Saturday, 7 June 2014

சிறுபான்மையின மாணவருக்கு கல்வி உதவித்தொகை அறிவிப்பு

சிறுபான்மை பிரிவு மாணவர்கள்,
இந்த ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற
விண்ணப்பிக்கலாம் என,
அரசு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு 18 ஆயிரத்து 989
சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு கல்வி உதவித்
தொகை கிடைக்கும். முஸ்லிம்கள்
8961, கிறிஸ்தவர்கள் 9772, சீக்கியர்கள்
25, புத்தமதத்தினர் 14, ஜைன
மதத்தினர் 215, பார்சி பிரிவினர் 2
பேருக்கு உதவித்
தொகை வழங்கப்படும். பிளஸ்1
க்கு மேல், உயர்கல்வி வரை இந்த
உதவித் தொகை பெறலாம்.
ஒரு குடும்பத்தில்
இருவருக்கு மட்டுமே வழங்கப்படும்.
உதவித்தொகை பற்றிய
அறிவிப்பை www.bcmbcmw.tn.gov.in என்ற
இணையதள முகவரியில் காணலாம்.
விண்ணப்பத்தை www.momascholarship.gov.in
என்ற முகவரியில் பதிவிறக்கம்
செய்யலாம். விண்ணப்பிக்க
கடைசி நாள் 15.9.2014.
ஏற்கனவே கல்வி உதவித்தொகை பெற்று வரும்
மாணவர்கள் தங்கள்
விண்ணப்பத்தை புதுப்பிக்க
கடைசி நாள் 10.10.2014.

0 comments:

Post a Comment