Saturday, 13 December 2014

அரசு ஊழியர் 62 வயதில் ஓய்வா?

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை, 62 ஆக உயர்த்த திட்டமில்லை என, மத்திய பணியாளர் நல இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.


அவர் கூறியதாவது:

மத்திய அரசு பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை, தற்போதைய 60லிருந்து, 62 ஆக உயர்த்த திட்டம் எதுவும்இல்லை; மேலும், எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., பிரிவினரில் காலியாக உள்ள பின்னடைவு பணியிடங்களை, பொதுப் பிரிவினரால் நிரப்பவும், திட்டமிடப்படவில்லை. ஆண்டுதோறும், 1.75 லட்சம் மத்திய அரசு பணியாளர்கள் ஓய்வு பெற்று வருகின்றனர். ஓய்விற்கு பிறகு, அவர்களது வாழ்க்கையை தனிப்பட்ட முறையில், சுமுகமாக நடத்தி செல்ல உதவியாக, சோதனை அடிப்படையில், 2,000 ஓய்வூதியதாரர்களுக்கு, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறை சார்பில் முன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.

0 comments:

Post a Comment