This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Thursday, 31 July 2014

11 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் இன்று வெளியீடு - தினமணி


ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியல் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) வெளியிடப்பட உள்ளது.


ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் பேரிலிருந்து வெயிட்டேஜ் மதிப்பெண் மூலம் இந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வழங்கப்பட்ட 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப் பிறகு மொத்தம் 72 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர்.

கடந்த மே மாதம் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் 935 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இதில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் விவரம் ஜூலை 14-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த மதிப்பெண்ணில் திருத்தம் தேவைப்படுவோருக்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. இந்த முகாம்களுக்கு வந்தவர்களில் சுமார் 600 பேர் சரியான ஆவணங்களுடன் மதிப்பெண்ணில் திருத்தம் கோரியிருந்தனர். அவர்களது மதிப்பெண்ணில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.தேர்வுப் பட்டியல் தயாரிப்பதற்கான அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த நிலையில், 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியல் அநேகமாக வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

இடைநிலை ஆசிரியர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் விவரங்கள் அநேகமாக அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பட்டதாரி ஆசிரியர் காலி இடங்கள் அதிகரிப்பு: இறுதி தேர்வு பட்டியல் இன்று வெளியீடு

பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளுக்கு 10,726 பட்டதாரி ஆசிரியர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப் படையில் தேர்வு செய்யப்படு வார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.

மேலும், ஆதி திராவிடர் நலத் துறை பள்ளிகள், பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை, கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் இருந்து காலியிடங்கள் வரும் பட்சத்தில் காலியிடங்கள் அதிகரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இறுதி தேர்வு பட்டியலையும், அதிகரிக்க வுள்ள காலியிடங்களின் எண்ணிக்கை யையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு சென்றுவந்த பட்டதாரி ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, தற்போது கூடுதலாக சுமார் 700 காலியிடங்கள் வந்துள்ளன. இறுதி தேர்வு பட்டியல் வெள்ளிக்கிழமை (இன்று) பி்ற்பகல் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். தேர்வர்கள் தங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு எண்ணை தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் (www.trb.tn.nic.in) குறிப்பிட்டு, வேலைக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறோமா, இல்லையா என்பதை அறியலாம்.

இடைநிலை ஆசிரியர் பணி யிடங்களை கணக்கெடுக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான தேர்வு பட்டியலை ஆகஸ்ட் 13 அல்லது 14-ம் தேதி வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

TNTET - 15 ஆயிரம் புதிய ஆசிரியர் இன்று பட்டியல் வெளியீடு - தினமலர்

பள்ளி கல்வி துறைக்கு, புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள, 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), இன்று, இணையதளத்தில் வெளியிடுகிறது.

ஏற்கனவே நடந்த டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற, 43 ஆயிரம் பேரில் இருந்து, 10,726 பட்டதாரி

ஆசிரியரும், 4,000 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று, கூடுதலாக, 500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், டி.ஆர்.பி.,க்கு வழங்கப்பட்டதாக, துறை வட்டாரம் தெரிவித்தது. எனவே, 11,226 பட்டதாரி ஆசிரியர், 4,000 இடைநிலை ஆசிரியர் என, 15,226 பேர் அடங்கிய, இறுதி பட்டியலை, இன்று காலை அல்லது பிற்பகலில், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட உள்ளது.

குரூப்-1 தேர்வில் முறைகேடு புகார் தேர்ச்சி செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 83 பேரின் மேல் முறையீட்டு மனு உடனடியாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு - DINATHANTHI


புதுடெல்லி, ஆக.1-டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்ற 83 பேரின் நியமனம் செல்லாது என்ற தீர்ப்பில் மாற்றம் கோரி பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் டி.என்.பி.எஸ்.சி
சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உடனடியாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. 83 பேர் தேர்வு2000-2001-ம் ஆண்டுக்கான காலி இடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்ற 83 பேர் வெவ்வேறு அரசு உயர் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் அந்த தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி நடராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு 83 பேரும் முறைகேடு செய்திருப்பது நிபுணர் குழுவின் அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளதாகவும், எனவே அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றது செல்லாது என்றும், எனவே அவர்கள் வகித்து வரும் அரசு பதவிகளில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு இந்த தீர்ப்பை எதிர்த்து பாதிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் டி.என்.பி.எஸ்.சி. சார்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து ஐகோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்தது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பில் மாற்றம் செய்யக் கோரி பாதிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தேர்வை நடத்திய டி.என்.பி.எஸ்.சி. சார்பாக புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. தீர்ப்பில் மாற்றம் தேவைஅந்த மனுவில் 2000-2001-ம் ஆண்டு நடந்த தேர்வில் முறைகேடுகள் நடந்தனவா? என்பது குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்றை ஐகோர்ட்டு நியமித்திருந்ததாகவும் அந்த குழு முறையான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் தவறாக தந்த அறிக்கையின் அடிப்படையில் தேர்வானவர்களின் தேர்ச்சி செல்லாது என்று ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி இருப்பதாகவும் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது. எனவே, தவறான அந்த அறிக்கையை விட்டுவிட்டு புதிய நிபுணர் குழு மூலம் மீண்டும் விசாரணை செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு இருக்கிறது. மேலும் தற்போது தேர்வாகியுள்ள 83 பேரும் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உயர் அதிகாரிகளாக பணி புரிந்து வருவதாகவும், வயது பிரச்சினை காரணமாக மீண்டும் ஒருமுறை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது சாத்தியமற்றது என்றும் எனவே, சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பில் மாற்றங்கள் தேவை என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உடனடியாக விசாரிக்க மறுப்புஇந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நேற்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அனில் ஆர்.தவே, விக்ரம்ஜித் சென், பினாகி சந்திரகோஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் டி.என்.பி.எஸ்.சி. சார்பில் முறையிடப்பட்டது. டி.என்.பி.எஸ்.சி. சார்பில் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி ஆஜரானார். வழக்கு விசாரணை தொடங்கியதும், இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்றும் இன்னும் 10 நாட்களுக்குள் வேறு அமர்வு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

கால்நடை மருத்துவ கலந்தாய்வில் ஆர்வத்துடன் மாணவர்கள் பங்கேற்பு கடந்த ஆண்டை விட கட் ஆப் மதிப்பெண் 2 அதிகரித்தது - DINATHANTHI


சென்னை, ஆக.1-கால்நடை மருத்துவ பொது கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.பொது கலந்தாய்வு தமிழ்நாடு கால்நடை மருத்துவப்பல்கலைக்கழகம் சார்பில்
சென்னை வேப்பேரியிலும், நாமக்கல்லிலும் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் உள்ள பி.வி.எஸ்.சி. என்று அழைக்கப்படும் கால்நடை மருத்துவ படிப்பில் சேர மாற்றுத்திறனாளிகள் மற்றும் தொழில்கல்வி படித்த மாணவ-மாணவிகளுக்கு கலந்தாய்வு நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. நேற்று பொது கலந்தாய்வு நடத்தப்பட்டது. கலந்தாய்வில் ஏராளமான மாணவ-மாணவிகள் பெற்றோர்களுடன் கலந்துகொண்டனர்.முதல் மாணவர் முதல் மாணவராக நாமக்கல்லைச் சேர்ந்த வி.சரண்குமார் நாமக்கல் கால்நடைமருத்துவ கல்லூரியை தேர்ந்து எடுத்தார். அவர் எடுத்த கட் ஆப் மார்க் 198.25 இதே கட் ஆப் மதிப்பெண்ணில் இவரைத் தொடர்ந்து 4 பேர் எடுத்துள்ளனர். 2-வது மாணவர் எம்.கமலக்கண்ணன் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். 3-வது மாணவர் எஸ்.மனோஜ் பிரபு நாமக்கல்லைச் சேர்ந்தவர். 4-வது இடம் பிடித்த மாணவி வி.அருள் மொழி தர்மபுரியைச் சேர்ந்தவர். 5-வது இடம் பெற்ற மாணவர் எம்.எஸ்.அஸ்வந்த் கோவையைச் சேர்ந்தவர். இந்த 4 பேர்களும் சென்னை வேப்பேரியில் உள்ள அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியை தேர்ந்து எடுத்தனர்.கட் ஆப் அதிகரிப்புஇவர்களுக்கு அடுத்தபடியாக 198 கட் ஆப் மார்க் பெற்ற 23 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில் 9 பேர் நாமக்கல் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியையும், 14 பேர் வேப்பேரியில் உள்ள அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியையும் தேர்வு செய்தனர்.நேற்று 219 இடங்களுக்கு 982 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் சில மாணவ-மாணவிகள் வரவில்லை. கடந்த ஆண்டு கால்நடை மருத்துவ படிப்பில் சேர்வதற்கு கட் ஆப் மார்க் இருந்ததை விட இந்த ஆண்டு கட் ஆப் மார்க் 2 உயர்ந்து உள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.மேலும் இந்த வருடம் கால்நடை மருத்துவ படிப்பில் சேர்வதற்கு மாணவ-மாணவிகளிடையே ஆர்வம் அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.இன்று கலந்தாய்வுஇன்று (வெள்ளிக்கிழமை) உணவு தொழில்நுட்பம் படிப்பில் சேர 40 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

01.07.2014 முதல் 7% அகவிலைப்படி உயர்வு உறுதி!

30.06.2014 வரையிலான விலைவாசி உயர்வு குறியீட்டு எண் (31.07.2014)வெளியிடப்பட்டது. இதன்படி அகவிலைப்படிஉயர்வு கணக்கீடும் வெளியிடப்பட்டது. இக்கணக்கீட்டின்படி அரசுஊழியர்களுக்கு
01.07.2014 முதல்7% அகவிலைப்படி உயர்வு உறுதியாகியுள்ளது.இதற்கான அறிவிப்பு செப்டம்பர் 3 ஆம் வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் மாத/தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான நாள்காட்டி - 2014

ஆகஸ்ட் மாத பள்ளி நாள்காட்டி

>2- Grievance Day
>3- Aadi Peruku RL & 3-International Friendship Day
>4,5- BRC Level Training for Primary Teachers
>8- Varalakshmi Viradam RL & 8-World Senior Citizens Day
>10- Rig Ubagarma RL



>11- Gayathri Jebam RL
>12- International Youth Day
>15- Independence Day
>19- World Humanitarian Day
>20- Rajiv Gandhi Birthday
>26- Mother Teresa Birthday
>28- Saama Ubagarma
>29- National Sports Day & 29- Vinayaga Chathurthi Govt H'day 


தமிழகத்தில் 15 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்பப்பட்டியல் தயாராகியுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 42 ஆயிரம் பேரில் இருந்து 10 ஆயிரத்து 726 பேர் தேர்வு பெற உள்ளனர். மேலும் 4,224 இடைநிலை ஆசிரியர் பட்டியலும் விரைவில் வெளியாகும்.

தமிழகத்தில் 15 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்பப்பட்டியல் தயாராகியுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் பட்டியல்
விரைவில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 42 ஆயிரம் பேரில் இருந்து 10 ஆயிரத்து 726 பேர் தேர்வு பெற உள்ளனர். மேலும் 4,224 இடைநிலை ஆசிரியர் பட்டியலும் விரைவில் வெளியாகும்.

எஸ்.எஸ்.ஏ., - ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.2,400 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில், எஸ்.எஸ்.ஏ., (அனைவருக்கும் கல்வி திட்டம்), ஆர்.எம்.எஸ்.ஏ.,(அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்) திட்டங்களுக்காக, நடப்பாண்டில், 2,400 கோடியை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

பள்ளி கல்வித் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் ஆகியவற்றுக்கான பெரும் அளவு நிதியை, மத்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும் வழங்குகிறது.நடப்பு (2014 - 15) கல்வியாண்டில், எஸ்.எஸ்.ஏ., மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டங்களுக்கு தேவைப்படும் நிதி குறித்த அறிக்கையை, பல மாதங்களுக்கு முன், தமிழக அதிகாரிகள், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் வழங்கி இருந்தனர். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து, புதிய ஆட்சியாளர்களிடம், தமிழக அதிகாரிகள் வலியுறுத்தினர். இதன் அடிப்படையில், சமீபத்தில், நடப்பு கல்வி ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆர்.எம்.எஸ்.ஏ., : அதன்படி, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட இயக்குனரகத்திற்கு, 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 12 ஆயிரம் ஆசிரியர் சம்பளத்திற்கு, 288 கோடி ரூபாய்; ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்க, 5 கோடி; பள்ளிகளுக்கு மானியமாக, 28 கோடி (ஆய்வக உபகரணங்கள் உள்ளிட்ட பொருள்கள் வாங்க) உள்ளிட்ட செலவுகள் அடக்கம். எஸ்.எஸ்.ஏ., : இந்தஇயக்குனரகத்திற்கு, 2,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், ஆசிரியர் சம்பளத்திற்கு மட்டும், 900 கோடி ரூபாய் செலவிடப்படும் என, அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புதிய ஆரம்ப பள்ளிகள், ஏற்கனவே உள்ள பள்ளிகளில், கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல், பள்ளிகளில், சுற்றுச்சுவர் கட்டுதல் உள்ளிட்ட, உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்கு, கணிசமான தொகை செலவிடப்படும் எனவும், அந்த அதிகாரி தெரிவித்தார்.

'கேட்பது கிடைக்கும்!'

அதிகாரி ஒருவர் கூறியதாவது:கல்வி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. கேரளாவிற்கு அடுத்து, தமிழகம் சிறப்பாக செயல்படுவதாக, சமீபத்தில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி தெரிவித்தது குறிப்பிடதக்கது.

எனவே, மத்திய அரசிடம், தமிழகம் கேட்கும் நிதி, தாராளமாக கிடைக்கும்.கடந்த ஆண்டு, எஸ்.எஸ்.ஏ., திட்டத்திற்கு, 1,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு, 500 கோடி ரூபாய், கூடுதலாக ஒதுக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடதக்கது.இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.

Wednesday, 30 July 2014

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் தீர்ப்பு முழு விவரம்


தஞ்சாவூர், ஜூலை.31-94 குழந்தைகள் பலியான கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் 10 பேருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு முழு விவரம் வருமாறு:-பள்ளி நிறுவனர்பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு 304 (2)
பிரிவு சட்டத்தின் கீழ் (கொலைக்கு இணையான மரணத்தை ஏற்படுத்துதல்) 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.47 லட்சம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 2 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. 338-வது பிரிவின் கீழ் (உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் படுகாயம் விளைவித்தல்) 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. 337-வது பிரிவின் கீழ் (உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் காயம் விளைவித்தல்) 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 1 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. 285-வது பிரிவின் கீழ் (மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் தீ உருவாக்கும் பொருளை பயன்படுத்துதல்) 6 மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும், 467 உடன் இணைந்த 197-வது பிரிவின் கீழ் (போலியாக சான்றிதழ் கொடுத்து ஏமாற்றியது) ஆயுள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 2 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. 465 உடன் இணைந்த 197-வது பிரிவின் கீழ் (போலியாக ஆவணம் புனைதல்) குற்றத்திற்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், 6 மாதம் சிறை தண்டனையும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.தலைமை ஆசிரியைதாளாளர் சரஸ்வதி, தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி ஆகிய 4 பேருக்கும் 304 (2)-வது பிரிவின் கீழ் (கொலைக்கு இணையான மரணத்தை ஏற்படுத்துதல்) 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 338-வது பிரிவின் கீழ் (உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் படுகாயம் ஏற்படுத்துதல்) 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 337-வது பிரிவின் கீழ் (உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் காயம் எற்படுத்துதல்) 6 மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும், 285-வது பிரிவின் கீழ் (மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் தீ உருவாக்கும் பொருளை பயன்படுத்துதல்) 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிமாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி பாலாஜி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக உதவியாளர் சிவப்பிரகாசம், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக கண்காணிப்பாளர் தாண்டவன், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் துரைராஜ் ஆகியோருக்கு 467 உடன் இணைந்த 197-வது பிரிவின் கீழ் (போலியாக சான்றிதழ் கொடுத்து ஏமாற்றியது) 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. என்ஜினீயர் ஜெயச்சந்திரனுக்கு 465 உடன் இணைந்த 197-வது பிரிவின் கீழ் (போலியாக ஆவணம் புனைதல்) 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.அபராதம்மேலும் புலவர் பழனிச்சாமி, தாளாளர் சரஸ்வதி, தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி ஆகியோருக்கு தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டப்பிரிவு 46-ன் கீழ் தலா ரூ.100 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 1 மாதம் சிறை தண்டனையும், தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் சட்டப்பிரிவு 47 (1)-ன் கீழ் தலா ரூ.500 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 1 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. புலவர் பழனிச்சாமி, தாளாளர் சரஸ்வதி ஆகியோருக்கு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டப்பிரிவு 320-ன் கீழ் தலா ரூ.100 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 1 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.மேலும் காயம் அடைந்த 18 குழந்தைகளின் பாதிப்பையும், அவர்களுடைய நலத்தையும் கவனத்தில் கொண்டு அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் வாழ்க்கை பொருள் உதவி அளிப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.

கால்நடை மருத்துவ படிப்பில் சேர கலந்தாய்வு தொடங்கியது பார்வையற்றவரின் மகள் டாக்டராகிறார்


சென்னை, ஜூலை.31-கால்நடை மருத்துவ படிப்பில் சேர கலந்தாய்வு நேற்று தொடங்கியது. பார்வையற்றவரின் மகள் டாக்டராகிறார்.கலந்தாய்வு தொடங்கியதுதமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம்,
அரசு கால்நடை மருத்துவ படிப்பில் மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கான கலந்தாய்வை வருடந்தோறும் நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் கால்நடை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு சென்னை வேப்பேரியில் உள்ள அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் நேற்று தொடங்கியது. மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு கலந்தாய்வு நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 8 இடங்களும், விளையாட்டு பிரிவினர்களில் மாணவர்களுக்கு 3 இடங்களும், மாணவிகளுக்கு 2 இடங்களும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு 2 இடங்களும், தொழில் கல்வி படித்தவர்களுக்கு 14 இடங்களும் சேர்த்து மொத்தம் 29 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது. மொத்தம் 99 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.பார்வையற்றவரின் மகள் டாக்டராகிறார்முதல் மாணவியாக எம்.ரம்யா அழைக்கப்பட்டார். திருச்சியை சேர்ந்த அவர் எடுத்த கட் ஆப் மார்க் 170.50. இந்த மாணவி மாற்றுத்திறனாளி. இவர் நாமக்கல் அரசு கால்நடை மருத்துவ கல்லூரியை தேர்ந்து எடுத்தார். இவருடைய தந்தை முத்தண்ணன் பார்வையற்றவர். பார்வையற்ற முத்தண்ணன் தனது மகள் டாக்டராவதில் மிகுந்த விருப்பம் இருப்பதாக தெரிவித்தார். அதுபோல எம்.ரம்யா நான் எம்.பி.பி.எஸ். படித்து டாக்டராக வேண்டும் என்று நினைத்தேன். அதற்கான கட் ஆப் மதிப்பெண் போதவில்லை. எனவே கால்நடை மருத்துவராக இடம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.2-வது மாணவி ஜி.பி.இலக்கியா 170.25 கட் ஆப் மதிப்பெண் பெற்றிருந்தார். இவர் நாமக்கல் அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் இடத்தை தேர்ந்து எடுத்தார். இவர் கோபிச்செட்டிப்பாளையத்தை சேர்ந்தவர். நேதாஜி3-வது மாணவர் அருண்குமார் 170.25 கட் ஆப் மதிப்பெண் எடுத்திருந்தார். சென்னை அரசு கால்நடை மருத்துவ கல்லூரியை தேர்ந்து எடுத்தார். இவரது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள மண்டகப்பட்டு. 4-வது மாணவர் நேதாஜி. இவர் சென்னை அரசு கால்நடை மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தார். இவரது சொந்த ஊர் கிருஷ்ணகிரி. இவர் சென்னை அரசு கால்நடை மருத்துவ கல்லூரியை தேர்ந்து எடுத்தார்.சான்றிதழ்கள்ரேங்க்படி முதலில் கலந்தாய்வில் கலந்துகொண்ட மாணவ-மாணவிகளுக்கு கல்லூரியில் சேர்வதற்கான சான்றிதழை மாணவர் சேர்க்கைக்கான தேர்வுக்குழு தலைவர் டாக்டர் திருநாவுக்கரசு வழங்கினார்.இன்று (வியாழக்கிழமை) பொதுப்பிரிவினருக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. 238 இடங்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. இதற்காக 982 மாணவ-மாணவிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் தனியார் சட்டக்கல்லூரிகள் தொடங்க தடை சட்டசபையில் சட்ட முன்வடிவு தாக்கல்


சென்னை, ஜூலை.31-தமிழகத்தில் தனியார் சட்டக்கல்லூரிகள் தொடங்குவதற்கு தடை செய்வதற்கான சட்ட முன்வடிவு சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. சட்ட முன்வடிவுசட்டசபையில் நகராட்சி நிர்வாகம், ஊராக வளர்ச்சி, சட்டம்,
நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்ட முன்வடிவு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-குறைந்த செலவில் தரமான சட்டக்கல்வியை வழங்குவதற்கு ஏதுவாக மாநிலத்தில் படிப்படியாக போதிய எண்ணிக்கையிலான அரசு சட்டக்கல்லூரிகளை நிறுவுவதற்கு அரசு கொள்கை முடிவொன்றினை எடுத்துள்ளது. பொருளாதாரம் மற்றும் சமுக ரீதியில் நலிவுற்ற பிரிவினர்களுக்கு தனியார் பொறுப்புக்கட்டளைகள், சங்கங்களால் குறைந்த செலவில் தரமான சட்டக்கல்வியை அளிக்க முடியவில்லை என்பதனையும், சட்டக்கல்லூரிகளை நல்ல முறையில் திறம்பட தொடர்ந்து நிர்வாகம் செய்ய முடியவில்லை என்பதனையும் கடந்த கால அனுபவங்கள் வெளிப்படுத்துகின்றன. தடைஎனவே, சட்டத்தை இயற்றுவதன் மூலம் மாநிலத்தில் தனியார் நபர்கள் சட்டக்கல்லூரிகள் நிறுவுவதை தடை செய்வதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்ட முன்வடிவு, மேற்சொன்ன முடிவிற்கு செயல் வடிவம் கொடுக்க விழைகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

PG TRB Court Case News:

MADURAI BENCH OF MADRAS HIGH COURT:
வேலைவாய்ப்பக சீனியாரிட்டி அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் கோரிய மனு தள்ளுபடி.வேலைவாய்ப்பக சீனியாரிட்டி அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் கோரிய மனு தள்ளுபடி.

DETAILS OF JUDJEMENT

Pommakkal ... Petitioner


Vs.

The Teachers Recruitment Board,... Respondent

Writ petition filed under Article 226 of the Constitution of Indiapraying for issuance of a Writ of Certiorarified Mandamus calling for therecords relating to the impugned order dated Nil issued by the respondent andquash the same as illegal and consequentially to direct the respondent toconsider the petitioner for appointment to thepost of Graduate Assistant(History) for the year 2009 - 2010 taking into account the seniority of thepetitioner in the Employment Exchange.

:ORDER

The petitioner originally had Undergraduate Degree in Home Science andB.Ed. Degree. She registered the same on the file of the local EmploymentExchange on 17.12.1987. Subsequently, she secured B.A. Degree in History inthe year 2006. Thereafter, she registered the same in the month of December2006. Subsequently, she secured M.A. Degree in History in the year 2009.During the year 2006, several names were sponsored by the local EmploymentExchange in Madurai District, for appointment as Post Graduate Assistant inHistory. But the petitioner was not considered for being sponsored, becausethe petitioner did not come within the zone ofconsideration. Subsequently,during the year 2009-2010, another Recruitment Notification was issued and atthat time, the petitioner was called for certificate verification. But shewas not selected. Therefore, she is before this Court with this writpetition, seeking a direction to direct the respondent to consider thepetitioner for appointment to the post of Graduate Assistant (History) forthe year 2009-2010 taking into account the seniority of the petitioner in theEmployment Exchange.

2.In the counter filed by the respondent, it is stated that thepetitioner suffers two disqualifications and therefore, she was not selected.The first one is that, B.A. Degree in History had been done by her in one-year period. According to the respondent, B.A.Degree obtained withoutundergoing a course for three full years, cannot be considered forappointment. This has been held so by this Court and the same has beenconfirmed by the Division Bench. The seconddisqualification is, the cut-offdate for Most Backward (Women) Communal Turn, is 04.10.1990. As on04.10.1990, the petitioner had neither B.A. History qualification, nor M.A.History Post Graduate Degree. Therefore, as on the cut-off date, she was notqualified for appointment.

3.Only for the above reasons, she was not selected. For the saidaction, I do not find any infirmity warranting interference by this Court.Thus, I do not find any merit in this writ petition.

4.In the result, the writ petition fails and accordingly the same isdismissed. Consequently, the connected miscellaneous petitions are closed. Nocosts.

ஆக.,4ல் கல்வி அதிகாரிகள் கூட்டம்

சென்னையில் ஆக.,4ல் மாவட்ட முதன்மைக்கல்விஅதிகாரிகளின் நேர்முக உதவியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. பள்ளிகல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில்,
அத்துறை உயரதிகாரிகள், 32 மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளின்நேர்முக உதவியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதில், "மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ், சைக்கிள், காலணிகள், சீருடை உள்ளிட்ட 14 வகை நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது, கடந்த கல்வியாண்டில் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம், அதை அதிகப்படுத்துவது எப்படி, கோர்ட்டில் உள்ள வழக்குகள், பள்ளிகளில் மழை நீர் சேகரிப்பு அமைக்கப்பட்டது உள்ளிட்ட, பல்வேறு விபரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக,”கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பட்டதாரி ஆசிரியர் :தயார் நிலையில் இறுதி தேர்வுப் பட்டியல்.இன்றாவது வெளியிடப்படுமா?

பட்டதாரி ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஓரிரு நாளில் வெளியிடவுள்ளது.பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு பள்ளிகளில் 10,726 பட்டதாரி ஆசிரியர்
பணியிடங்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப் படையில் நிரப்பப்பட உள்ளன.
ஆசிரியர் தகுதித் தேர்வில் (2-வது தாள்) தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த 43,243 பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) கடந்த 15-ம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்பதா ரர்கள் தங்களது ஆசிரியர் தகுதித் தேர்வு பதிவு எண்ணை குறிப்பிட்டு வெயிட்டேஜ் மதிப்பெண்ணை உறுதிப்படுத்திக்கொண்டனர்.வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் மாற்றம் வந்தவர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதில் சுமார் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். 43 ஆயிரம் பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் வெளி யிடப்பட்டதை தொடர்ந்து, இறுதி தேர்வுப் பட்டியல் ஜூலை 30-ம் தேதி வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித் திருந்தது. 43 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களும் இதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

தேர்வுப் பட்டியல் குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி கூறும்போது, ‘‘இறுதிதேர்வுப் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. எந்த நேரத்திலும் வெளியிடப்பட லாம். ஒருவேளை புதன்கிழமை வெளியிடப்படாவிட்டால் மறுநாள் அல்லது ஆகஸ்ட் 1-ம் தேதி கட்டாயம் வெளியிடப்படும்’’ என்றார்.

சமஸ்கிருத வாரம் கொண்டாடதடை கோரிய வழக்கு தள்ளுபடி.

சிபிஎஸ்இ பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட தடை கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில், வக்கீல் புகழேந்தி தாக்கல் செய்த வழக்கு:

சிபிஎஸ்இ பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்று சிபிஎஸ்இ பள்ளிகளின் தலைவர், அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் சமஸ்கிருதம் அனைவருக் கும் தாய் மொழி என்று தவறான தகவலை அளித்துள்ளனர். இதற்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு வழக்கில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சத்தியநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது

மனுதாரர் சார்பாக வக்கீல் ராதாகிருஷ்ணன் ஆஜராகி, சமஸ்கிருத வாரம் கொண்டாட சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மத்திய அரசு அனுப்பிய சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றார். இதை கேட்ட நீதிபதிகள், தற்போது மத்திய அரசு சமஸ்கிருத வாரம் கொண்டாட உத்தரவிட்டுள்ளது, அடுத்த முறை மற்ற மொழிகளுக்கும் இத்தகைய உத்தரவு பிறப்பிக்கலாம். எனவே இந்த உத்தரவில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை, வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்று தீர்ப்பு கூறினர்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிவிப்பு -13 | 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு School Diary with Calendar.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்கள், தேர்வுகள் 4 போன்றவற்றை மாணவர்களும், பெற்றோர்களும் அறிந்து கொள்ளவும்,
ஆசிரியர்கள் வழங்கும் முக்கிய குறிப்புகளை குறித்து வைத்துக் கொள்ளவும் முதன் முறையாக பள்ளி நாட்காட்டியுடன் இணைந்த குறிப்பேடு, அதாவது School Diary with Calendar 3 கோடி ரூபாய் செலவில் நடப்புக் கல்வி ஆண்டு முதல் வழங்கப்படும்.

1000 புதிய ஆசிரியர் பணி இடங்கள்-ரூ.72 கோடியில் கூடுதல் வகுப்பறைகள்

சட்டசபையில் முதல்அமைச்சர் ஜெயலலிதா 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:–செல்வத்துள்
பெரும் செல்வம் ஆகிய கல்வியை அனைவரும் கற்று, கல்லாதவர்களே இல்லாதமாநிலம் தமிழகம் என்ற குறிக்கோளை அடையும் வகையில் எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.இதன் அடிப்படையில், கீழ்க்காணும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப் பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

1. கல்வியின் அடித்தளமாக விளங்குவது தொடக்கக் கல்வி என்பதைக் கருத்தில் கொண்டு, நடப்புக் கல்வியாண்டில், 25 மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அதிகம் உள்ள 128 குடியிருப்புப் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தக் குடியிருப்புப் பகுதிகளில், தலா ஒரு தொடக்கப் பள்ளி வீதம் 128 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஓர்இடைநிலை ஆசிரியர் என மொத்தம் 256 ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இவ்வாறாக தொடங்கப்படும் தொடக்கப் பள்ளிகளில் மதிய உணவு சமைப்பதற்குத் தேவையான நவீன சமையலறை, குடிநீர் வசதியுடன் கூடிய கட்டடங்கள் மற்றும் கழிப்பிடங்கள் ஆகியவை ஏற்படுத்தித் தரப்படும். இதனால் ஆண்டொன்றுக்கு தோராயமாக 19 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.
2. 2009 ஆம் ஆண்டைய குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 3 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு ஒரு நடுநிலைப் பள்ளி அமைக்கப்பட வேண்டும். அதன்படி கடந்த மூன்று ஆண்டுகளில் 65 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டில் 19 மாவட்டங்களில் 42 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக, நிலை உயர்த்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு நிலை உயர்த்தப்படும் ஒவ்வொரு பள்ளிக்கும் 3 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 126 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படுவதோடு, ஒவ்வொரு பள்ளிக்கும் 3 கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரப்படும். இதனால் ஆண்டொன்றுக்கு 9 கோடியே 28 லட்சம் ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும்.
3. கடந்த மூன்று ஆண்டுகளில், 760 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இதன் காரணமாக, சுமார் 1 லட்சத்து 6 ஆயிரம் மாணவ, மாணவியர் பயன் அடைந்துள்ளனர். நடப்புக் கல்வியாண்டில், 50 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 50 தலைமை ஆசிரியர் பணியிடங்களும், 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும்என மொத்தம் 300 ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் மூலம் நிரப்பப்படும். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.
4. கடந்த மூன்று ஆண்டுகளில் 300 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்டன. நிலை உயர்த்தப்படும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய 5 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையை மாற்றி, கூடுதலாக தமிழ், வரலாறு, பொருளாதாரம் மற்றும் வணிகவியல் ஆகிய பாடங்களுக்கும் சேர்த்து 9 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக, நடப்புக் கல்வியாண்டில் 100 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள்மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு நிலை உயர்த்தப்படும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 100 தலைமை ஆசிரியர் பணியிடங்கள், ஒன்பது முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 1000 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்பதையும் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கென ஆண்டொன்றுக்கு 31 கோடியே 82 லட்சம் ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும்.
5. வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ, வருவாய் இன்மை காரணமாக பள்ளியில் கல்வி கற்கும் அவர்களது குழந்தைகள் கல்வியை தொடர்ந்து கற்க இயலாத நிலை ஏற்படும் சமயத்தில், அவர்களது குழந்தைகள் தங்களது கல்வியை தொடர்ந்து கல்வி கற்கும் வகையில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ, மாணவியர், ஒவ்வொருவருக்கும் 50,000 ரூபாய் நிதி வழங்கும் திட்டம் என்னால் 2005 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தொகை இனி 75,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிதி அரசு நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகையாகச் செலுத்தப்பட்டு அதில் இருந்து கிடைக்கின்ற வட்டித் தொகை மற்றும் அதன் முதிர்வுத் தொகை ஆகியவை அந்த மாணவ, மாணவியரின் கல்விச் செலவுக்காகவும் மற்றும் பராமரிப்புக்காகவும் பயன்படுத்தப்படும். இத்திட்டத்தினால் அரசுக்கு 2 கோடியே 70 லட்சம் ரூபாய் கூடுதலாக செலவு ஏற்படும்.
6. அனைத்துப் பள்ளிகளிலும் 100 விழுக்காடு கழிவறை வசதி மற்றும் குடிநீர் வசதி இருக்க வேண்டும் என்பதற்காக கணக்கெடுப்பு பணி எனது தலைமையிலான அரசால் மேற்கொள்ளப்பட்டு, கழிவறை வசதிகள் இல்லாத 2,057 பள்ளிகளுக்குக் கழிவறை வசதிகள் உடனடியாக ஏற்படுத்திக் கொடுக்கப் பட்டன. கழிவறைகளை கட்டிக் கொடுத்தால்மட்டும் போதாது. குழந்தைகளின் சுகாதாரம் கருதி அக்கழிவறைகளை சுத்த மாகப் பராமரிப்பதும் மிகவும் இன்றியமையாத பணி என்பதால், முதன் முறையாக, கழிவறைகளை பராமரிப்பதற்காக 160 கோடியே 77 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம், 56 லட்சத்து 55 ஆயிரம் மாணவ, மாணவியர் பயனடைவார்கள்.
7. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குத் தரமான கட்டணமில்லாக் கல்வி வழங்குவதோடு, விலையில்லா பாடப் புத்தகம், நோட்டுப் புத்தகம், புத்தகப் பை, கணித உபகரணப் பெட்டி, வண்ணப் பென்சில்கள், கிரையான்கள்,வரைபடப் புத்தகம், மடிக்கணினி, மிதிவண்டி, பேருந்து பயண அட்டை, சீருடை, காலணி, ஆகியவை விலையின்றி வழங்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவியரிடையே அழகாக எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, 1 ஆம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை பயிலும் 45 லட்சத்து 76 ஆயிரம் மாணவர்களுக்கு முதன் முறையாக கையெழுத்து பயிற்சி ஏடுகள் வழங்கவும், 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் 63 லட்சத்து 18 ஆயிரம் மாணவ, மாணவியர்களுக்கு அவர்களது கலைத் திறன் மற்றும் கற்பனை வளத்தை ஊக்குவிக்கும் வகையில் ஓவியப் பயிற்சி ஏடுகள் வழங்கவும், 9 மற்றும் 10 ஆம் வகுப்பில் பயிலும் 10 லட்சம் மாணவ, மாணவியர்களுக்கு அறிவியல் பாடங்களுக்கான செயல்முறைப் பயிற்சி ஏடுகள் வழங்கவும் நான் ஆணையிட்டுள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கென அரசுக்கு 5 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.
8. தொலைதூர மற்றும் மலைப் பகுதிகளில் வாழும் நலிவடைந்த வகுப்பினைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் கல்வி வழங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில், நடப்பாண்டில், 500 குழந்தைகள் பயன்பெறும் வகையில் 5 உண்டு உறைவிடப் பள்ளிகள் நீலகிரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பள்ளிகளுக்கு 5 முழு நேர ஆசிரியர்கள் மற்றும் 3 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். இதற்கென ஆண்டொன்றுக்கு 3 கோடியே 74 லட்சம் ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும்.
9. சமூக விழிப்புணர்வினை குழந்தைகளிடம் கொண்டு செல்லும் வகையில் பள்ளிக் கல்வித் துறையும், காவல் துறையும் இணைந்து பள்ளிகளில் போட்டிகள், விழிப்புணர்வு பேரணி, கிராம கல்வித் திருவிழா, ஊடகம் மற்றும் தொடர் குழு நடவடிக்கைகள் ஆகியவற்றை நடத்தி வருகின்றன. நடப்பு கல்வி ஆண்டிலும் இத்திட்டம் 9 கோடியே 99 லட்சம் ரூபாய் செலவில் தொடரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
10. குழந்தைகளுக்குத் தரமான கல்வி வழங்குவதோடு, கல்வி பயில்வதற்கேற்ற இனிய சூழல் தேவை என்பதை கருத்தில் கொண்டு தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும்,அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 72 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில், 1,175 கூடுதல் வகுப்பறைகளும், பெண் குழந்தைகளுக்கென தனியே 270 கழிப்பறைகளும் கட்டித் தரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
11. 2013-14 ஆம் ஆண்டு 46,737 பள்ளி செல்லாக் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 24,638 குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி தேவைப்படுகிறது என்பதை கண்டறிந்து, அதன் அடிப்படையில், 22 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் 9,641 குழந்தைகளுக்கு உறைவிட வசதியுடன் கூடிய சிறப்புப் பயிற்சியும், 14,997 குழந்தைகளுக்கு உறைவிட வசதியின்றி சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
12. சிறப்புக் கவனம் தேவைப்படும் 1,26,641 குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்ற உள்ளடக்கிய கல்வியின் தொடர்ச்சியாக, 31 கோடியே 66 லட்சம்ரூபாய் செலவில் சிறப்புப் பயிற்சிகள், உதவும் உபகரணங்கள், ஆகியவை வழங்கப்படும்என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
13. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்கள், தேர்வுகள் போன்றவற்றை மாணவர்களும், பெற்றோர்களும் அறிந்து கொள்ளவும், ஆசிரியர்கள் வழங்கும் முக்கிய குறிப்புகளை குறித்து வைத்துக் கொள்ளவும் முதன் முறையாக பள்ளி நாட்காட்டியுடன் இணைந்த குறிப்பேடு, 3 கோடி ரூபாய் செலவில் நடப்புக் கல்வி ஆண்டு முதல் வழங்கப்படும்.எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள், கல்லாதோர் இல்லாத மாநிலம் தமிழகம் என்ற இலக்கை அடைய வழி வகுக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இனி என்ன சொல்ல போகிறார்கள் முதுகலை ஆசிரியர் இறுதி பட்டியல் ? Rab-Baksh

ஜூலை 3 & 4 ஆம் தேதிகளில் முதுகலை ஆசிரியர் தேர்வுவழக்குகள் முடிந்து தீர்ப்புகளும் வழங்கப்பட்டதுஅவசர அவசரமாக தீர்ப்புகள்
வெளியிடப்பட்டதைபார்த்த போது ஏதோ உடனேஇறுதி பட்டியல் வெளியிடப்படும் என்று பத்திரிகைகளில் செய்திகள்வெளியாகின.
ஜூலை 7 ஆம் தேதி ஆசிரியர் தேர்வுவாரியத்துக்கு டயல் செய்தால் அவர்கள்ஜுலை மாதம் இறுதியில் முதுகலைஆசிரியர் தேர்வு இறுதி பட்டியல்வெளியிடப்படும் என்று கூறினர்.
வந்து விட்டது அவர்கள் கூறியஜூலை மாதம் இறுதி.

இனி என்ன சொல்ல போகிறார்கள்.

CURRENT YEAR UPGRADED SCHOOLS - BY OUR HON'BLE CM

ELEMENTARY TO MIDDLE SCHOOLS - 42

MIDDLE TO HIGH SCHOOLS - 50



HIGH SCHOOL TO HIGHER SECONDARY SCHOOLS - 100

NEW PRIMARY SCHOOLS - 128

IN 128 ELEMENTARY SCHOOLS 1HM AND 1 TEACHER TOTAL OF 256 POSTS

IN 42 MIDDLE SCHOOLS 3BT'S POST FOR EACH SCHOOL TOTAL OF 126POSTS

IN 50 HIGH SCHOOLS 1HMPOST AND 5BT'S FOR EACH SCHOOL TOTAL OF 300POSTS

IN 100 HIGH SCHOOLS 1HSHM AND 9 PG'S FOR EACH SCHOOL TOTAL OF 1000POSTS

கும்பகோணம் பள்ளித் தீவிபத்து வழக்கு: 11 பேர் விடுதலை; 10 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு.

கும்பகோணம் பள்ளி தீவிபத்து வழக்கில் 11 பேரை விடுதலை செய்து தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 21 பேரில் 11 பேரை விடுதலை செய்துள்ளது தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம். 2004 ஜூலை 16 ஆம் தேதி கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர்.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் பள்ளி நிறுவனர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தீவிபத்து வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என நீதிபதி முகமது அலி கூறியுள்ளார்.இந்த வழக்கு கும்பகோணம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இருந்து, 2006 ஆம் ஆண்டு தஞ்சை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் 232 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு கடந்த 10 ஆம் தேதியுடன் இருதரப்பு வாதங்களும் முடிந்தன.

விடுதலையான 11 பேர் விவரம்:

தீவிபத்து வழக்கில் தஞ்சை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பழனிச்சாமி விடுவிக்கப்பட்டுள்ளார். அப்போதைய தஞ்சை மாவட்டக் கல்வி அலுவலர் நாராயணசாமி, நகரமைப்பு அலுவலர் முருகன், வகுப்பு ஆசிரியைகள் தேவி, மகாலட்சுமி, அந்தோணியம்மாள் ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், பாலசுப்ரமணியம், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மாதவன், பாலகிருஷ்ணன் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நகராட்சி ஆணையர் சத்தியமூர்த்தியும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

10 பேர் குற்றவாளிகள்:

பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமி, மனைவியும் தாளாளருமான சரஸ்வதி, தலைமை ஆசிரியைசாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பாலாஜி, பொறியாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட தொடக்கக் கல்விஅலுவலக உதவியாளர் சிவப்பிரகாரம், கண்காணிப்பாளர் தாண்டவன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் நேரமுக உதவியாளர் துரைராஜ் ஆகியோர் இவ்வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்

வழக்கு விவரம்:

கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை 16ம் தேதி கும்பகோணம் காசிராமன் தெரு ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக பள்ளி நிறுவனர், தாளாளர், ஆசிரியர்கள் உள்ளிட்ட 24 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பாக கும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 3,126 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில், 469 பேர் சாட்சியாக சேர்க்கப்பட்டு, 60 முக்கிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. 2006ஆம் ஆண்டு தஞ்சை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட இந்த வழக்கு துரிதமாக நடைபெறவில்லை என்று குழந்தைகளை இழந்த பெற்றோர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தீ விபத்து வழக்கு விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் 2 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்றது.இதனிடையே இந்த வழக்கிலிருந்து முதன்மைக் கல்வி அலுவலர் முத்து பழனிச்சாமி, தாசில்தார் பரமசிவம், பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணன் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இதுவரை 232 பேரிடம் விசாரிக்கப்பட்டு, கடந்த 17ம் தேதியுடன் இருதரப்பு வாதங்களும் நிறைவு பெற்றன. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு ஜூலை 30ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வுநீதிபதி முகமது அலி தெரிவித்திருந்தார்.

Tuesday, 29 July 2014

தமிழகத்தில் டிஇஓ பதவி உயர்வு : 15 மாவட்ட கல்வி அலுவலர்களாக தலைமை ஆசிரியர்கள் நியமனம்

தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு தாமதம் காரணமாக 15 மாவட்ட கல்வி அலுவலர் பதவிகளுக்கு தலைமை ஆசிரியர்களை கூடுதல் பொறுப்பாக நியமித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர்களாக பணியாற்றிய 15 பேருக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களாக கடந்த 25ம் தேதி பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இவர்கள் உடனே புதிய பணியிடங்களில் சேரவும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது.


இதனால் தமிழகத்தில் 15 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி பணியிடங்கள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதன் மூலமும், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம் மூலமும் நிரப்பப்படுவது வழக்கம்.
பதவி உயர்வு தாமதமாக� வருவதால் தற்போது 15 மாவட்ட கல்வி அலுவலர் பதவிகளுக்கு மேல்நிலைப் பள�ளி, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், அந்த நிலையில் பணியாற்றுபவர்களை மாவட்ட கல்வி அலுவலர் கூடுதல் பொறுப்பாக நியமித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் விவரம் வருமாறு: (அவர்கள் தற்போது வகிக்கும் பணியிடம் அடைப்புக்குறிக்குள்)
1) சுப்பிரமணியன் (மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர், சென்னை) & ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர், சென்னை.
2) சுடலைமுத்து (தலைமை ஆசிரியர், சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி) & மாவட்ட கல்வி அலுவலர், தூத்துக்குடி.
3) முருகானந்தம் (தலை மை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, தருமத்துப் பட்டி, திண்டுக்கல் மாவட் டம்) & மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர், திண்டுக்கல்.
4) வளர்மதி (தலைமை ஆசிரியர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பட்டுக்கோட்டை) & மாவட்ட கல்வி அலுவலர், பட்டுக்கோட்டை.
5) ராஜா (தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, தேவீரப்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம்) & மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், கிருஷ்ணகிரி.
6) சிவஞானம் (தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, கோவிலூர், திருவண்ணாமலை மாவட் டம்) & மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், திருவண்ணாமலை.
7) வனஜா (தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, கலையம்புதூர், திண்டுக்கல் மாவட்டம்) & மாவட்ட கல்வி அலுவலர், பழனி, திண்டுக்கல் மாவட்டம்.
8) லட்சுமி (தலைமை ஆசிரியர், அரசு மேல்ந�லைப்பள்ளி, இலுப்பூர், புதுக்கோட்டை மாவட்டம்) & மாவட்ட கல்வி அலுவலர், அறந்தாங்கி, புதுக்கோட்டை மாவட்டம்.
9) நீலவேணி (தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, பழையனூர், சிவகங்கை மாவட்டம்) & மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், சிவகங்கை.
10) தமிழ்ச்செல்வன் (தலைமை ஆசிரியர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, குறிஞ்சிப்பாடி, கடலூர் மாவட்டம்) & மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், கடலூர்.
11) பிச்சையப்பன் (மெட் ரிக் பள்ளிகள் ஆய்வாளர், கடலூர்) & மாவட்ட கல்வி அலுவலர், கடலூர்.
12) பவுன் (தலைமை ஆசிரியர், நகராட்சி உயர்நிலைப்பள்ளி, சின்னமனூர், தேனி மாவட்டம்) & மாவட்ட கல்வி அலுவலர், உத்தமபாளையம், தேனி மாவட்டம்.
13) தெய்வசிகாமணி (தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, இலந்தைக்கூடம், அரியலூர் மாவட்டம்) & மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், அரியலூர்.
14) சங்கரராமன் (தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, வில்லிசேரி, தூத்துக்குடி மாவட்டம்) & மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், தூத்துக்குடி.
15) ஜேக்கப் அருள் மாணிக்கராஜ் (தலைமை ஆசிரியர், இசிஇ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தென்காசி) & மாவட்ட கல்வி அலுவலர், தென்காசி, நெல்லை மாவட்டம்.

ஆசிரியர் பயிற்றுனர்களை நியமிக்க வழக்கு : அதிகாரிகளுக்கு நோட்டீஸ்.

ஆசிரியர் பயிற்றுனர்களை பள்ளியில் நியமிப்பது தொடர்பாக, ஆசிரியர்தேர்வு வாரியம், பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் ராஜ்குமார். மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:நான் அனைத்து வட்டார வளமைய பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர்.

தமிழகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், வட்டார வளமைய மேற்பார்வையாளர், ஆசிரிய பயிற்றுனர்கள் என 4582 பேர் பணியாற்றுகின்றனர். 2006ல் அரசு உத்தரவில், ஒவ்வொரு ஆண்டும்500 ஆசிரிய பயிற்றுனர்கள், பள்ளிகளில் ஏற்படும் காலியிடங்களில் நிரப்பப்படுவர் என தெரிவிக்கப்பட்டது.

அதன்பின் 2011 வரை இந்நியமனம் பின்பற்றப்பட்டது. ஆனால், 2012 -13ல் 115 பேர் மட்டுமே அவ்வாறு நியமனம்செய்யப்பட்டனர். மீதியுள்ள 385 பேருக்கும், அடுத்த ஆண்டுக்கான 500 பேர் உட்பட மொத்தம் 885 பேர் நியமிக்கப்படவில்லை. எனவே அவர்களை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். இதற்கிடையில் ஆசிரியர் தேர்வு வாரியம் நேரடி நியமனம் தொடர்பாக கடந்த ஜூலை 14ல் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.இந்த நியமன அறிவிப்பு எங்களை பாதிக்கும். எனவே அதை ரத்து செய்ய வேண்டும். 885 பட்டதாரி ஆசிரியர்களை நியமித்த பின்னர் ஏற்படும் காலியிடங்களில் அவர்கள் தெரிவித்துள்ளநியமனத்தை மேற்கொள்ளலாம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டது. இம்மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

'ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்புப்படி, நியமனங்கள் வழக்கின் இறுதித்தீர்ப்பை பொறுத்து அமையும். இதுதொடர்பாக கல்வித்துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்' என, உத்தரவிட்டார்

பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்குத் தடை கோரி வழக்கு.

885 வட்டார வளமைய ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி அமர்த்தாமல் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர்களை நியமிக்கத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அனைத்து வட்டார வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்றச் சங்க பொதுச் செயலர் எம். ராஜ்குமார் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.


மனு விவரம்: ஒவ்வோர் ஆண்டும் 500 வட்டார வள மையப் பயிற்றுநர்கள் பணி மூப்பு அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும் என 2006-இல் அரசு உத்தரவிட்டது.

2012-2013 ஆம் ஆண்டில் 115 பயிற்றுநர்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். மேலும், 385 வட்டார கண்காணிப்பாளர்கள் அரசுப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். அரசாணைப்படி வட்டார வள மைய பயிற்றுநர்கள்தான் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும். 385 வட்டார கண்காணிப்பாளர்களை முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களாக நியமித்தது தவறு. 2013-2014 ஆம் ஆண்டு 500 பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கவில்லை.எனவே, மொத்தம் 885 வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களை அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க உத்தரவிட வேண்டும். இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் பட்டதாரி ஆசிரியர்களை நேரடியாக நியமிக்க 14.7.14 இல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதைரத்துசெய்ய வேண்டும். 885 பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக நியமித்த பின்பு உள்ள காலிப் பணியிடங்களில் நேரடியாக பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இம் மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரன், மனுவுக்கு பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர்,இயக்குநர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

பட்டதாரி ஆசிரியர் பட்டியல் ஓரிரு நாளில் வெளியீடு?

பட்டதாரி ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஓரிரு நாளில் வெளியிடவுள்ளது. பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள அரசுபள்ளிகளில் 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப் படையில் நிரப்பப்பட உள்ளன.


ஆசிரியர் தகுதித் தேர்வில் (2-வது தாள்) தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த 43,243 பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) கடந்த 15-ம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்பதா ரர்கள் தங்களது ஆசிரியர் தகுதித் தேர்வு பதிவு எண்ணை குறிப்பிட்டு வெயிட்டேஜ் மதிப்பெண்ணை உறுதிப்படுத்திக்கொண்டனர்.

வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் மாற்றம் வந்தவர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதில் சுமார் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். 43 ஆயிரம் பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் வெளி யிடப்பட்டதை தொடர்ந்து, இறுதி தேர்வுப் பட்டியல் ஜூலை 30-ம் தேதி வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித் திருந்தது. 43 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களும் இதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தேர்வுப் பட்டியல் குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி கூறும்போது, ‘‘இறுதி தேர்வுப் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. எந்த நேரத்திலும் வெளியிடப்பட லாம். ஒருவேளை புதன்கிழமை வெளியிடப்படாவிட்டால் மறுநாள் அல்லது ஆகஸ்ட் 1-ம் தேதி கட்டாயம் வெளியிடப்படும்’’ என்றார்.

எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவிக்கு, பாரத ஸ்டேட் வங்கி கல்வி கடன் வழங்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு


சென்னை, ஜூலை.30-எம்.பி.பி.எஸ். படிக்கும் ஏழை மாணவிக்கு கல்வி கடன் வழங்கவேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.சென்னை ஐகோர்ட்டில், சி.மீனாட்சி என்பவர் தாக்கல்
செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-கல்வி கடன்நான் ஏழை ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவள். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் கடந்த 2009-ம் ஆண்டில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் சேர்ந்தேன்.ஆண்டுக்கு ரூ.3 லட்சத்து 83 ஆயிரத்து 560 வீதம் 4 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும். 5-வது ஆண்டில் ரூ.1.96 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும்.முதல் ஆண்டு கல்விக் கட்டணத்தை தெரிந்தவர்களிடம் கடனாக பெற்று கட்டிவிட்டேன். ஆனால், அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியவில்லை. இதனால், பாரத ஸ்டேட் வங்கியில், ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கடன் கேட்டு விண்ணப்பம் செய்தேன். ஆனால், வங்கி நிர்வாகம் எனக்கு ரூ.4 லட்சம் மட்டும் கடன் வழங்கியது.அரசாணைஎனவே, எனக்கு முழு கட்டணத்தையும் கடனாக வழங்க வங்கி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.சத்தியநாராயணன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு உட்பட்ட எஸ்.சி., எஸ்.டி. குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் சுயநிதிக் கல்லூரிகளில் பயில்வதற்கான கல்விக் கட்டணத்தை அரசு வழங்கிடும் என 2012-ம் ஆண்டில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.பரிசீலிக்க வேண்டும்கல்விக் கட்டணத்தை அரசே வழங்குவதால், முழு கட்டணத்தையும் மனுதாரருக்கு வழங்க முடியாது என்று வங்கி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.ஆனால், அந்த அரசாணை 2012-ம் ஆண்டுதான் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் 2009-ம் ஆண்டு முதலே எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். எனவே கடன் வழங்க வங்கி நிர்வாகம் மறுக்க முடியாது. மனுதாரர் புதிதாக கடன் கேட்டு விண்ணப்பம் செய்யவேண்டும். அந்த விண்ணப்பத்தை வங்கி நிர்வாகம் 2 வாரத்துக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவினை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வில் என்ஜினீயரிங் இடங்கள் 50 சதவீதம் மட்டுமே நிரம்புகின்றன 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாகக் கிடக்கின்றன


சென்னை, ஜூலை.30-அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வு 4-ந் தேதி முடிவடைகிறது. என்ஜினீயரிங் இடங்கள் 50 சதவீதம் மட்டுமே நிரம்புகின்றன. கலந்தாய்வு முடிவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக் கிடக்கும் நிலைமை
உள்ளது.என்ஜினீயரிங் கலந்தாய்வுதமிழ்நாடு முழுவதும் உள்ள 541 என்ஜினீயரிங் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பி.இ. சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இந்த கலந்தாய்வுக்கு கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளிட்ட சமர்ப்பிக்கப்பட்ட இடங்கள் 2 லட்சத்து 4 ஆயிரத்து 79.அந்த இடங்களுக்கு கடந்த ஒரு மாதமாக பொது கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. மாணவ-மாணவிகள் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் வந்து கலந்தாய்வில் கலந்துகொண்டு மதிப்பெண் எடுத்ததற்கு ஏற்ற வகையில் கல்லூரியையும், பி.இ. படிப்பில் குரூப்பையும் தேர்ந்து எடுத்து செல்கிறார்கள்.முதல் இடம்மெக்கானிக்கல் பிரிவை 19 ஆயிரத்து 418 மாணவ-மாணவிகள் தேர்ந்து எடுத்துள்ளனர். இது கலந்தாய்வில் முதல் இடம் வகிக்கிறது. அடுத்து எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் பிரிவு 2-வது இடத்தில் உள்ளது. அந்த பிரிவை 15 ஆயிரத்து 653 பேர் எடுத்துள்ளனர். சிவில் பிரிவை 12 ஆயிரத்து 262 பேர் தேர்ந்து எடுத்திருக்கிறார்கள்.இந்த கலந்தாய்வு 4-ந் தேதி முடிவடைகிறது. அன்று கட் ஆப் மதிப்பெண் 200-க்கு 77.5 வரை அழைக்கப்பட்டுள்ளனர். கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட மாணவர்கள் 1 லட்சத்து 19 ஆயிரத்து 26 பேர். அவர்களில் 37 ஆயிரத்து 619 பேர் வரவில்லை. இது 31.6 சதவீதம். கலந்தாய்வுக்கு வந்துவிட்டு இடத்தை தேர்ந்து எடுக்காதவர்கள் 324 பேர். கலந்தாய்வு இன்னும் 6 நாட்கள் தான் நடைபெற உள்ளன. 50 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பும் கலந்தாய்வு முடிகிற அன்று கல்லூரிகளில் உள்ள 2 லட்சத்து 4 ஆயிரத்து 79 இடங்களில் 50 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பி இருக்கும். 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக்கிடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை தவிர பல கல்லூரிகளில் 1 அல்லது 2 மாணவர்களே சேர்ந்துள்ளனர்.ஆனால் கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேராத சில கல்லூரிகளில், கல்வி கட்டணத்தை குறைப்பதால் நிர்வாக ஒதுக்கீட்டில் கணிசமான மாணவ-மாணவிகள் சேர்ந்ததாக கூறப்படுகிறது. கலந்தாய்வு 4-ந் தேதி முடிவடைந்தாலும் அதற்கு முன்பாகவே 1-ந் தேதி பெரும்பாலான என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ. முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்குகின்றன.

கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் 94 குழந்தைகள் கருகி பரிதாப சாவு தமிழகத்தை உலுக்கிய வழக்கில் இன்று தீர்ப்பு கைதான கல்வி இலாகா அதிகாரிகள் உள்பட 21 பேர் தஞ்சை கோர்ட்டில் ஆஜர்


தஞ்சாவூர், ஜூலை.30-94 பிஞ்சு குழந்தைகள் கருகி பலியான கும்பகோணம் பள்ளி தீவிபத்து வழக்கில் இன்று (புதன்கிழமை) தீர்ப்பு வழங்கப்படுகிறது.நாட்டை உலுக்கிய விபத்துதமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கிய கும்பகோணம் பள்ளி தீ விபத்து 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி நடந்தது.
அன்று நடைபெறப் போகும் அசம்பாவிதத்தை அறியாமல் வழக்கம்போல குழந்தைகளும், சிறுவர்களும் குதூகலமாக பள்ளிக்கு சென்றனர்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் இயங்கி வந்த ஸ்ரீகிருஷ்ணா உதவிபெறும் தொடக்கப்பள்ளி தான் அது. இந்த பள்ளியில் அன்று மதிய உணவிற்காக சமையல் செய்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சமையல் அறையில் பிடித்த தீ, பள்ளி கட்டிடத்திற்கும் வேகமாக பரவியது. 94 குழந்தைகள் பலிபள்ளியின் மேல்மாடியில் இயங்கி வந்த கூரை வேயப்பட்ட வகுப்பறை கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. மாணவ-மாணவிகள் வேகமாக வெளியேற போதிய இடவசதியும் அங்கு இல்லை. இதனால் அந்த அறையில் இருந்த 94 குழந்தைகள் தப்ப முடியாமல் உடல் கருகி மடிந்தார்கள். 18 குழந்தைகள் பலத்த காயம் அடைந்து, தீவிர சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தனர். தமிழகத்தையே கண்ணீர் கடலில் ஆழ்த்திய இந்த கொடூர விபத்து தொடர்பாக கும்பகோணம் கிழக்கு போலீசார் விசாரணை நடத்தினர். குறுகலான அந்த கட்டிடத்தில் ஸ்ரீ கிருஷ்ணா உதவிபெறும் தொடக்கப்பள்ளி, சரஸ்வதி நர்சரி பள்ளி, ஸ்ரீகிருஷ்ணா மகளிர் உயர்நிலைப்பள்ளி என 3 பள்ளிகள் இயங்கி வந்தது. 3 பள்ளிகளிலும் சேர்த்து மொத்தம் 700 மாணவ-மாணவிகள் படித்துவந்தனர். அங்கு போதிய பாதுகாப்பு வசதியும், தீயணைப்பு கருவிகளும் இல்லாதது தெரியவந்தது.24 பேர் கைதுஅந்த பள்ளியின் நிறுவனர் புலவர் பழனிசாமி, பள்ளி தாளாளரான அவரது மனைவி சரஸ்வதி, தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எம்.பழனிச்சாமி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் பி.பழனிச்சாமி, ஆர்.பாலாஜி, மாவட்ட கல்வி அலுவலர் ஆர்.நாராயணசாமி, உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் பாலகிருஷ்ணன், மாதவன், தாசில்தார் பரமசிவம், பொறியாளர் ஜெயசந்திரன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலக உதவியாளர் சிவப்பிரகாசம், கண்காணிப்பாளர் தாண்டவன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் துரைராஜ், வகுப்பு ஆசிரியைகள் தேவி, மகாலட்சுமி, அந்தோணியம்மாள், நகராட்சி ஆணையர் சத்தியமூர்த்தி, நகரமைப்பு அலுவலர் முருகன், தொடக்கப்பள்ளி கல்வி இயக்குனர் கண்ணன் ஆகிய 24 பேரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.பல்வேறு பிரிவுகளில் வழக்குஅவர்கள் மீது 304 (கொலைக்கு இணையான மரணத்தை ஏற்படுத்துதல்), 120பி (சதிச்செயல்), 338 (உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கொடுங்காயங்கள் ஏற்படுத்துதல்) மற்றும் சிறுவர் நீதி சட்டம், தனியார் பள்ளி ஒழுங்குமுறை சட்டம், மாநகராட்சி சட்டம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.கும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இதில் 488 பேர் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டனர். 3,126 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் 2006-ம் ஆண்டு இந்த வழக்கு தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.விசாரணை முடிந்ததுமாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி எம்.பழனிசாமி, தாசில்தார் பரமசிவம், தொடக்கக்கல்வி இயக்குனர் கண்ணன் ஆகியோர் ஐகோர்ட்டு உத்தரவுப்படி இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். தொடக்கக்கல்வி அதிகாரி பாலகிருஷ்ணன் தன்னையும் விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.விபத்து நடந்து 8 ஆண்டுகளுக்கு பின்னர் தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2012-ம் ஆண்டு செப்டம்பர் 24-ந் தேதி வழக்கு விசாரணை தொடங்கியது. இந்த வழக்கில் காயத்துடன் உயிர்தப்பிய குழந்தைகள், பலியான குழந்தைகளின் பெற்றோர், அப்போதைய கலெக்டர் ராதாகிருஷ்ணன் உள்பட 230 பேர் சாட்சியம் அளித்தனர்.அரசுதரப்பு சாட்சிகள் விசாரணை மார்ச் 28-ந் தேதி முடிவடைந்தது. பின்னர் இருதரப்பு வக்கீல்கள் வாதம் நடைபெற்றது. 22 மாதங்களாக நடைபெற்றுவந்த இந்த வழக்கின் விசாரணை கடந்த 17-ந் தேதி முடிவடைந்தது. இன்று தீர்ப்புஇந்த கொடூர சம்பவம் நடந்து 10 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வழக்கில் இன்று (புதன்கிழமை) தீர்ப்பு வழங்கப்படுகிறது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முகமது அலி தீர்ப்பை வழங்குகிறார். இந்ததீர்ப்பை நாடே பரபரப்புடன் எதிர்பார்த்து இருக்கிறது.இந்த விபத்தில் காயமடைந்து உயிர்தப்பிய குழந்தைகளின் தழும்புகளும் மறையவில்லை. உயிர்நீத்த குழந்தைகளின் நினைவுகளும் அவர்களது பெற்றோர் மனதில் இருந்து நீங்கவில்லை.இந்த தீ விபத்தில் குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர் கூறும்போது, ‘‘எங்கள் குழந்தைகள் இறந்தபோது தொலைந்துபோன எங்கள் சந்தோஷம் இதுவரை திரும்ப கிடைக்கவில்லை. தீ விபத்துக்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். இந்த தீர்ப்பு, பாதுகாப்பு இல்லாமல் மோசமான பள்ளிகளை நடத்தும் நிர்வாகத்திற்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்’’ என்றனர்.இன்று தீர்ப்பு கூறப்படுவதையொட்டி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் கல்வி அதிகாரிகள் உள்பட 21 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகிறார்கள். அதோடு தீர்ப்பை எதிர்பார்த்து ஏராளமானவர்களும் நீதிமன்றத்தில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்படுகிறது.

நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த மெகா பட்ஜெட்டில் புது திட்டம்: அரசு பள்ளி மாணவியர் சாதனை நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த மெகா பட்ஜெட்டில் புது திட்டம்: அரசு பள்ளி மாணவியர் சாதனை

நிலத்தடிநீர்மட்டத்தை மேம்படுத்த, மழைநீர் சேமிப்பு கட்டமைப்பைகட்டாயப்படுத்தும் பணிகள் நடக்கின்றன. இது, மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை உணர, அரசு பள்ளிமாணவர்களுக்கு,
சமீபத்தில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது.இதில், குளங்களை இணைத்து, ஒருங்கிணைந்த நீராதாரத்திற்கு வழிவகை செய்ய, மெகாபட்ஜெட்டில் திட்டம் தீட்டிய, ஒண்டிப்புதூர்அரசு பள்ளி மாணவியர், சவுமியாமற்றும் லதாவுக்கு, முதல் பரிசு கிடைத்தது.
பரிசு பெற்ற மாணவியரை, தனியாகசந்தித்து பேசியபோது...''நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல் எனும் தலைப்பில், அறிவியல்கண்காட்சி என்றதுமே, மூளைக்கு வேலை கொடுக்க ஆரம்பித்தோம். ஏற்கனவே இருக்கும் திட்டங்களுக்கு, தெர்மாகோலில் வடிவமைப்பு கொடுப்பதை விட, புது திட்டத்தைஅமல்படுத்தலாம் என்று முடிவானது. உடனே, இன்டர்நெட் பட்டனை தட்ட, நதிநீர்இணைப்பு குறித்து படித்தோம். இது, இந்தியாவுக்கான மெகாபிளான்.கோவையில் இருக்கும், குளங்களை இணைக்கற திட்டத்தை பற்றியோசிப்போம் என, களத்தில் குதித்தோம். ஆதரவாக, சவுமியாவின் அப்பா செந்தில்குமார் மற்றும்பள்ளி ஆசிரியர்களின், துணை கிடைத்தது. இதுவரை, குளங்களை இணைக்க போட்ட பிளான்குறித்து, நிறைய தகவல்களை சேகரிச்சோம். ஏதோ நடைமுறை சிக்கல் இருப்பதைஉணர்ந்து, நீராதார வழிதடங்கள் குறித்த, வரைபடம் உருவாக்கினோம்.இதில், மேட்டுப்பாளையம் வழியாகசெல்லும், கீழ்பவானி அணை ஆற்றுநீரையும், ஆழியாறுஅணையில் இருந்து வரும் நீரையும், நொய்யல் ஆற்றுப்பாதையுடன், இருகூர் மற்றும் வெள்ளலூர்பகுதிகளில் இணைப்பது குறித்து திட்டமிட்டோம். இதில், இருவேறு பகுதிகளில்இருந்து வரும் நீரை, நொய்யலுக்குகொண்டு வருவதற்கான மாதிரி பாதை உருவாக்கப்பட்டது.

கீழ்பவானிஆற்றுநீரை, சிறுமுகை அருகில் இருந்து திருப்பி, தென் திருப்பதி, காரமடை பின்பகுதி, நீலாம்பூர்வழியாக, இருகூரில் இணைப்பதற்கு, கிட்டத்தட்ட 55 கி.மீ., தூரம்விவசாய நிலங்களில் பாதை உருவாக்க முடியும். இதேபோல், ஆழியாறு அனை நீரை, பொள்ளாச்சி அருகில் இருந்து திருப்பி, கிணத்துக்கடவு, மலுமிச்சம்பட்டி, செட்டிப்பாளையம் வழியாக, வெள்ளலூரில் இணைப்பதற்கு, கிட்டத்தட்ட 55 கி.மீ.,பாதைஉருவாக்க வேண்டும். இந்த இருகூர் மற்றும்வெள்ளலூர், ஆற்றுநீரால், ஒரத்துப்பாளையம் வரையுள்ள, குளங்கள், ஆறுகளுக்கு நீர் கிடைக்க வழிவகைசெய்ய முடியும்.இந்த திட்டத்திற்கு, 110 மீட்டர்நீளம், 50 மீட்டர் அகலம், மூன்றுமீட்டர் ஆழம் கொண்ட பாதைஉருவாக்க, 185 கோடி ரூபாய் செலவாகும். இதேபோல், நீராதாரங்களுக்காக இணைக்கப்படும் குளங்கள், குட்டைகளை, தூர்வாரி, குழாய் அமைக்க, 55 கோடிரூபாய், நொய்யல் ஆற்றை தூர்வாரி, சுற்றுப்புறங்களை வலுப்படுத்த, 35 கோடி ரூபாய் என, மொத்தத்தில், 275 கோடி ரூபாய் திட்டமதிப்பீடாககணக்கிடப்பட்டுள்ளது. இதையே, வல்லுனர்கள் மேலும்எளிமையாக்கி, செயல்படுத்தினால் நீராதாரங்களை அதிகப்படுத்த முடியும்...இப்படி மூச்சு விடாமல், பேசி முடித்தனர், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியர்.

குழப்பமான ஆசிரியர் தகுதித் தேர்வு முறை

இந்தப் பள்ளிகளில் அரசு கல்வித்திட்டப்படிஇரண்டு ஆண்டு பட்டயப் பயிற்சிப்படிப்பு வழங்கப்படுகிறது. தேர்வில் வெற்றி பெற்ற பிறகுடி..டி. (T.E.T.) ஆசிரியர்தகுதித் தேர்வு தேர்வில் அதிகமதிப்பெண் பெற்று, தேர்வு, பெற்றால்அரசு ஆரம்பப்
பள்ளிகளில் ஆசிரியராகப்

பணியாற்றமுடியும்.(இப்படி ஒரு வடிகட்டலுக்குப் பதில் படித்து வெளியேறும்பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தேர்வுமுறையையும் பாட திட்டத்தையும் ஒழுங்குபடுத்தினால், இந்த இரட்டைத் தொல்லை நீங்கக் கூடும்). இதில் எத்தனை வழக்குகள், தேவையற்றவிமர் சனங்கள், போராட்டங்கள், அரசுக்கும் தலைவலிஇவற்றைஅடிப்படை மாறுதல்கள் மூலம் தவிர்க்க வேண்டும்அரசுகள். இப்போதும் காலந்தாழ்ந்து விடவில்லை

முதிர்ந்த ஓய்வு பெற்ற கல்வி ஆசிரியர்கள், கல்விஅறிஞர்களைக் கொண்ட கல்வி மேலாண்மைவாரியம் சுதந்தரமான முடிவு எடுத்து ஒழுங்குப்படுத்தும் அதிகாரத்துடன் ஏற்படுத்தப்பட்டு செயல் பட்டால் அதுபல பிரச்சினைகள் எழுவதற்கே வாய்ப் பில்லாமல் செய்யும்என்பது உறுதி.

1. இடைநிலை ஆசிரியர் நியமனம் சரியாக நடைபெறாதது.

2. பல்வேறுபோட்டிகளைச் சந்திக்க வேண்டிய வயதான ஆசிரியர்களின்பரிதாப நிலை.இவை காரணமாகஇப்படிப்பிற்குரிய கிராக்கி தேவை (Demand) குறைவதால், ஆசிரியர்  பயிற்சிபள்ளிகளை மூட வேண்டிய கொடுமையானநிலை! மாணவர் - ஆசிரியர் விகிதத்தில் மாறுதல் தேவை! மாணவர்ஆசிரியர் விகிதாசாரம் 1:30 என்பதைக் கடைப்பிடித்தால், ஆசிரியர்கள் தேவையும் அதன் காரணமாக நியமனங்களும்அதிகம் வாய்ப்பாக அமையும்

ஆரம்பக் கல்விக்கு அரசுகள்செலவழிக்க தாராளமான நிதி ஒதுக்கீடும், அதனைச்சரியாகச் செலவிடுவதுமான முறையில் மாறுதல் செய்தால் பள்ளிகளை- ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளை மூட வேண்டி இருக்காது. ஆட்சியாளர் நோய் நாடி, நோய்முதல் நாட முன் வரவேண்டும். மாவீரர் லெனின் ரஷ்யாவில் பொறுப்பேற்றவுடன் அவர் முன்னுரிமை தந்தது இரண்டு துறைகளுக்குE என்பதில் Education, Electricity)கல்வி, மின்சாரம் என்பவைகளில்தான். முதல் அமைச்சர் கவனிப்பாரா

ஆட்சியாளர்மறவாமல் மற்ற இலவசங்களை விரிவுபடுத்துவதைவிடபள்ளிகள் மூடப்படாமல்பார்த்துக் கொள்ள உடனடித் தீர்வுகாண முன் வர வேண்டும். தமிழக முதல்வர் கவனிப்பாரா? by கி.வீரமணி