோரிக்கை வைத்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதுகுறித்து ஸ்மிருதி இரானி செய்தியாளர்களிடம் கூறும்போது, "திருவள்ளுவர் பிறந்த நாளை நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகளில் கொண்டாட வேண்டும் என தருண் விஜய் மாநிலங்களையில் கோரிக்கை வைத்தார். இதற்கு அனைவருமே ஒருமனதாக ஆதரவளித்தனர். எனவே, அடுத்த ஆண்டு முதல் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் திருவள்ளுவர் பிறந்த நாள் கொண்டாடப்படும்.

மேலும் பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் திருவள்ளுவர் பற்றிய நூல்கள் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விநியோகிக்கப்படும். அவரை பற்றிய கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் திருக்குறள் போட்டிகளும் பள்ளிகளில் நடத்தப்படும்" என அவர் தெரிவித்தார்.

முன்னதாக, தருண் விஜய் தலைமையில் டெல்லி தமிழ் சங்கத்தின் பொதுச்செயலாளர் கண்ணன், உபதலைவர் கே.வி.கே.பெருமாள், தமிழ் பண்பாட்டுக் கழகச் செயலாளர் எம்.நடேசன் உட்பட பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் 60 பேர் ஸ்மிருதி இரானியை அவரதுஅலுவலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இவர்களுடன் மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் சென்றிருந்தார்.

Next 7th Pay Commission Meeting at Jodhpur

Next 7th Pay Commission Meeting at Jodhpur from 12th to 15th December
7th Central Pay Commission is proposed to visit Jodhpur to meet the CG Employees
Associations and Trade Union delegates from 12th to 15th December, 2014.
The Commission, headed by its Chairman, Justice Shri A. K. Mathur, proposes to visit Jodhpur from 12th to 15th December, 2014. The Commission would like to invite various entities/associations/federations representing any/all categories of employees covered by the terms of reference of the Commission to present their views.

கருப்பு பேட்ஜ் அணிந்து பணி - DINAMALAR

கச்சிராயபாளையம்: பள்ளி ஆசிரியர் தாக்கப்பட்டதை கண்டித்து பள்ளி ஆசிரியர்கள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணி புரிந்தனர். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்
கடந்த 20 ம் தேதி தாக்கப் பட்டார். இதனை கண்டித்தும், தாக்கியவர்களை கைது செய்யக்கோரியும் தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முது நிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் நேற்று பள்ளிக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து செல்ல முடிவு செய்யயப்பட்டது. சங்கத்தின் மாநில தலைவர் செல்வராஜ் தலைமையிலான ஆசிரியர்கள் குதிரைச்சந்தல் அரசு உயர் நிலை பள்ளியில் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து சென்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் - DINAMANI

சென்னையில் பள்ளியில் புகுந்த கும்பல் ஆசிரியரை தாக்கியதைக் கண்டித்து தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

சென்னை லயோலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிபவர் பாஸ்கர்ராஜ். இவரை கடந்த (20.11.14) வெள்ளிக்கிழமை பள்ளிக்குள் நுழைந்த கும்பல் அடித்தும் பெண் ஆசிரியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியும், வகுப்பறையில் இருந்த தளவாட பொருள்களை சேதப்படுத்தியும் சென்றனராம்.
இச்சம்பவத்தைக் கண்டித்து தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டனத்தை தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சியை அடுத்த குதிரைச்சந்தல் அரசினர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியரும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவருமான பொன்.செல்வராஜ் தலைமையில் வகுப்புக்கு ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர்.

TNPSC: CHILD DEVELOPMENT PROJECT OFFICER IN TAMIL NADU GENERAL SERVICE, 2012-2013

TNPSC: CHILD DEVELOPMENT PROJECT OFFICER IN TAMIL NADU GENERAL SERVICE, 2012-2013

CLICK HERE

சொத்துக் கணக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு ஊழியர்களுக்கு உத்தரவு

அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் தங்கள் சொத்து மற்றும் கடன் விவரங்களை வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என லோக்பால் சட்டத்தின் கீழ் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்களவையில் பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்கள் லோக்பால் சட்டத்தின் கீழ் தங்களின் சொத்துக் கணக்கை சமர்ப்பிப்பதற்கான தேதி டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் பெயரிலும், மனைவி, குழந்தைகள் பெயரிலும் உள்ள சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்.

குரூப் ஏ, பி, சி பிரிவில் உள்ள சுமார் 26 லட்சம் அரசு ஊழியர்கள் இவ்விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். குரூப்-டி பிரிவில் வரும் அலுவலக உதவியாளர்களுக்கு இந்த உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கையிருப்பு ரொக்கம், வங்கியிருப்பு, கடன் பத்திரங்கள், பங்குகள், காப்பீடு, வருங்கால வைப்பு நிதி, நகை, வாகனங்கள் என அனைத்து வித சொத்து மற்றும் கடன் விவரங்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 32


பொது அறிவியல்
961. கல்லீரல் (Spleen) வீங்கி பெரிதாகும் நோய் எது?
962. எய்ட்ஸ் நோயை கண்டறிய உதவும் பரிசோதனையின் பெயர் என்ன?
963. சிறுநீரகங்களின் மேல் கொழுப்பு அடுக்குக்குள் ஜோடியாக காணப்படும் சுரப்பி எது?

964. நெஃப்ரான் எனப்படும் வடிகட்டிகள் உடலின் எந்த பகுதியில் காணப்படுகின்றன?
965. இரு வேறு பிரிவு ரத்தத்தை சேர்த்தால் என்னவாகும்?
966. முதல் சோதனை குழாய் குழந்தை பெற்ற பெண்மணி யார்?
967. சீனர்களின் ஊசி மருத்துவ முறையின் பெயர் என்ன?
968. இந்தியாவில் மருத்துவத்துக்காக வழங்கப்படும் விருது எது?
969. கடல் பற்றிய ஆராய்ச்சி படிப்பின் பெயர் என்ன?
970. ரத்த வெள்ளை அணுக்கள் அதிகமானால் தோன்றும் நோய் எது?
971. மையோபியா என்பது என்ன?
972. சாதாரண வீட்டு ஈக்களால் பரவும் நோய்கள் எவை?
973. நமது உடலில் எத்தனை துளைகள் உள்ளன?
974. Oology என்பது எதைப்பற்றிய துறை?
975. சூரியனுக்கு அருகில் உள்ள கோள் எது?
976. பூமியை விட சூரியன் எத்தனை மடங்கு பெரியது?
977. பூமி சூரியனுக்கு மிக அருகில் எந்த மாதத்தில் வரும்?
978. நிலவில் முதல்முதலில் காலடி வைத்தவர் யார்?
979. விண்வெளியில் முதலில் பறந்தவர் யார்?
980. இந்தியாவின் முதல் செயற்கைகோள் எது?
981. நிலவுக்கு மனிதனை ஏந்திச்சென்ற விண்கலம் எது?
982. விண்வெளியில் முதலில் நடந்தவர் யார்?
983. விண்வெளிக்குச் சென்ற 135-வது வீரர் யார்?
984. ரஷ்ய விண்வெளி நிலையத்தின் பெயர் என்ன?
985. விண்வெளியில் நடந்த முதல் பெண்மணி யார்?
986. இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை எது?
987. உலக கொசு ஒழிப்பு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
988. ஆகாய விமானங்களில் ஒளிச்செறிவைக் கட்டுப்படுத்த ஜன்னல் கண்ணாடிகளாக பயன்படுவது எது?
989. வானம் நீல நிறமாக தோன்றுவதற்கு காரணம் என்ன?
990. D.D.T. என்பது என்ன?
991. கிளெப்டோமேனியா என்றால் என்ன?
992. ஊறுகாய் தயாரிப்பில் பயன்படும் அறிவியல் கொள்கை எது?
993. கள்ள ரூபாய் நோட்டுகளையும், போலிபத்திரங்களையும் கண்டறிய உதவும் கதிர்கள் எவை?
விடைகள்
961. ஸ்பிலினோமெக்கலி 962. ELISA Test 963. அட்ரினல் சுரப்பி 964. இரு சிறுநீரகங்களில் 965. ரத்தம் கட்டிக்கொள்ளும் 966. லெஸ்லி பிரவுன் 967. அக்குபஞ்சர் 968. தன்வந்திரி 969. ஓசனோகிராபி (Oceanography) 970. லூக்கேமியா 971. கிட்டப்பார்வை குறைபாடு 972. டைபாய்டு, சீதபேதி 973. ஒன்பது துளைகள் 974. பறவைகளின் முட்டைகளைப் பற்றிய அறிவியல் 975. புதன் 976. 12 ஆயிரம் மடங்கு 977. டிசம்பர் மாதம் 978. நீல் ஆம்ஸ்ட்ராங் 979. யூரி ககாரின் 980. ஆரியபட்டா 981. அப்போலோ-II 982. அலெக்ஸி லியோல் 983. இந்தியாவைச் சேர்ந்த ராகேஷ் சர்மா 984. மிர் விண்வெளி நிலையம் 985. ஸ்வெட்லானா சவிட்ஸ்காயா (ஜூலை 25, 1984) 986. பிரிதிவி 987. ஆகஸ்ட் 20 988. போலராய்டு 989. ஒளிச்சிதறல் (Scattering of Light) 990. ஒரு பூச்சிக்கொல்லி (Insecticide) 991. பொருட்களை திருடும் ஒரு வகை நோய் 992. பிளாஸ்மாலைசிஸ் 993. அல்ட்ரா வயலட் கதிர்கள்

விடுமுறை குறித்த விபரம் தெரியாமல் பள்ளிக்கு வந்து திரும்பிச் சென்ற மாணவர்கள்

கல்வித்துறையின் தெளிவான உத்தரவு இல்லாததால் நேற்று மாணவர்கள் பள்ளிக்கு வந்த பிறகு விடுமுறை என திருப்பி அனுப்பப்பட்டனர். நேற்று முன்தினம் இரவிலிருந்து நேற்று காலை வரை சிவகங்கை மாவட்டத்தில் பல பகுதிகளில் பரவலான மழை பெய்தது . நேற்று ஒருநாள் மட்டும் பெய்த
மழையளவு (மில்லி மீட்டரில்): சிவகங்கை - 30,காரைக்குடி - 24, திருப்பத்தூர் - 17.2,தேவகோட்டை - 27,மானாமதுரை - 27, திருப்புவனம் - 20.4,இளையான்குடி 32.சராசரி மழையளவு 25.3 மி.மீ.,இந்த தொடர் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதா, வேண்டாமா என பள்ளிகள் யோசித்தன.

கலெக்டரிடமிருந்தோ, சி.இ.ஓ., விடம் இருந்தோ முறையான அறிவிப்பு வராததால், தொடர்ந்து அந்தந்த அலுவலகங்களுக்கு போன் மூலம், பள்ளி தலைமை ஆசிரியர்கள் தொடர்பு கொண்டனர். ஆயினும் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. முடிவில் காலை 8 மணிக்கு பிறகுதான், மழைக்கு தகுந்தவாறு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவெடுத்து கொள்ளலாம் என கூறப்பட்டது.
பல பெற்றோர், மழையிலும் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து வந்திருந்தனர். வெளியூரிலிருந்து பஸ்சில் வரும் மாணவர்கள், விடுமுறை குறித்த அறிவிப்பு இல்லாததால், அவர்களும் வந்தனர். பள்ளி விடுமுறை என அறிவிக்கப்பட்டதால் அவர்கள் மீண்டும் மழையில் திரும்பி சென்றனர். ஊரக பகுதிகளில் உள்ள பல பள்ளிகளுக்கு 50 சதவீதம் மாணவர்கள் வந்ததால் மதியம் வரை பள்ளி நடத்தி, அதன் பிறகு விடுமுறை விடப்பட்டது.
மழையின் காரணமாக பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு, இன்று (சனிக்கிழமை) விடுமுறையா, பள்ளியா? என்ற குழப்பம் உள்ளது. தனியார் மெட்ரிக்., பள்ளிகளில், எஸ்.எம்.எஸ். அனுப்பி, பள்ளி திறக்கப்படும் தகவலை தெரிவித்து விடுகின்றனர். ஆனால், அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் அத்தகைய வசதி இல்லாததால் இந்த தகவலை அவர்களிடம் தெரிவிக்க இயல்வதில்லை. பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறும்போது: கடந்த ஒரு மாதத்துக்கு முன்பும், தொடர் மழை ஏற்பட்டபோது, மாவட்ட நிர்வாகம் முறையான தகவலை முன் கூட்டியே தெரிவிக்கவில்லை. இதனால் பல பள்ளிகள் 50 சதவீத மாணவர்களுடன் இயங்கியது.
ஏற்கனவே காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் மாணவர்கள் அவதிப்பட்டு வரும் வேளையில், மழை நேரங்களில் உரிய விடுமுறை அறிவிப்பை வெளியிட வேண்டும் அல்லது தலைமை ஆசிரியர்களே விடுமுறை அளிக்கலாம் என எழுத்து பூர்வமாக சுற்றறிக்கை அனுப்ப வேண்டும், என்றார்.

Friday, 28 November 2014

"முழு சுகாதார தமிழகம்"-மாநிலத் திட்ட இயக்குனர் செயல்முறை


"முழு சுகாதார தமிழகம்"-பள்ளி மாணவ மாணவியருக்கு பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவிலான சுத்தம் சுகாதாரம் சார்ந்து பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்துதல் சார்பு -மாநிலத் திட்ட இயக்குனர்
செயல்முறை













கணினிப் பயிற்றுநர் நேரடி நியமனம்: பதிவு மூப்பு பட்டியல் இன்று வெளியீடு - டிசம்பர் 24-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு

கணினிப்பயிற்றுநர் நேரடி நியமனத்துக்கு தகுதிவாய்ந்தவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்புப்பட்டியலை சென்னை மாவட்ட வேலைவாய்ப்புஅலுவலகம் சனிக்கிழமை வெளியிடுகிறது. தமிழக பள்ளி கல்வித்துறையில் 652 கணினி பயிற்றுநர் பணியிடங்கள்நேரடி
நியமன முறையில் வேலைவாய்ப்புஅலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில்நிரப்பப்பட உள்ளன.
இதற்காக, பி.எஸ்.ஸி., பி.எட்., கணினி அறிவியல், பி.சி.., பி.எட். முடித்த குறைந்தபட்சம்18 முதல் 57 வயது வரை உள்ளவர்களின்பதிவு மூப்புப் பட்டியல் வேலை வாய்ப்பு அலுவலகஇணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளஅறிவிப்பு: வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் வெளியிடப்படும்பதிவு மூப்புப் பட்டியலில் தங்களின் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதைதகுதியானவர்கள் பார்த்துக்கொள்வது அவசியம்.
அதில், ஏதாவது குறைகள் இருக்குமானால், டிசம்பர்12-ஆம் தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு நிவர்த்திசெய்துகொள்ள வேண்டும்.
இந்த நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பு டிசம்பர் 24-ஆம் தேதி முதல்30-ஆம் தேதி வரை நடத்தஉத்தேசிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதம் தகுதியானவர்களுக்கு தனித்தனியாக அனுப்பி வைக்கப்படும். ஆசிரியர்தேர்வு வாரிய இணையதளத்திலும் வெளியிடப்படும்எனத் தெரிவித்துள்ளது.

ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கிளை சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,
உதவித்தொடக்க கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார தலைவர் சிவராமன் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் தங்கபாசு முன்னிலை வகித்தார். வட்டார செயலாளர் பழனிக்குமார் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ரங்கராஜ், வட்ட கிளை தலைவர் சின்னமாரிமுத்து ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், ஏழு சதவீத அகவிலைப்படி நிலுவைத்தொகை வழங்கப்படாததைக் கண்டித்தும், உதவித்தொடக்க கல்வி அலுவலரிடம் ஆசிரியர்களின் கோரிக்கைகளை குறையாக தெரிவித்து கண்டுகொள்ளாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தேசிய திறனாய்வு தேர்வு: கீ - ஆன்சர் வெளியீடு

சென்னை: அரசு தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ள, தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடைகள் குறித்த கருத்துகளை தெரிவிக்கலாம் என, தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அறிவிப்பு: சமீபத்தில் நடந்த, தேசிய திறனாய்வு தேர்வுக்கான, விடைகள், ஆன் - லைனில், டிச., 12ம் தேதி வரை, அரசு தேர்வுகள் இயக்ககத்தின், www.tndge.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. மாணவர்கள் மற்றும் பெற்றோர், தங்கள் கருத்துகளை, dgedirector@gmail.com என்ற முகவரிக்கு, இ - மெயில் வாயிலாக, அனுப்பலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை அதிரடி உத்தரவு


நாமக்கல்: தமிழக அரசின் கட்டுக்குள், மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளிகள், வரும் கல்வியாண்டு முதல் தமிழை கட்டாய பாடமாக நடத்த வேண்டும் என்ற உத்தரவை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட
தனியார் பள்ளிகள், அவர்களின் அங்கீகாரம் தொடர்பான விவரங்களை, வரும் 30க்குள் கல்வித்துறை அதிகாரிகளிடம் சமர்பிக்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாநில கல்வித் திட்ட, தமிழ்வழி பாடத்திட்டத்தில், அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகள் செயல்படுகிறது. மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தில், தமிழ் அல்லாத மற்ற விருப்பமொழி பாடத்திட்டத்தில், 565 தனியார் சி.பி.எஸ்.ஐ., ஐ.சி.எஸ்.இ. பள்ளி, மத்திய அரசின் 41 கேந்திர வித்யாலயா, இரண்டு நவோதயா, ஒரு சைனிக் பள்ளிகள் செயல்படுகிறது.
கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதி பள்ளிக்கல்வி இயக்குனரகம், தமிழக அரசின் கட்டுக்குள், மத்திய வாரிய பள்ளிகளை கொண்டு வர, ஓர் புதிய உத்தரவை பிறப்பித்தது. அதில், தமிழக அரசின் தமிழ் கற்றல் சட்டத்தின்படி, தனியார் நர்சரி, பிரைமரி, மேல்நிலைப்பள்ளி, தமிழை கட்டாய பாடமாக கற்பிக்க வேண்டும்.
குறிப்பாக, கேந்திர வித்யாலயா, நவோதயா, சைனிக் பள்ளிகள் தவிர, மற்ற பள்ளிகள் அனைத்தும், வரும், கல்வியாண்டு வாரியாக, அதாவது, 2015--16ல், 1ம் வகுப்பு, 2016--17ல், 1, 2ம் வகுப்பு, 2017--18ல், 1, 2, 3ம் வகுப்பு, 2018--19ல், 1, 2, 3, 4ம் வகுப்பு, 2019--20ல், 1 முதல், 5ம் வகுப்பு என்ற வரிசையில், வரும், 2024--25ம் ஆண்டுக்குள், 1 முதல், எஸ்.எஸ்.எல்.சி., வகுப்பு வரை, அமல்படுத்த வேண்டும் என, உத்தரவிட்டது.
இதன்மூலம் மத்திய கல்விய வாரிய பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்டு வகுப்பு எடுத்த தனியார் சி.பி.எஸ்.ஐ.,- ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள், மாநில அரசின் கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. கடந்த காலங்களில், மாநில பாடத்திட்டத்தில் செயல்படும், தனியார் பள்ளிகளிடம் இருந்து, பள்ளிகளின் தரம் தொடர்பாக தொடர் அங்கீகார சான்று, ஒவ்வொரு ஆண்டும் பெறப்படும். அதன்படி, நடப்பாண்டு, வருவாய் துறையினரிடம் இருந்து கட்டிட உரிமைச் சான்று, அங்கீகரிக்கப்பட்ட கட்டட இன்ஜினியரிடம் இருந்து, கட்டிட உறுதிச் சான்று, சுகாதரத்துறையிடம் இருந்து, சுகாதாரச் சான்று, தீயணைப்பு துறையிடம் இருந்து, தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு என, நான்குவகை சான்று பெற்று, சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரியிடம், தனியார் பள்ளிகள் சமர்ப்பித்து வருகின்றன.
கடந்த காலங்களில், சி.பி.எஸ்.ஐ., - ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள், மத்திய கல்வி வாரியத்தில், சம்பந்தப்பட்ட ஆவணங்களை சமர்பித்து வந்தனர். ஆனால், தற்போதைய புதிய உத்தரவால், நீதிபதி சம்பத் கமிஷன் பரிந்துரை செய்த, 14 விதிமுறைகளை, மத்திய கல்வி வாரிய பாடத்திட்ட தனியார் பள்ளிகள், கட்டாயம் பின்பற்ற வேண்டும். இந்த விவரங்களை, வரும் 30ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என, கல்வித்துறை கட்டாய உத்தரவிட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநில அரசின் கல்வித்திட்டத்தில் செயல்பட்டு வந்த, தனியார் பள்ளிகளிடம் இருந்து மட்டுமே, கடந்த காலங்களில் தொடர் அங்கீகார சான்று பெறப்பட்டது. ஆனால், வரும் கல்வியாண்டில், மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தில் செயல்படும் தனியார் சி.பி.எஸ்.ஐ.,- ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள், தமிழை கட்டாய பாடமாக, துவக்கப் பள்ளியில் இருந்து துவங்க வேண்டும்.
அதன் தொடர்ச்சியாக, மேற்கண்ட தனியார் பள்ளிகளை, மாநில அரசின் கல்வித்துறை கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக, பள்ளிகளுக்குள் நடக்கும் விதிமீறல், மாணவர் தொடர்பான பிரச்னை ஆகியவற்றை, மாநில அரசு கையாள வேண்டியுள்ளதால், அவர்களின் அங்கீகார விவரங்களை பரிசோதிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 31


பொது அறிவியல்
926. மனித உடலில் மிகச்சிறிய எலும்பு எது?
927. சிறுநீரில் அதிகம் காணப்படும் உப்பு எது?

928. உடலில் ஸ்டார்ச் எதுவாக மாற்றம் அடைகிறது?
929. இறந்த பிறகும் மனிதனின் உடலில் வளரும் பகுதிகள் எவை?
930. ரத்தத்தில் கார்பன்-டை-ஆக்ஸைடை பிரிப்பது எது?
931. ஆரோக்கியமான மனிதர் ஒருவர் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம்?
932. இன்சுலின் எங்கு சுரக்கிறது? 933. பிட்டியூட்டரி சுரப்பி எங்கு உள்ளது?
934. ஆரோக்கிய மனிதனின் ரத்த அழுத்தம் எவ்வளவு இருக்கும்?
935. கோழி முட்டையில் இருந்து குஞ்சு பொறிக்க எத்தனை நாட்கள் ஆகும்?
936. குட்டி போட்டு இனத்தைப் பெருக்கும் மீன் இனம் எது?
937. மூளையே இல்லாத கடல்வாழ் உயிரினம் எது?
938. எந்த வைட்டமின் குறைவால் பெரி பெரி நோய் ஏற்படுகிறது?
939. விரைவாக குஞ்சுபொறிக்க உதவும் சாதனம் எது?
940. உடலமைப்பை பற்றிய அறிவியல் பிரிவின் பெயர் என்ன?
941. அறுவை சிகிச்சை கருவிகளை தூய்மையாக்கும் முறையை கண்டறிந்தவர் யார்?
942. அதிகமான ஒளியைக் கண்டு தோன்றும் பயத்தின் பெயர் என்ன?
943. ரத்த சிவப்பு அணுக்களின் ஆயுட்காலம் எவ்வளவு?
944. மனித உடலில் எத்தனை லிட்டர் ரத்தம் இருக்கும்?
945. எத்தனை வயதுக்குப் பின்னர் மூளையின் வளர்ச்சி நின்று விடுகிறது?
946. ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகளைக் கொண்ட உயிரி எது?
947. தோல் உரிக்கும் உயிரினங்கள் யாவை?
948. இறகு இல்லாத பறவை எது? 949. யானையின் சராசரி ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகள்?
950. தன் தலையை முழுவதும் பின்புறமாக திருப்பக்கூடிய பறவை எது?
951. பசுவின் இரைப்பையில் எத்தனை பகுதிகள் உள்ளன?
952. பின்புறமாக படுத்து உறங்கும் உயிரினம் எது?
953. முட்டையின் வெள்ளைக்கருவில் உள்ள புரோட்டீன் எது?
954. அதிக வாழ்நாள் கொண்ட உயிரினம் எது?
955. போலியோ தடுப்பு மருந்தை கண்டறிந்தவர் யார்?
956. பச்சையம் இல்லாத தாவரம் எது?
957. பாலை தயிராக்குவது எது?
958. எலும்புகளைப் பற்றி படிக்கும் படிப்பின் பெயர் என்ன?
959. கரப்பான் பூச்சியின் கூட்டுக்கண்ணில் அடங்கியுள்ள தனிமக்கண்ணின் பெயர் என்ன?
960. உமிழ்நீரில் அடங்கியுள்ள ஆண்டிபாக்டீரியல் காரணி எது?
விடைகள்
926. நடுச்செவி எலும்பு 927. யூரியா 928. சர்க்கரை 929. நகம், உரோமம் 930. நுரையீரல் 931. 90 நாட்களுக்கு ஒருமுறை 932. கணையத்தில் 933. மூளையின் அடிப்பகுதியில் 934. 120/80 935. 22 நாட்கள் 936. திமிங்கலம் 937. நட்சத்திர மீன் 938. வைட்டமின் B1 939. இன்குபேட்டர் 940. அனடாமி (Anatomy) 941. ஜோசப் லிஸ்டர் 942. Photophobia 943. 100 முதல் 120 நாட்கள் வரை 944. 5 முதல் 6 லிட்டர் வரை 945. 15 வயதுக்கு மேல் 946. மண்புழு 947. பாம்பு, கரப்பான் பூச்சி, பட்டுப்பூச்சி 948. கிவி பறவை 949. 47 வருடங்கள் 950. ஆந்தை 951. நான்கு பகுதிகள் 952. மனிதன் 953. ஆல்புமின் 954. நீலத்திமிங்கலம் (500 ஆண்டுகள்) 955. ஜோனஸ் இ.சால்க் 956. காளான் 957. ஈஸ்டுகள் 958. ஓஸ்டியோலாஜி (Osteology) 959. ஓமட்டியம் 960. லைசோம்
பாக்டீரியாவால் ஏற்படும் நோய்கள்
1. நிமோனியா 2. காசநோய் 3. பிளேக் 4. காலரா 5. வயிற்றலைச்சல் 6. குன்னிறுமல் 7. டிப்தீரியா 8. தொழுநோய் வைரஸால் உண்டாகும் நோய்கள் 1. ராபீஸ் 2. சின்னம்மை 3. மீசில்ஸ் 4. பெரியம்மை 5. இன்புளூன்சா 6. டிம்ப்லர்
வைரஸால் உண்டாகும் நோய்கள்
1. ராபீஸ் 2. சின்னம்மை 3. மீசில்ஸ் 4. பெரியம்மை 5. இன்புளூன்சா 6. டிம்ப்லர்

மாணவர்களை ஏன் தண்டிக்கிறீர்கள்?- சமஸ்கிருத பாட அறிமுகம் தொடர்பாக மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள்| கோப்புப் படம்.
உங்கள் பிழைகளுக்கு மாணவர்களை ஏன் தண்டிக்கிறீர்கள் என கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழிப்பாடத்தை உடனடியாக ரத்து
செய்து விட்டு அதற்குப் பதிலாக சமஸ்கிருதப் பாடத்தைக் கற்றுத்தரும் மத்திய அரசின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் இடைநிலை வகுப்புகளில் மும்மொழிக் கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி முதல்மொழியாக ஆங்கிலமும், இரண்டாவதாக பிராந்திய மொழியும், மூன்றாவதாக சமஸ்கிருதம் அல்லது ஏதேனும் ஒரு நவீன இந்திய மொழியும் கற்றுத்தரப்பட்டு வந்தன.
வெளிநாட்டு வேலைவாய்ப்பைக் கருத்தில் கொண்டு ஏதேனும் ஒரு வெளிநாட்டு மொழியை கற்பிக்க முந்தைய மத்திய அரசு முடிவெடுத்தது. இதையடுத்து 2011-12 ஆம் கல்வியாண்டிலிருந்து மூன்றாவது மொழியாக சமஸ்கிருதத்திற்குப் பதிலாக வெளிநாட்டு மொழி அறிமுகம் செய்யப்பட்டது.
கடந்த செப்டம்பர் மாதம் இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாத நிலையில், கடந்த 27.10.2014 அன்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தலைமையில் நடைபெற்ற கேந்திரிய வித்யாலயா சங்கதன் ஆளுனர்கள் வாரியத்தின் 99-வது கூட்டத்தில் ஜெர்மன் உள்ளிட்ட அன்னிய மொழிப் பாடங்களை ரத்து செய்துவிட்டு அவற்றுக்குப் பதிலாக முன்பிருந்தவாறு சமஸ்கிருதம் அல்லது ஏதேனும் ஒரு நவீன இந்திய மொழியை கற்றுத்தர வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் சமஸ்கிருதப் பாடத்தை அறிமுகம் செய்யவும் கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது. இம்முடிவுகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அமைச்சர் ஸ்மிரிதி இராணி ஆணையிட்டார்.
இந்நிலையில் மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து மாணவர்களின் பெற்றோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், "நடப்புக் கல்வி ஆண்டில், கேந்திரிய வித்யாலா பள்ளிகளில் ஜெர்மன் மொழி கற்பித்தலை தொடர்வதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்" என்றது.
இதற்கு பதிலளித்த அட்டர்னி ஜெனரல், "ஜெர்மன் அரசு ஆதரவுடன் இயங்கும் மேக்ஸ்முல்லர் பவன் நிர்வாகத்துடன் கேந்திரிய வித்யாலயா ஒப்பந்தம் செய்துகொண்டது சட்டப்படி செல்லாது. எனவே அவ்வாறு தொடர முடியாது" என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "உங்கள் தவறுகளுக்கு மாணவர்களை ஏன் தண்டிக்கிறீர்கள்" என கடிந்து கொண்டனர்.
மேலும், கேந்திரிய வித்யாலா பள்ளிகளில் சமஸ்கிருத பாடத்தை அறிமுகப்படுத்துவதை அடுத்த கல்வி ஆண்டுக்கு ஒத்திவைப்பதில் தனது நிலைப்பாட்டை 4 வாரங்களுக்குள் தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
அண்மையில், ஆசியான் உச்சி மாநாட்டின்போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்கல், "கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழி கற்பித்தலை தொடர்வதை இந்தியா பரிசீலிக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார் என்பது கவனிக்கத்தக்கது.

Expected D.A from January 2015

  The next index of CPI-IW for the month of November, 2014 will be released on 30th December 2014. The same will also be available on the office website www.labourbureau.gov. in.

 

 
         Presently, the value of AICPIN for the month of October has been released. The value remains at 253 points. When compared to the AICPIN value of September, the present value has not gone up or down and remains constant.
 
                   To calculate the DA for Jan 2015 accurately, we need the AICPIN value for the next two months. However, we only have the AICPIN value for four months now. In the coming months, if the AICPIN value remains at 253 or 1 point increase based (254 ,255,) then we may get up to 6% DA increase i.e. 113%.

பள்ளியிலேயே சகமாணவனால் மாணவன் குத்திக்கொலை: அருப்புக்கோட்டையில் பயங்கரம்!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் 8ஆம் வகுப்பு மாணவன் சகமாணவனால் பள்ளிக்கூடத்திலேயே கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

         அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு அயன்கரிசல்குளத்தை சேர்ந்த விவசாயி கோபால் என்பவரது மகன் பாஸ்கரன் (13) 8ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு அரசு டவுன் பஸ்சில் பந்தல்குடிக்கு வந்த பாஸ்கரன், பள்ளிக்கு சென்று தனது வகுப்பறையில் உட்கார்ந்திருந்தார்.

அப்போது அதே பள்ளியை சேர்ந்த மற்றொரு மாணவன் பாஸ்கரனிடம் வந்து தகராறு செய்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அந்த மாணவன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாஸ்கரனின் வயிறு உள்பட பல இடங்களில் கத்தியால் குத்தி விட்டு பள்ளியை விட்டு ஓடி விட்டார். பலத்த காயமடைந்த பாஸ்கரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்த பந்தல்குடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்த மாணவன் பாஸ்கரன் உடலை பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கத்தியால் குத்திய அந்த மாணவனுக்கும், பாஸ்கரனுக்கும் இடையே இருந்த முன் விரோதத்தால் அந்த கொலை சம்பவம் நடந்திருப்பதாக காவல்துறையினர் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கத்தியால் குத்திய அந்த மாணவன் யார் என்ற விபரத்தை கண்டுப்பிடிக்கும் விசாரணையில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர். பள்ளி வளாகத்தில் கொலை நடந்திருப்பதால் உடனடியாக பந்தல்குடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் திண்டுக்கல் மாவட்டத்தில், பள்ளியிலேயே மாணவர் ஒருவர் சகமாணவனால் படுகொலை செய்யப்பட்டார். தற்போது அருப்புகோட்டையிலும் பள்ளியில் மாணவர் ஒருவர் சகமாணவரால் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.