Thursday, 12 June 2014

யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவு வெளியீடு!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) 2013-ம் ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் மற்றும் குரூப் ஏ, குரூப் பி பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட இந்த தேர்வில் அகில இந்திய அளவில் 1122 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பொதுப்பிரிவினர் 517 பேரும், ஓபிசி பிரிவினர் 326 பேரும், தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 187 பேரும், பழங்குடியினர் பிரிவில் 92 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வில் அகில இந்திய அளவில் கவுரவ் அகர்வால் முதலிடம் பெற்றுள்ளார். முனிஷ் சர்மா இரண்டாம் இடமும், ரச்சித் ராஜ் மூன்றாமிடும் பெற்றுள்ளனர். தேனியைச் சேர்ந்த ஜெயசீலன் தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் அகில இந்திய அளவில் 45-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
நாடு முழுவதும் ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் மற்றும் குரூப் ஏ, குரூப் பி பிரிவில் 1228 பணியிடங்கள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment