This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Monday, 30 June 2014

WITHIN A SHORT SPAN OF TIME - HAS CROSSED 10,000 VIEWERS - THANKS TO THE VIEWERS

                                                THANKS TO THE VIEWERS

புதிய மருத்துவ காப்பீட்டில் சேர ஓய்வூதியதாரர்களுக்கு காலக்கெடு நீட்டிப்பு

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர ஓய்வூதியதாரர்களுக்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள
அறிக்கை: 1-7-2014 முதல் ஓய்வூதியர்களுக்கான புதிய 

மருத்துவ காப்பீட்டுதிட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களது விபரங்கள் அடங்கியபடிவத்தை ஜூன் 30க்குள் அளிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. தற்போதுஇதற்கான காலக்கெடு இம்மாதம் 31ம் தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.


எனவே, படிவங்களை இதுவரை அளிக்காத ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் 31ம் தேதிக்குள் ஓய்வூதியம்பெறும் அலுவலகத் தில் பொதுத்துறை வங்கிகிளையில் அளித்து, அதன் ஒரு நகலைஓய்வூதியம் வழங்கும் அலுவலரின் கையொப்பத்துடன் பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த நகலை, அடையாளஅட்டை வழங்கப்படும் வரை பணம் செலவின்றிமருத்துவச் சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்

முதல் பருவத் தேர்வு - கேள்வித்தாள் தயாரிக்க வல்லுநர் குழு

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு மற்றும் திருப்ப தேர்வுகள், ஆண்டு தேர்வுகள் ஆகியவற்றுக்கான கேள்வித்தாள்களை, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தயாரிக்கின்றனர்.

தற்போது சமச்சீர் கல்வி முறையும், முப்பருவ முறையும் உள்ளது. 10மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுக்கான கேள்வித்தாள்கள் மட்டுமே அரசு தேர்வுகள் இயக்ககத்தின் மூலம் அச்சிட்டு வழங்கப்படும்.

பருவ தேர்வுகளுக்கான கேள்வித்தாள்களை கடந்த ஆண்டு முதல் அரசுத் தேர்வுகள் இயக்ககமே வல்லுனர் குழுவை கொண்டு தயாரித்தது.அனைத்து வகை பள்ளிகளுக்கும் இந்த கேள்வித்தாள் அடிப்படையில் பருவமுறைத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. வரும் செப்டம்பர் 10 அல்லது 12ம் தேதியில், முதல் பருவ தேர்வு தொடங்க வேண்டும். அதனால் அதற்கான கேள்வித்தாள்களை வடிவமைக்கும் பணியை தேர்வுத் துறை இப்போதே தொடங்கிவிட்டது. இதற்காக சிறப்பு ஆசிரியர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 


டி.என்.பி.எஸ்.சி., தேர்வு சுப்ரீம் கோர்ட் உத்தரவு.

கடந்த, 2005ல், தமிழக அரசு பணியாளர்தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில், குரூப் -1 தேர்வு நடந்தது. இந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதை விசாரித்த ஐகோர்ட், அந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற, 83 பேரின் தேர்வை ரத்து செய்ததுடன், முறைகேடு நடந்ததையும் உறுதி செய்தது. இதையடுத்து, தேர்ச்சி பெற்றவர்கள் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்தவழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தேர்வை ரத்து செய்த ஐகோர்ட் உத்தரவை உறுதி செய்து, நேற்று தீர்ப்பளித்தது. இதன்படி, தமிழகத்தில் 83 டி.ஆர்.ஓ.,க்கள் பதவி இழக்கின்றனர்.

'டிஸ்மிஸ்' எளிதல்ல:

இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரம் கூறியதாவது: எழுத்து தேர்வில், குறிப்பிட்ட விண்ணப்பதாரர்களுக்கு, மதிப்பெண் அளிப்பதில் தாராளம் காட்டப்பட்டது என்பது தான் குற்றச்சாட்டு. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து, மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்படலாம். அதன் மீது விசாரணை நடந்து தீர்ப்பு வர வேண்டும். அப்படி, மறு ஆய்வு மனு மீதும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டால், தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய கட்டாயம், தமிழக அரசுக்கு ஏற்படும். அப்போது, 83 பேரையும், 'டிஸ்மிஸ்' செய்வது குறித்த அரசாணையை, தமிழக அரசு வெளியிட வேண்டும். அப்போது தான், 83 பேரையும், பணி நீக்கம் செய்ய முடியும். 83 பேரும், தற்போது, ஒன்று, இரண்டு பதவி உயர்வு பெற்று, உயர் அதிகாரிகளாக உள்ளனர். எனவே, 83 பேரையும், 'டிஸ்மிஸ்' செய்வது என்பது எளிதான காரியம் கிடையாது. இவ்வாறு, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரம் தெரிவித்தது. 

ஜூலை 1 - கல்பனா சாவ்லா பிறந்ததினம் .

ராகேஷ் சர்மாவிற்கு பிறகு விண்வெளிப் பயணம் மேற்கொண்டவர் கல்பனா சாவ்லா

பிறப்பு:

கல்பனா சாவ்லா அவர்கள், இந்தியாவிலுள்ள ஹரியானா மாநிலத்தில் கர்னல் என்ற ஊரில் ஜூலை 1, 1961 ஆம் ஆண்டு, பனாரஸ் லால் சாவ்லாவுக்கும், சன்யோகிதா தேவிக்கும் மகளாக, ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு சுனிதா மற்றும் தீபா என்ற இரண்டு சகோதரிகளும், சஞ்சய் என்ற சகோதரனும் இருந்தனர்.


 ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி:

 கல்பானா சாவ்லா, தனது ஆரம்ப  கல்வியை கர்னலில் உள்ள அரசு  பள்ளியில் தொடங்கினார். 1982 ஆம்  ஆண்டு சண்டிகரில் உள்ள “பஞ்சாப்  பொறியியல் கல்லூரியில்” விமான  ஊர்தியியல் துறையில் கல்விப்  பயின்று இளங்கலைப் பட்டமும்  பெற்றார். பின்னர், 1984 ஆம் ஆண்டு  அமெரிக்காவில் உள்ள “டெக்சாஸ்  பல்கலைக்கழகத்தில்” விண்வெளிப்  பொறியியல் துறையில் முதுகலைப்  பட்டம் பெற்றார். 1986ல் பௌல்தேரில்

உள்ள “கோலோரடோ பல்கலைக்கழகத்தில்” இரண்டாவது முதுகலைப் பட்டமும், பிறகு 1988ல் வெண்வெளி பொறியியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றார்.


விண்வெளி பயணம்:

1988 ஆம் ஆண்டு, நாசா அமெஸ் ஆராய்ச்சி கூடத்தில் “ஒசெர்செட் மேதொட்ஸ் இன்க்யின்” துணைத்தலைவராக பணியாற்றிய அவர் வி/எஸ்.டி.ஓ.எல் (V/STOL) இல் சி.எஃடி (CFD) ஆராய்ச்சி செய்தார். விமானம் மற்றும் கிளைடர்களை ஓட்டக் கற்றுக்கொடுக்க தகுதிச் சான்றிதழ் பெற்றதோடு மட்டுமல்லாமல், ஓட்டவும் அனுமதி பெற்றிருந்தார். ஃப்க் க்ட்5ஏசி என்ற அடையாளத்துடன் தரும் டெக்னிசியன் கிளாஸ் அமெச்சூர் ரேடியோ அனுமதியும் பெற்றிருந்தார். 1995 ல் நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்த அவர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் “கொலம்பிய விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ்-87 (STS-87) இல்” பயணம் செய்வதற்குத் தேர்வு செய்யப்பட்டார். 1997 ஆம் ஆண்டு மேற்கொண்ட இந்த பயணத்தில், சுமார் 372 மணி நேரம் வெண்வெளியில் இருந்து சாதனைப் புரிந்து வெற்றிகரமாக பூமி திரும்பினார். இதன் மூலம் விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையும் பெற்றார்.

கொலம்பியா விண்கல நிகழ்வு:

முதல் விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்த கல்பனா சாவ்லா, அடுத்த ஐந்து ஆண்டுகளில் தன்னுடைய இரண்டாவது பயணத்திற்குத் தயாரானார். 2000 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளகூடிய இந்த பயணம் பலதரப்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால் காலம் கடத்தப்பட்டது. பின்னர், 2003-ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி விண்வெளி ஆராய்ச்சிக்காக, அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ்-107 (STS-107) அனுப்பி வைக்கப்பட்டது. இந்திய வம்சாவளி பெண்ணாகிய கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேர் அதில் பயணித்தனர். 16 நாள் ஆய்வை முடித்து வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பிய அவர்கள் சென்ற அந்த விண்கலம், அமெரிக்காவின் டெக்ஸாஸ் வான்பரப்பில் வெடித்துச் சிதறியது. கல்பனா சாவ்லா உள்பட ஏழு விலைமதிப்பற்ற விண்வெளி வீரர்களும் பலியாகினர்.

ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கும்படி தன் கனவுகளை நனவாக்கி வாழ்ந்து காட்டியவர் கல்பனா சாவ்லா. பெண்ணினத்தின் பெருமைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய அவர், இந்தியாவிற்கு உலகப் புகழ் சேர்த்தவர் என்றால் அது மிகையாகாது. ‘கனவுகளைக் கண்டு அந்த கனவுகளை நனவாக்குவதற்கு விடா முயற்சியோடும், முழுமனதோடும் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்’ என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தி சென்ற வீரப் பெண்ணை நாமும் போற்றுவோம்.

விருதுகளும் அங்கீகாரங்களும்:

நியூயார்க்கில் உள்ள ஒரு தெருவிற்கு “கல்பனா வே” என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க கர்நாடக அரசாங்கம் “கல்பனா சாவ்லா விருதினை” 2004 ஆம் ஆண்டிலிருந்து வழங்கி வருகிறது.

நாசா ஆய்வகம், கல்பனா சாவ்லாவின் நினைவைப் பறைசாற்றும் விதமாக ஒரு அதிநவீன கணினியை அற்பணித்துள்ளது.

காங்கிரேஷனல் ஸ்பேஸ் மெடல் ஆப் ஆனர் விருது.

நாசா ஸ்பேஸ் பிளைட் மெடல்

நாசா டிஸ்டிங்குவிஷ்ட் சர்வீஸ் மெடல்

டிபென்ஸ் டிஸ்டிங்குவிஷ்ட் சர்வீஸ் மெடல்

இந்தியாவில் பல கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசாங்கப் பொது நிறுவனங்களுக்கு, கல்பனா சாவ்லாவின் நினைவைப் பறைசாற்றும் வகையில் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

01.07.2014 முதல் அகவிலைப்படி உயர்வு எவ்வளவு?

மே'2014 மாத விலைவாசி உயர்வுக் குறியீட்டு எண் இன்று (ஜூன் 30) வெளியிடப்பட்டது.இதன் படி அகவிலைப்படி உயர்வு 106.17% ஆக உள்ளது.

ஜூன் மாத விலைவாசி உயர்வுக் குறியீட்டு எண் ஜூலை 31 ஆம் தேதி வெளியிடப்படும்.அதன்பிறகே அகவிலைப்படி உயர்வு எவ்வளவு என்பது துல்லியமாக தெரிய வரும்.

இதன்பிறகு அகவிலைப்படி உயர்வு பற்றிய நடைமுறைகள் தொடங்கும்.ஆகஸ்ட் இரண்டாம் வாரம் அகவிலைப்படி உயர்வு பற்றிய பரிந்துரைகள் மத்திய அமைச்சரவை குழுவிற்கு அனுப்பப் படும்.மத்திய காபினெட் இதுபற்றி முடிவு செய்து, செப்டம்பர் முதல் அல்லது இரண்டாம் வாரம் அதிகாரப் பூர்வமான அறிவிப்பை வெளியிடும்.இதன் பிறகு அரசாணை வெளியிடப்படும்.மத்திய அரசின் அரசாணையை பின்பற்றி மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பை வெளியிடும்.மாநில அரசுகள் செப்டம்பர் 2 அல்லது 3 ஆம் வாரத்தில் அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பை வெளியிடலாம் என எதிபார்க்கப் படுகிறது.

மாநில அரசு ஊழியர்கள் அக்டோபர் முதல் வாரத்தில் 3 மாத அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையை பெறுவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.01.07.2014 முதல் அகவிலைப்படி உயர்வு 7% அல்லது 8% ஆக இருக்கலாம் என கணிக்கப் பட்டுள்ளது. 

2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்;

ஆசிரியர்தேர்வு வாரியம் துணை இயக்குனர்அவர்களின் செயல்முறைகள் ..எண்.811/TET/2014, நாள்.17.06.2014ன் படி  TNTETல்தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்
தமிழ்- 9853
ஆங்கிலம்- 10716
கணிதம்- 9074
தாவரவியல்- 295
வேதியியல்- 2667

விலங்கியல்- 405
இயற்பியல்- 2337
வரலாறு- 6211
புவியியல்- 526

மொத்தம்தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் : 42084

விண்வெளியில் மேலும் ஒரு மைல்கல்: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

ஸ்ரீஹரிகோட்டா: பிஎஸ்எல்சி சி-23 ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் பாராட்டு தெரிவித்தார்.

பிஎஸ்எல்சி சி-23 டிக்கெட்டின் வெற்றிப் பயணத்துக்கு பாடுபட்ட அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்த மோடி, ராக்கெட் பயணத்தை நேரில் பார்வையிட்டது பெருமைக்குரியது என்றார்.

ஸ்ரீஹரிகோட்டாவிற்கு முதன் முறையாக வந்திருக்கிறேன் என்று தெரிவித்த மோடி, இந்த அனுபவத்தை மறக்க மாட்டேன் என்றும், நாட்டு வளர்ச்சிக்கு விண்வெளி மேம்பாடு முக்கியமானது என்றும், விண்வெளியில் மேலும் மைல்கல் என்றும் கூறினார்.

சாதாரண நிலையில் தொடங்கி வெற்றிகரமாக செல்கிறது இந்திய விண்வெளி பயணம் என்று தெரிவித்த மோடி, விண்வெளித்துறையில் இந்தியாவால் சாதிக்க முடியும் என உலக நாடுகள் உணர்ந்துள்ளன என்றார்.

ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதால் ஒவ்வொரு இந்தியனுக்கு பெருமை, மகிழ்ச்சி என்று கூறிய அவர், நவீன இந்தியாவை உருவாக்குவதில் தொழில்நுட்பம் முக்கியத்துவம் வாய்ந்தது என்றார்.

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி23 ராக்கெட்!

ஸ்ரீஹரிகோட்டா: பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், 5 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி23 ராக்கெட்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா, ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9 மணி 52 நிமிடங்களுக்கு 5 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி 23 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.


ராக்கெட் ஏவப்படுவதை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி ஸ்ரீஹரிகோட்டாவுக்கு நேற்று மாலை சென்றார். ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 49 மணி நேர கவுன்ட் டவுன் கடந்த சனிக்கிழமை காலை 8 மணி 52 நிமிடங்களுக்கு தொடங்கியது. விண்வெளியில் சுற்றும் செயற்கைக்கோள் கழிவுகள் மோதுவதை தவிர்ப்பதற்காக ஏற்கெனவே திட்டமிட்டதைவிட மூன்று நிமிடங்கள் தாமதமாக ராக்கெட் ஏவப்பட்டது.
பி.எஸ்.எல்.வி. சி23 ராக்கெட், பிரான்ஸ் நாட்டின் ஸ்பாட் 7, கனடா நாட்டின் இரண்டு செயற்கைகோள்கள் உள்ளிட்ட 5 செயற்கைகோள்களை சுமந்து செல்கிறது. இதில், பூமியைக் கண்காணிப்பதற்காக ஸ்பாட்-7 செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது. இந்தச் செயற்கைக்கோளின் மொத்த எடை 714 கிலோ ஆகும். பி.எஸ்.எல்.வி சி23 ராக்கெட்டில் அனுப்பப்பட்ட 5 செயற்கைக்கோள்களில் இதுதான் அதிக எடை கொண்டது.

கடல் வழிப் போக்குவரத்தைக் கண்காணிப்பதற்காக ஜெர்மனி நாட்டின் ஐசாட் செயற்கைக்கோளும், ஜி.பி.எஸ். அமைப்புக்கு உதவும் கனடா நாட்டின் என்.எல்.எஸ். 7.1 மற்றும் என்.எல்.எஸ். 7.2 ஆகிய செயற்கைக்கோள்களும், சென்சார் கருவியுடன் கூடிய சிங்கப்பூர் நாட்டின் வெலாக்ஸ்-1 செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்பட்டன.

ஐசாட் 14 கிலோவும், என்எல்எஸ் 7.1, 7.2 ஆகியவை தலா 15 கிலோவும், வெலாக்ஸ் 7 கிலோவும் எடை கொண்ட சிறிய ரக செயற்கைக்கோள்கள் ஆகும். பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் மூலம் ஏற்கெனவே வெளிநாடுகளைச் சேர்ந்த 35 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

தாள் இரண்டில் பாட வாரியாக,இன வாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் RTI மூலம் பெறப் பட்ட விவரம்.

2013 ஆம் ஆண்டு TET தேர்வின் இரண்டாம் தாளில் பாட வாரியாக,இன வாரியாக தேர்ச்சி பெற்றவர்களது விவரம்.

Sunday, 29 June 2014

TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் இன்று (30.06.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை.

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை நிலையை எட்டாததால் மீண்டும் இன்று ( 30.06.14 ) விசாரணக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

மீண்டும் இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் இராமசுப்ரமணியன் வேலுமணி, ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வருகின்றன. 


'நூற்றுக்கு நூறு' திட்டம் ஆசிரியர்களுக்கு உத்தரவு.

மதுரை கல்வித் துறையில், 'நுாற்றுக்கு நுாறு' என்ற திட்டம் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. இதன்படி, வரும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில், நுாறு சதவீதம் தேர்ச்சி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில், அரசு பொதுத் தேர்வுகளில், மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை ஆய்வு செய்ததில், தமிழ், ஆங்கில பாடங்களில் மாணவர்கள் அதிகம் தோல்வியுற்றதும், ஒரு பாடத்தில் மாணவர்கள் தோல்வியும் அதிகரித்திருந்தது. ஒரு பாடம் தோல்வி மட்டும் தவிர்க்கப்பட்டிருந்தால், மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் மூன்றாக உயர்ந்திருக்கும் என்பது தெரியவந்தது.இதன் விளைவாக வரும் அரசு பொதுத் தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சியை இலக்காக கொண்டு, 'நுாற்றுக்கு நுாறு' என்ற திட்டத்தை, முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி மீண்டும் துவக்கியுள்ளார்.

அவர் கூறியதாவது:ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் இருந்தால் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முடியும். மாணவர்களுக்கு என்ன பிரச்னைகள் இருந்தாலும், ஆசிரியர்கள் நினைத்தால், அதை சரி செய்து அவர்களை நல்லமுறையில் படிக்க வைக்க முடியும்.சென்றாண்டு ஒரு பாடத்தில் மட்டும் தோல்வியுற்ற மாணவரின் ஆசிரியர்கள் 150 பேரை அழைத்து விளக்கம் கேட்டேன்.'மாணவர்கள், ஆசிரியர்களின் பேச்சை கேட்பதில்லை' உட்பட பல்வேறு காரணங்களைகூறினர். இதையடுத்து, முதல் மாதாந்திர தேர்வில், தோல்வியுறும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.மேலும், 'நுாற்றுக்கு நுாறு' திட்டம் மூலம் ஒவ்வொரு மாதமும், குறிப்பிட்ட மாணவர்களின் கல்வித் தரத்தை ஆய்வு செய்து எனக்கே நேரடியாக அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். மாணவர் திறனுக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்கள் கற்றல் பணிகளை திட்டமிட வேண்டும்.

மாணவர்களை முழுமையாக கண்காணித்து, அவர்கள் பிரச்னை குறித்தும் ஆராய வேண்டும். பிளஸ் 2வை அடுத்து, பத்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு இதுபோன்ற சிறப்பு வகுப்புகள் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது, என்றார். 

நெல்லையில் விடிய விடிய நடைபெற்ற ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு.

திருநெல்வேலியில் கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கான பணி இடமாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை காலை தொடங்கிய இக்கலந்தாய்வு இணையதளம் சரிவர செயல்படாததால் விடிய விடிய நடைபெற்றது.

எனினும் பணியிட மாறுதல் கிடைக்காமல் இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு,பணி நிரவல், பணியிட மாறுதல் கலந்தாய்வு ஜூன் மாதம் 16 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வு மாநிலம் முழுவதும் ஒரே சமயத்தில் இணையதளம் மூலம் நடத்தப்படுகிறது.திருநெல்வேலி மாவட்ட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு வண்ணார்பேட்டையில் உள்ள எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான கலந்தாய்வு சனிக்கிழமைநடைபெற்றது.

கலந்தாய்வில் 133 பட்டதாரி ஆசிரியர்களும், 33 இடைநிலை ஆசிரியர்களும், 15 தொகுப்பு ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். கலந்தாய்வு நடைபெறும் மையத்திற்கு இவர்கள் காலை 9 மணிக்கே வந்து விட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிரியைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

காலையில் 10 மணிக்குதொடங்க வேண்டிய கலந்தாய்வு இணையதள சர்வர் செயல்படாத காரணத்தால் பிற்பகல் வரை கலந்தாய்வு தொடங்கவில்லை. பிற்பகல் 2 மணிக்கு பிறகு தொடங்கிய கலந்தாய்வில் முதல் கட்டமாக பட்டதாரி ஆசிரியர்கள்மாவட்டம் விட்டு மாவட்டம் விட்டு பணியிட மாறுதல் நடைபெற்றது. இதில் 8 பேருக்கு மட்டும் விரும்பிய மாறுதல் கிடைத்தது.தொடர்ந்து சிறப்பாசிரியர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. இதில் 7 பேருக்கு பணி இடமாறுதல் கிடைத்தது. இரவு 10 மணியை கடந்த நிலையில் இணையதள சர்வர் இயங்காததால் இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் தேக்கம் ஏற்பட்டது.இதனால் கலந்தாய்வுக்கு வந்திருந்த ஆசிரியர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட அறைகளில் தங்கியிருந்தனர்.நள்ளிரவில் 2 மணிக்கு பிறகு கலந்தாய்வு சர்வர் செயல்படத் தொடங்கியதால் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

தூக்கத்தை இழந்து பணியிட மாறுதல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த இடைநிலை ஆசிரியர்கள்கலந்தாய்வில் பங்கேற்றனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நீடித்த கலந்தாய்வில் ஒருவருக்கு கூட வெளி மாவட்டத்திற்கான பணியிட மாறுதல் கிடைக்கவில்லை.இதை தொடர்ந்து உடற்கல்வி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.பின்னர் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற்றது. இணையதள சர்வர் சரிவர இயங்காத காரணத்தால் அறிவிக்கப்பட்ட கலந்தாய்வு பல மணி நேரம் தாமதமாக

கலந்தாய்வில் குளறுபடி:

கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கலந்தாய்வில் காலி பணியிடங்கள், பிற மாவட்டங்களில் உள்ள காலி பணியிடங்கள் குறித்த முழுமையான தகவல் தெரிவிக்கப்படவில்லை. கலந்தாய்வில் முறையான நடைமுறைகள் 

பிரமாண்டம்:பி.எஸ்.எல்.வி., ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது;ஐந்து வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் பயணம்

பி.எஸ்.எல்.வி., சி - 23 ராக்கெட், இன்று காலை, 9:52 மணிக்கு, ஐந்து வெளிநாட்டு செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்கிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், இஸ்ரோ வர்த்தக ரீதியாகவும் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, பி.எஸ்.எல்.வி., சி - 23 ராக்கெட், இன்று காலை, 9:52 மணிக்கு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள, முதலாவது ஏவுதளத்தில் இருந்து, விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இதற்கான, 49 மணி நேர, கவுன்ட் - டவுன் நேற்று முன்தினம் காலை, 8:52 மணிக்கு துவங்கியது. பி.எஸ்.எல்.வி., ராக்கெட், 44.4 மீட்டர் உயரம் கொண்டது. இதன் மொத்த எடை, 230 டன். பி.எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம், பிரதான செயற்கைக்கோளாக, பிரான்ஸ் நாட்டின், ஸ்பாட் - 7 செயற்கைக்கோளும், ஜெர்மனி, கனடா மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் சிறிய ரக செயற்கைக் கோள்களும் விண்ணில் ஏவப்படுகின்றன.

பி.எஸ்.எல்.வி., ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட, 18 நிமிடங்களில், பிரான்ஸ் நாட்டின், ஸ்பாட் - 7 செயற்கைக்கோள், பூமியில் இருந்து, 659.8 கி.மீ., உயரத்தில் நிலை நிறுத்தப்படும். இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம், 10 ஆண்டுகள்.ஜெர்மன் நாட்டின், ஐசாட் செயற்கைக்கோள், விண்ணில் ஏவப்பட்ட, 18:55 நிமிடங்களில், பூமியில் இருந்து, 660.6 கி.மீ., உயரத்தில் நிலை நிறுத்தப்பட உள்ளது.கனடா நாட்டின், என்.எல்.எஸ்., 7.1செயற்கைக்கோள், 19.05 நிமிடங்களில், பூமியில் இருந்து, 661.2 கி.மீ., உயரத்தில் நிலை நிறுத்தப்படும்.
மற்றொரு செயற்கைக்கோள், என்.எல்.எஸ்., 7.1, 19.55 நிமிடங்களில், பூமியில் இருந்து, 661.8 கி.மீ., உயரத்தில் நிலை நிறுத்தப்படும்.சிங்கப்பூர் நாட்டின், வெலாக்ஸ்- 1 செயற்கைக் கோள், 19.96 நிமிடங்களில், பூமியில் இருந்து, 662.3 கி.மீ., உயரத்தில் நிலை நிறுத்தப்படும்.

கடந்த 2013ல், பி.எஸ்.எல்.வி., சி- 20ராக்கெட் மூலம், கனடா, 2; ஆஸ்திரியா, 2; டென்மார்க், 1 மற்றும் பிரிட்டன், 1 ஆகிய, ஆறு வெளிநாட்டு, செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன.கடந்த 2008ல், அதிகபட்சமாக, பி.எஸ்.எல்.வி., சி - 9 ராக்கெட் மூலம், கனடா, ஜப்பான், நெதர்லாந்து, டென்மார்க், ஜெர்மனி, ஆகிய நாடுகளின், எட்டு ராக்கெட்டுகள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டன.

மூன்று நிமிடம் தாமதம்:பி.எஸ்.எல்.வி., சி - 23 ராக்கெட், 3 நிமிடம் தாமதமாக தன் பயணத்தை துவங்க உள்ளது.இது குறித்து, இஸ்ரோ சேர்மன் ராதாகிருஷ்ணன் கூறுகையில், விண் வெளியில் சுற்றும் செயற்கைக்கோள் கழிவுகளுடன், ராக்கெட் மோதுவதை தவிர்ப்பதற்காக, ஏற்கனவே திட்டமிட்டதை விட, 3 நிமிடங்கள் தாமதமாக ராக்கெட் ஏவப்படும். அதை கருத்தில் கொண்டு, இன்று காலை, 9:49 மணிக்கு ஏவுவதற்கு, பதிலாக 9:52 மணிக்கு (3 நிமிடம் தாமதமாக) ஏவப்படுகிறது, என்றார்.

பி.எஸ்.எல்.வி.,- ஜி.எஸ்.எல்.வி., வித்தியாசம் என்ன?: பி.எஸ்.எல்.வி., என்பது, போலார் சேட்டலைட் லாஞ்சிங் வெகிகிள் எனவும், ஜி.எஸ்.எல்.வி., என்பது, ஜியோசிங்க்ரோனஸ் சேட்டலைட் லாஞ்ச்வெகிகிள் எனவும் அழைக்கப்படுகிறது.இரண்டுக்கும் இடையே பல வித்தியாசங்களும், மாறுபாடுகளும் உள்ளன; அதே நேரத்தில் சில ஒற்றுமைகளும் உள்ளன.இரண்டுமே ராக்கெட்டுகள் தான். பி.எஸ்.எல்.வி., பழைய முறை; ஜி.எஸ்.எல்.வி., புதிய முறை.

பி.எஸ்.எல்.வி., ராக்கெட், 1 டன் (1,000 கிலோ) எடைக்கு குறைவான செயற்கைக்கோள்களை சுமந்து செல்லக் கூடியது. பி.எஸ்.எல்.வி., அதிகபட்சம், 2 - 2.5 டன் எடையை சுமந்து செல்லக் கூடியது.ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டில் அதிநவீன, கிரையோஜெனிக் ராக்கெட் இன்ஜின் பயன் படுத்தப்படுகிறது. இதனால், அதிக அழுத்தத்துடன் கூடுதல் எடையை சுமந்து செல்ல முடியும்.
பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுக்கு, நான்கு நிலைகள் உள்ளன; ஜி.எஸ்.எல்.வி.,க்கு மூன்று நிலைகள் உள்ளன.பி.எஸ்.எல்.வி.,யில், ஆறு சாலிட் பூஸ்டர்கள்; ஜி.எஸ்.எல்.வி.,யில், நான்கு லிக்யுட் பூஸ்டர்கள் உள்ளன.பி.எஸ்.எல்.வி., ராக்கெட் ஏவுதல் வெற்றிகரமானது. ஏவப்பட்ட, 18 முறைகளில், 16 முறைவெற்றி பெற்றுள்ளது; இரு முறை தோல்வி அடைந்துள்ளது.
ஜி.எஸ்.எல்.வி.,ராக்கெட் ஏவுதல்,7முறைநடைபெற்றதில், நான்கு முறை தோல்வி அடைந்துள்ளது; இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது. ஒரு முறை, பாதி தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

பிரதமர் மோடி பார்வையிடுகிறார்:ஸ்ரீஹரிகோட்டா செல்லும் வழியில் சென்னைக்கு நேற்று வந்த பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக முதல்வர் ஜெயலலிதா, விமான நிலையத்தில் சந்தித்து பேசினார்.பி.எஸ்.எல்.வி., சி - 23 ராக்கெட், பிரதமர், நரேந்திர மோடி பதவியேற்ற பின் விண்ணில் செலுத்தப்படும், வர்த்தக ரீதியிலான முதல் ராக்கெட் ஆகும். ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இன்று ராக்கெட் ஏவுவதை பார்வையிட, பிரதமர் நரேந்திர மோடி, ஸ்ரீஹரிகோட்டா செல்லும் வழியில் நேற்று மாலை, சென்னை வந்தார்.
அவர் வந்த ராணுவ விமானம், நேற்று மாலை, 3:50 மணிக்கு, சென்னை வான்வெளியை நெருங்கிய போது, விமான நிலைய பகுதியில், சூறைக்காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் பாதுகாப்பு கருதி, சென்னை விமான கட்டுப்பாட்டு அறை (ஏ.டி.சி.,) உத்தரவுபடி, அந்த விமானம், 40 நிமிடங்கள் வானிலேயே வட்டமிட்டது.பின் நிலைமை சீரானவுடன், 4:30 மணிக்கு, மோடி வந்த விமானம், பழைய விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.அங்கு மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதல்வருடன் பேச்சு: பின், பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதாவை, விமான நிலைய ஓய்வு அறையில், 10 நிமிடங்கள் தனியாக சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பிற்கு இடையே, பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள், நிலவி வரும் வானிலை குறித்து, வானிலை ஆராய்ச்சி மையத்தை தொடர்பு கொண்டு விவாதித்தனர். இதில் வானிலை சீரடைந்ததாக கூறியதை அடுத்து, பிரதமரை ஹெலிகாப்டரிலேயே ஸ்ரீஹரிகோட்டா அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது.பின் வானிலை சீரடைந்த பின் மாலை,5 மணிக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலம், நரேந்திர மோடி,வெங்கய்யா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு சென்றனர்.
ராக்கெட் ஏவும் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, இன்று காலை, 1 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, சென்னை திரும்பும் பிரதமர் மோடி, 11:15 மணிக்கு, ராணுவ தனி விமானம் மூலம், டில்லிபுறப்பட்டுச் செல்கிறார்.

எந்தெந்த நாடுகளின் ராக்கெட்டுகள்பி.எஸ்.எல்.வி., சி - 23 ராக்கெட்டுடன், ஐந்து வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட உள்ளன.பிரான்ஸ் நாட்டின், ஸ்பாட் - 7 செயற்கைக்கோள், 714 கிலோ எடை உடையது. இந்த செயற்கைக்கோள், பூமியை ஆய்வு செய்ய பயன்படும். இதற்காக இந்த செயற்கைக் கோளில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன.
ஜெர்மனி நாட்டின், ஐசாட் 14 கிலோ எடை கொண்டது. இந்த செயற்கைக்கோள், கடல் வழிப் போக்குவரத்தைக் கண்காணிப்பதற்கு உதவும்.கனடா நாட்டின், என்.எல்.எஸ்., 7.1 மற்றும் என்.எல்.எஸ்., 7.2 ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களும், தலா, 15 கிலோ எடை கொண்டது. இந்த செயற்கைக்கோள், ஜி.பி.எஸ்., அமைப்புக்கு உதவும்.சிங்கப்பூர் நாட்டின், வெலாக்ஸ் - 1 செயற்கைக்கோள், 7 கிலோ எடை கொண்டது. இது, சென்சார் கருவியுடன் விண்ணில் செலுத்தப்படுகிறது.

பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகள் மூலம் ஏற்கனவே வெளிநாடுகளைச் சேர்ந்த, 35 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.இஸ்ரோ, பல முறை பி.எஸ்.எல்.வி.,ராக்கெட்டுகளை, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

உலகை திரும்பிப் பார்க்க வைத்த இஸ்ரோ!

சுயமாக ஒரு செயற்கைக்கோளை கட்டமைத்து, அதனை நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தும் திறன் படைத்த நாடுகளின் தர வரிசைப்பட்டியலில் இந்தியா 5 வது இடத்தில் உள்ளது. இதனை மீண்டும் உறுதிப்படுத்தும் முயற்சியாக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த

செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ள இஸ்ரோ, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, சிங்கப்பூர், ஆகிய 4 நாடுகளைச் சேர்ந்த 5 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இஸ்ரோவிற்கு கணிசமான வருமானம் கிடைக்கவுள்ளது.
தொடர் வெற்றியில் PSLV:
இந்தியாவைப் பொறுத்தளவில் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு இரண்டு வகையான ஏவூர்திகளை பயன்படுத்தி வருகிறோம். அவை GSLV, PSLV இவற்றில் PSLV யைப் பொறுத்தளவில் இது 27 வது முயற்சி… இதில் ஏற்கெனவே 26 வெற்றிகளைப் பெற்றுள்ள இந்தியா, சமீபகாலமாக PSLV யின் நவீன ரகமான PSLV "XL" வகை ஏவூர்திகளை பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக PSLV C-11 ஐ பயன்படுத்தி சந்திரனுக்கு சந்திராயனையும், PSLV C-25 ஐ பயன்படுத்தி செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யானையும், செலுத்திய இஸ்ரோ, மற்ற தகவல் தொடர்பு பயன்பாட்டிற்கான செயற்கைக்கோள்களையும் அனுப்பியுள்ளது.
இந்த தொடர் வெற்றிகளின் அடுத்த கட்டமாக தற்போது விண்ணில் பாயவுள்ள PSLV C-23 ஏவூர்தி 230 டன் எடையும் 44.4 மீட்டர் உயரமும் கொண்டது. 4 அடுக்குகளைக் கொண்ட இந்த ஏவூர்தியில் திட மற்றும் திரவ எரிபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இந்த ஏவூர்தியில் வைத்து அனுப்பப்படும் செயற்கைக்கோளின் எடை குறைவு என்பதால், ஏவூர்தியின் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டிருக்கும் திட எரிபொருளில் இயங்கும் உந்துவிகள் இணைக்கப்படவில்லை. இவ்வாறு செலுத்தப்படும் 10 வது ஏவூர்தி இதுவாகும்.
செயற்கைக்கோள்களும் அதன் பயன்பாடுகளும்:
1. SPOT-7 - பிரான்ஸ்: பூமியைப் பற்றிய ஆய்விற்காக.
2. AISAT - ஜெர்மனி: கப்பல் போக்குவரத்து, வழித்தடம் குறித்த பயன்பாட்டிற்காக செலுத்தப்படுகிறது. நானோ செயற்கைக்கோள்களில் முதல் DLR செயற்கைக்கோள்.
3. NLS7.1 (Can-X4) - கனடா: துல்லியமான அளவீடுகளுக்காக பயன்படவுள்ளது.
4. NLS7.2 (Can-X5) - கனடா: துல்லியமான அளவீடுகளுக்காக பயன்படவுள்ளது.
5.VELOX-1 - சிங்கப்பூர்: கட்டிட வரை படம் தயாரிக்க பயன்படும்.
எவ்வாறு ஏவப்படுகிறது ?
5 வெளிநாட்டு செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தப் பயன்படும் ஏவூர்தியான PSLV C-23 ஏற்கனவே ஷ்ரிஹரிகோட்டாவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் கட்டமைக்கப்பட்டு, செயற்கைக் கோளும் பொருத்தப்பட்டு தயாராக இருக்கிறது. இந்த ஏவுதளத்தைப் பொறுத்தளவில் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய 5 மாடி கட்டிடம் உயரம் கொண்ட இந்த ஏவுதளம், நகரும் வகையிலும், பேரிடர் காலங்களில் பாதிக்கப்படா வண்ணமும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ராக்கெட்டை ஏவுவதற்கான கவுண்டவுன் நேரத்தில் ராக்கெட்டிற்கு தேவையான எரிபொருட்களை நிரப்புதல், ராக்கெட் செல்லும் பாதையை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளும், ராக்கெட்டை ஏவுவதற்கான ஆயத்தப்பணிகள் என அனைத்துப் பணிகளும் ஷ்ரிஹரிகோட்டாவில் உள்ள முதன்மை கட்டுப்பாட்டு அறையில்தான் நடைபெறும்.
கவுண்டவுன் நிறைவடைந்ததும், விண்ணில் சீறிப்பாயும் ராக்கெட்டின் முதல் தளம் 110.6 வது நொடியிலும், இரண்டாவது தளம், 262.2 வது வது நொடியிலும், மூன்றாவது தளம், 521.2 வது நொடியிலும், பிரிந்துவிடும், இறுதியாக 4 வது தளத்தில் இருந்து ராக்கெட் ஏவப்பட்ட 1073.4 வது நொடியில் பிரான்ஸின் SPOT-7 செயற்கைக் கோள் தனியாக பிரிந்து பூமியை சுற்ற ஆரம்பித்துவிடும், அதேபோல், ஜெர்மனியின் AISAT செயற்கைக்கோள் 1113.7 நொடியிலும், கனடாவின் NLS7.1 செயற்கைக்கோள் 1143.7 நொடியிலும், NLS7.1 1173.7 நொடியிலும் , சிங்கப்பூரின் VELOX-1 செயற்கைக்கோள் 1198.7 வது நொடியிலும் பிரிந்து அதனதன் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படும். இதற்கான கட்டளைகள் அனைத்தும், ஷ்ரிஹரிகோட்டாவில் உள்ள முதன்மை கட்டுப்பாட்டு அறையில் இருந்தே பிறப்பிக்கப்படும், இதனையடுத்து அந்தந்த நாடுகளில் உள்ள செயற்கைக் கோள் கட்டுப்பாட்டு மையத்தின் கட்டுப்பாட்டிற்கு வந்துவிடும்.
இதனால் என்ன பயன் ?
1. ஒரு வெளிநாட்டு செயற்கைக்கோளை ஏவுவதின் மூலம் ரூ.5 கோடி முதல் ரூ.100 கோடி வரை இஸ்ரோவிற்கு வருமானம் கிடைக்கும், இந்த வருமானத்தின் மூலம், இஸ்ரோ தனது மற்ற திட்டங்களுக்கு மத்திய அரசை நம்பியிருக்கத் தேவையில்லை.
2. மற்ற நாடுகளின் செயற்கைக்கோளை நாம் விண்ணில் நிலை நிறுத்தித்தருவதின் மூலம், உலக நாடுகளோடு நல்லுறவு மேம்பட அடித்தளமாக இருக்கும்.
3. ஏற்கெனவே 35 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்தியுள்ள இஸ்ரோ, மேலும் 5 செயற்கைக்கோள்களை PSLV C-23 மூலம் கொண்டு செல்வதின் மூலம் அதன் எண்ணிக்கை 40 ஆக உயர்கிறது. இதனால் பல்வேறு நாடுகள் இஸ்ரோவுடன் வர்த்தக ரீதியான உறவு வைத்துக்கொள்ள விரும்பும்.
இதுபோன்ற திட்டங்கள் நமக்கு உத்வேகத்தை அளிப்பதோடு, அறிவியல் மீதான ஆர்வத்தை இன்றைய மாணவர்களுக்கு ஏற்படுத்த அடித்தளமாக இருக்கும்.

PSLV C-23 ROCKET TO TAKE OF TODAY


டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2ஏ தேர்வை 4¼ லட்சம் பேர் எழுதினார்கள்

சென்னை, ஜூன்.30:- 2,846 காலி பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2ஏ தேர்வை தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 23 ஆயிரத்து 890 பேர் எழுதினார்கள். 2 லட்சத்து 8 ஆயிரத்து 782 பேர் தேர்வு எழுத வரவில்லை.

குரூப்-2ஏ தேர்வுதமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில், நேர்முகத் தேர்வு அல்லாமல் நேரடியாக நியமனம் செய்யப்படும், தமிழ்நாடு சட்டப்பேரவை எழுத்தர் பணி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உதவியாளர், சமூக நலத்துறை உதவியாளர், காவல்துறை உதவியாளர், வருவாய்த்துறை உதவியாளர் உள்பட பல்வேறு துறைகளில் உள்ள பணியிடங்களுக்கு குரூப்-2ஏ தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடத்தப்பட்டது. மொத்தம் 2846 உதவியாளர் காலி பணியிடங்களுக்கு நடைபெற்ற இந்த தேர்வை எழுத தமிழகம் முழுவதும் 6 லட்சத்து 32 ஆயிரத்து 672 பேர் விண்ணப்பித்திருந்தனர். சென்னையில் மட்டும் 71 ஆயிரத்து 498 பேர் தேர்வு எழுத இருந்தனர். இதற்காக, 114 மையங்களில் 2217 தேர்வு கூடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில், சென்னையில் மட்டும் 231 தேர்வு கூடங்கள் அடங்கும். மின்சாதன பொருட்களுக்கு தடைகாலை 10 மணிக்கு தொடங்கிய குரூப்-2ஏ தேர்வு மதியம் 1 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்வை எழுதுவதற்கான கல்வி தகுதி இளங்கலை பட்டப்படிப்பு என்று வைக்கப்பட்டிருந்தாலும், ஏராளமான முதுநிலை பட்டதாரிகளும், என்ஜினீயரிங் மாணவ-மாணவிகளும் ஆர்வத்துடன் வந்து தேர்வை எழுதினார்கள். இளம்பெண்கள் பலர் கைக்குழந்தையுடன் தேர்வு எழுத வந்திருந்தனர். அவர்கள் தேர்வு எழுத சென்ற சமயத்தில், குழந்தைகளை கணவன்மார்களும், உறவினர்களும் பார்த்துக்கொண்டனர். தேர்வு எழுத வந்தவர்கள், சோதனை செய்யப்பட்ட பிறகே தேர்வு அறைக்குள் அனுப்பப்பட்டனர். கால்குலேட்டர், செல்போன் போன்ற மின்சாதன பொருட்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. சோதனைமேலும், முறைகேடு நடைபெறாமல் தடுக்க, மாவட்ட துணை கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட பறக்கும் படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த குழுவில் தேர்வு நடைபெற்ற சமயத்தில் பல்வேறு மையங்களுக்கு அதிரடியாக சென்று சோதனை மேற்கொண்டனர். சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் உள்ள தேர்வு கூடத்தில், டி.என்.பி.எஸ்.சி. தலைவர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பொது அறிவு கேள்வி கடினம்இதேபோல், பாரிமுனையில் உள்ள புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி, புனித சேவியர் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் உள்ள தேர்வு கூடத்தில் சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி, டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா ஆகியோர் கண்காணித்தனர். சரியாக மதியம் ஒரு மணிக்கு தேர்வு முடிந்தது. தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்தவர்களில் சிலர் கூறும்போது, ‘‘தமிழ் பாடம் எளிதாக இருந்தது. ஆனால், பொது அறிவு தொடர்பான கேள்விகள் கடினமாக இருந்தது’’ என்று கூறினர். 67 சதவீதம் பேர் மட்டுமே எழுதினர்குரூப்-2ஏ தேர்வுக்கு மொத்தம் 6 லட்சத்து 32 ஆயிரத்து 672 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், தேர்வு எழுத 67 சதவீதம் பேர் மட்டுமே வந்திருந்தனர். அதாவது, 4 லட்சத்து 23 ஆயிரத்து 890 பேர் மட்டுமே தேர்வை எழுதினார்கள். 33 சதவீதம் பேர் தேர்வை எழுதவில்லை. அதாவது, 2 லட்சத்து 8 ஆயிரத்து 782 பேர் தேர்வு எழுதவரவில்லை. மிகக்குறைவாக சென்னையில் 58 சதவீதம் பேர் மட்டுமே தேர்வை எழுதியுள்ளனர். அதாவது, தேர்வு எழுத விண்ணப்பித்த 71,498 பேரில் வெறும் 41,468 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்துள்ளனர். 30 ஆயிரத்து 30 பேர் சென்னையில் தேர்வு எழுதவில்லை.  

JULY - 2014 - DIARY

01-மருத்துவர்கள்தினம்/உலக சிரிப்பு தினம்
05-குறைதீர் சிறப்பு முகாம்


11-உலகமக்கள் தொகை தினம்
15-கல்விவளர்ச்சி நாள்/காமராஜர் பிறந்ததினம்
24-வரையறுக்கப்பட்டவிடுப்பு
26-கார்கில்நினைவு தினம்
29-இரம்ஜான்

தமிழ் கட்டாய பாடம்: முதல்வர் ஆய்வு.

தமிழகத்தில், அனைத்து மாநில வாரியப் பள்ளிகளிலும், முதல் வகுப்பில் இருந்து, 10ம் வகுப்பு வரை, பகுதி ஒன்றில், தமிழை கட்டாய பாடமாக்கும் சட்டத்தை கடைபிடிப்பது குறித்த, ஆய்வுக்

கூட்டம், தலைமைச் செயலகத்தில் நடந்தது.
முதல்வர் ஜெயலலிதா தலைமை தாங்கினார். கூட்டத்தில், 2006ம் ஆண்டைய, தமிழ்நாடு தமிழ் கற்பதற்கான சட்டத்தின்படி, முதல் வகுப்பில் இருந்து, ௧௦ம் வகுப்பு வரை, பகுதி ஒன்றில், தமிழை கட்டாய பாடமாக, தமிழகத்தில் உள்ள, அனைத்து மாநில வாரியப் பள்ளிகளும் கடைபிடிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.சட்டத்தை கடைபிடிப்பது குறித்து, சம்பந்தபட்ட துறை அதிகாரிகளுக்கு, முதல்வர் பல்வேறு அறிவுரைகள் வழங்கினார். 

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு |29.06.2014 - இன்று நடைபெறவுள்ள பதவி உயர்வு கலந்தாய்வில் பாடவாரியாக தமிழ் -171,ஆங்கிலம் -42,கணிதம்- 81,அறிவியல் -155,சமூக அறிவியல் -81 என்ற எண்ணிக்கையில் இடைநிலை ஆசிரியர் / சிறப்பாசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு |29.06.2014 -  இன்று நடைபெறவுள்ள பதவி உயர்வு கலந்தாய்வில் பாடவாரியாக தமிழ் -171,ஆங்கிலம் -42,கணிதம்- 81,அறிவியல் -155,சமூக அறிவியல் -81

என்ற எண்ணிக்கையில் இடைநிலை ஆசிரியர் / சிறப்பாசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேற்காண் எண்ணிக்கைக்கு மிகாமல் இணையதளம் வழியாகப் பதவி உயர்வு அளிக்கப்பட உள்ள நிலையில் முன்னுரிமைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

PGTRB வழக்குகள் முடிந்தால் இறுதி பட்டியலை ஜூலை முதல் வாரத்தில் எதிர்பார்க்கலாம்.

ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கேதிராக தொடுக்கப்பட்ட ஏராளமான வழக்குகள் (SL.NO 25 TO SL.NO 194)வரும் திங்கட்கிழமை 30.06.2014 நீதியரசர் எஸ். நாகமுத்து (COURT NO. 9) அமர்வில் இடம்பெற்றுள்ளன.ஏற்கனவே நீதியரசர் எஸ்.வைத்தியநாதன் அமர்வில்

இடம்பெற்றுள்ளன.ஏற்கனவே நீதியரசர் எஸ்.வைத்தியநாதன் அமர்வில் இடம்பெற்றிருந்த  PGTRB 2013 கீ ஆன்சர் வழக்கு எண்களும் இடம்பெற்றுள்ளன. 
GROUPING MATTERS SPECIALLY ORDERED CASES WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD CASES ON VARIOUS GROUNDS TO BE HEARD ON MONDAY THE 30TH DAY OF JUNE 2014  AT 2.15.P.M. 
SOME CHALLENGING KEY ANSWER WRIT PETITIONS INCLUDING THIS LIST  PGTRB 2013
26.WP.28640/2013
82.WP.28647/2013
84.WP.28893/201
85.WP.28902/2013
86.WP.29346/2013 TO WP.29349/2013
87.WP.29539/2013
88.WP.29555/2013
89.WP.29564/2013
91.WP.29605/2013
94.WP.29987/2013
95.WP.30006/2013
103.WP.30927/2013
116.WP.31294/2013
119.WP.31352/2013
128.WP.31590/2013
129.WP.31674/2013
132.WP.31755/2013
137.WP.31769/2013
141.WP.31868/2013 TO WP.31872/2013
178.WP.32719/2013
181.WP.33195/2013
186.WP.34564/2013
187.WP.28587/2013
188.WP.29464/2013
191.WP.31670/2013
192.WP.31780/2013
193.WP.31943/2013
189.WP.32115/2013
190.WP.30616/2013
TO  WP.30618/2013
திங்கள் அன்று PGTRB வழக்குகள் முடிந்தால் இறுதி பட்டியலை ஜூலை முதல் வாரத்தில் எதிர்பார்க்கலாம்.
Source: http://www.causelists.nic.in/chennai_new/index1.html

Saturday, 28 June 2014

பி.எஸ்.எல்.வி. சி-23 ராக்கெட் கவுண்ட்டவுன் தொடக்கம்

5 வெளிநாட்டு செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-23 ராக்கெட் நாளை (திங்கட்கிழமை) விண்ணில் ஏவப்படுவதையொட்டி ராக்கெட் கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது. 

பி.எஸ்.எல்.வி. சி-23 ராக்கெட் இந்திய விண்வெளி ஆய்வு கழகமான இஸ்ரோ, இந்திய செயற்கைகோள்களை மட்டுமல்லாமல், வெளிநாட்டு செயற்கைகோள்களையும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்திவருகிறது. அந்த வகையில், 25 முறை பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் வெற்றிகரமான விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, நாளை (திங்கட்கிழமை) பி.எஸ்.எல்.வி. சி-23 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதில், 5 வெளிநாட்டு செயற்கைகோள்கள் அனுப்பப்பட உள்ளன. 5 வெளிநாட்டு செயற்கைகோள்பூமியை ஆய்வு செய்ய பிரான்ஸ் நாடு அனுப்பும் ஸ்பாட்-7 என்ற செயற்கைகோள் 714 கிலோ எடை கொண்டது. ஜெர்மனி நாட்டின் 14 கிலோ எடை கொண்ட ஐசாட், கனடா நாட்டின் 15 கிலோ எடையுள்ள என்.எல்.எஸ்., பாயிண்ட்-1, சிங்கப்பூரின் 7 கிலோ எடை கொண்ட வெலாக்ஸ்-1 ஆகிய 4 வர்த்தக செயற்கைகோள்களும் பி.எஸ்.எல்.வி. சி-23 ராக்கெட்டில் அனுப்பப்பட உள்ளன. 5 வெளிநாட்டு செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதற்கான ஒப்பந்தங்களை இஸ்ரோவின் வர்த்தக பிரிவான ‘ஆன்ட்ரிக்ஸ்’ மேற்கொண்டுள்ளது. தற்போது, 5 செயற்கைகோள்களையும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுடன் ஒருங்கிணைக்கும் பணிகள் முடிவடைந்து, இறுதிக்கட்ட சோதனை நடந்து வருகிறது. கவுண்ட்டவுன் தொடக்கம்பி.எஸ்.எல்.வி. சி-23 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து இஸ்ரோவின் திட்ட ஆயத்த சீராய்வுக் குழுவும், ஏவுதல் ஒப்புதல் வாரியமும் இணைந்து கடந்த 27-ந் தேதி ஆலோசனை நடத்தியது. அதனைத் தொடர்ந்து, நேற்று காலை 8.49 மணிக்கு ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 49 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கியது. நரேந்திர மோடி பங்கேற்பு நாளை (திங்கட்கிழமை) காலை 9.49 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-23 ராக்கெட் விண்ணில் ஏவ திட்டமிட்டு இருந்ததை 3 நிமிடங்கள் தாமதமாக 9.52 மணிக்கு ஏவ முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள உள்ளார். இதற்காக டெல்லியிலிருந்து தனிவிமானத்தில் புறப்பட்டு இன்று மாலை 3.30 மணி அளவில் பிரதமர் சென்னை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.தற்போது மத்தியில் புதிய அரசாக பா.ஜ.க. பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட இருப்பதால், இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக டெல்லி, பெங்களூரில் இருந்து குண்டுதுளைக்காத 2 ஹெலிகாப்டர்களும் சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளன. இதன் மூலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்திற்கு பிரதமர் சென்று பி.எஸ்.எல்.வி. சி-23 ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை பார்வையிடுகிறார். பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி, சென்னை மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.  

FORMS

இயற்பியல் பாடத்தில் அரசுபொதுத்தேர்வில் அக்டோபர் 2013 வரை கேட்கப்பட்டுள்ள வினாக்களின் பகுப்பாய்வு.

இயற்பியல் பாடத்தில் அரசுபொதுத்தேர்வில் அக்டோபர் 2013 வரை கேட்கப்பட்டுள்ள வினாக்களின் பகுப்பாய்வு
Click Here....

மாறுதல் கலந்தாய்வில் தமிழுக்கு சோதனை: கொதிக்கும் ஆசிரியர்கள்

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் இரண்டு ஆண்டுகளாக, தமிழாசிரியர் பணியிடங்களை மறைப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

அரசுப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான உள்மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நேற்று நடந்தது. 'இதில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், சேலம் உட்பட எட்டு மாவட்டங்களில், பட்டதாரி தமிழாசிரியர்களுக்கான காலியிடங்களை 'ஆன்லைனில்' காண்பிக்கவில்லை' என சர்ச்சை எழுந்தது.

தமிழாசிரியர்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 'சிவகங்கையில் எட்டு காலியிடங்கள் இருக்கும் நிலையில் ஒரு இடத்தை கூட காண்பிக்கவில்லை' என புகார் தெரிவித்து தமிழாசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழாசிரியர் கழக மாநில துணை தலைவர் இளங்கோ கூறியதாவது: மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி, சேலம் மாவட்டங்களில், தமிழாசிரியர் காலியிடங்களை மறைத்துவிட்டனர். இரு ஆண்டுகளாக சிவகங்கையில் பட்டதாரி தமிழாசிரியர் காலியிடங்கள் காட்டப்படவில்லை. சிபாரிசுகளுக்காக சென்னை இயக்குனரகத்திலேயே மறைக்கப்படுகின்றன.

எனவே 'ஆன்லைன்' கலந்தாய்வுக்கு தடை விதிக்கவேண்டும். இவ்வாறு கூறினார். அதிகாரிகள் கூறுகையில், 'ஆன் லைன் கலந்தாய்வில் காலியிடங்கள் சென்னையில் தான் தீர்மானிக்கப்படுகின்றன. மாவட்ட அதிகாரிகள் பொறுப்பல்ல' என்றனர். 

ஓய்வூதியருக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்:விண்ணப்பங்களை ஜூலை 31 வரை வழங்கலாம்

ஓய்வூதியருக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட விண்ணப்பங்களை வழங்க ஜூலை 31வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட கருவூல அலுவலர் ஆர்.ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது:2014, ஜூலை 1 முதல் ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் , நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களது விவரங்களை உரிய படிவத்தில் ஜூன் 30-ம் தேதிக்குள்அளிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.பெரும்பாலான ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் தாங்கள் ஓய்வூதியம் பெறும் அலுவலகத்தில், பொதுத்துறை வங்கியில் இன்னமும் அளிக்காத காரணத்தால், ஜூலை31-ம் தேதி வரை விண்ணப்பங்களை வழங்க காலக்கெடு நிர்ணயித்து அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதுவரை விண்ணப்பங்களை வழங்காதவர்கள் தாங்கள் ஓய்வூதியம் பெறும் அலுவலகத்தில், பொதுத்துறை வங்கிக்கிளையில் அளித்து, அதன் ஒரு நகலினை ஓய்வூதியம் வழங்கும் அலுவலரின் கையொப்பத்துடன் மீண்டும் பெற்றுக் கொள்ள வேண்டும்.படிவ நகலினை, அடையாள அட்டை வழங்கப்படும்வரை இத்திட்டத்தின் கீழ் பணச்செலவின்றி ஜூலை 1 முதல் மேற்கொள்ளும் மருத்துவச் சிகிச்சைக்குபயன்படுத்திக் கொள்ளலாம்.இது ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம்,கருவூலங்கள் மற்றும் பொதுத்துறை வங்கி மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் பொருந்தும் என்று அச்செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். 




Friday, 27 June 2014

நாளை குரூப் 2 தேர்வு: ஏற்பாடுகள் தயார்; 6.32 லட்சம் பேர் எழுதுகின்றனர்

குரூப் 2 போட்டி தேர்வு, நாளை, 1,620 மையங்களில் நடக்கிறது. தமிழக அரசின் பல துறைகளில், உதவியாளர் பணியில், 2,846 காலி

இடங்களை நிரப்ப, குரூப் 2 போட்டி தேர்வு, நாளை காலை, 10:00 மணி முதல் பகல், 1:00 மணி வரை நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும், தயார் நிலையில் இருப்பதாக, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) வட்டாரம், நேற்று மாலை தெரிவித்தது.

இது குறித்து, அந்த வட்டாரம், மேலும் தெரிவித்ததாவது: தேர்வை, 6,32,672 பேர் எழுதுகின்றனர். மாநிலம் முழுவதும், 1,620 மையங்களில், 2,217 தேர்வு அறைகளில், தேர்வு நடக்கிறது. சென்னையில், 202 மையங்களில், 231 அறைகளில், தேர்வு நடக்கிறது. 71,498 பேர், சென்னையில் தேர்வெழுதுகின்றனர். தேர்வு, 300 மதிப்பெண்ணுக்கு, 'அப்ஜக்டிவ்' முறையில் நடக்கும். 200 கேள்விகளுக்கு, தலா, 1.5 மதிப்பெண் ஒதுக்கப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வு அல்லாத பணி என்பதால், இரண்டாவது தேர்வு எதுவும் கிடையாது. தேர்வை கண்காணிக்க, 228 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. துணை கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.,) உள்ளிட்ட, பல அதிகாரிகள், இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். பதற்றம் நிறைந்த தேர்வு மையங்களில், வீடியோ பதிவு நடக்கும். தேர்வில், விண்ணப்பத்தாரர் பெறும் மதிப்பெண் அடிப்படையில், 'ரேங்க்' பட்டியல் வெளியிடப்பட்டு, தகுதி வாய்ந்தவர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கப்படும். இவ்வாறு, தேர்வாணைய வட்டாரம் தெரிவித்தது.

மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு: இரண்டு பதில்களில் எதை அளித்தாலும் மதிப்பெண்: உயர் நீதிமன்றம் உத்தரவு - தினமணி

மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு கேள்விக்கான இரண்டு பதில்களில் எதை அளித்தாலும் அதற்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பாக பி.ஈஸ்வரி என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த மே 21-ஆம் தேதி நடந்தது. அந்தத் தேர்வில் நான் பங்கேற்றேன்.

அந்தத் தேர்வில் நான் 81 மதிப்பெண்கள் பெற்றேன். அந்தத் தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்டிருந்த 33-ஆவது கேள்விக்கு கடலினை மட்டும் குறிக்காத சொல்லைக் கண்டெடு என்ற கேள்விக்கு டி என்ற வாய்ப்பில் கொடுக்கப்பட்ட சமுத்திரம் என்பதை பதிலாக அளித்தேன். ஆனால், அந்தக் கேள்விக்கு எனக்கு மதிப்பெண் வழங்கவில்லை.

ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்த விடையில் 33-ஆவது கேள்விக்கு, பி என்ற வாய்ப்பில் கொடுக்கப்பட்ட ஆழி என்பதுதான் சரியான விடை எனத் தெரிவித்தது. அதற்கு என்னுடைய எதிர்ப்பை தெரிவித்தேன். எனவே, எனக்கு உரிய மதிப்பெண் வழங்கி பணியில் நியமிக்க உத்தரவிட வேண்டும் என கோரினார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.நாகமுத்து முன்பு நடந்தது. விசாரணையின்போது, தமிழில் நிபுணத்துவம் பெற்ற பல்வேறு பள்ளிகளில் பணிபுரியும் முதுநிலை தமிழ் ஆசிரியர்கள் 3 பேரிடம் இருந்து கருத்து கேட்கப்பட்டது. அவர்கள் ஆழிதான் சரியான பதில் எனத் தெரிவித்தனர். மேலும், சமுத்திரம் என்பது தமிழ்ச் சொல் இல்லை என்றும், வடமொழி சொல் எனவும் தெரிவித்தனர். அதனால், சமுத்திரம் என்பது சரியான பதில் இல்லை எனத் தெரிவித்தனர்.

விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கடலினை மட்டும் குறிக்காத சொல்லைக் கண்டெடு... என்ற கேள்விக்கு, 4 வாய்ப்புகளாக (ஏ) முந்நீர், (பி) ஆழி, (சி) பரவை, (டி) சமுத்திரம் என கொடுக்கப்பட்டன. இதில், (பி) ஆழிதான் சரியான பதில். அந்தச் சொல்லுக்கு, மோதிரம், சக்கரம், கடல் என்று 3 வெவ்வேறு பொருள்கள் உண்டு என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில் ..சமுத்திரம்... என்ற சொல்லுக்கு கடல், ஓர் எண், மிகுதி என்ற வெவ்வேறு பொருள்கள் உண்டு எனவும், சென்னைப் பல்கலைக்ழகத்தால் வெளியிடப்பட்ட தமிழ் அகராதியில் கடல், பேரெண், மிகுதி என பொருள் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, வேறு 2 தமிழ் அகராதிகளிலும் இது போன்ற பதில் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

நீதிமன்றம் நியமித்த தமிழ் நிபுணர்கள், "சமுத்திரம்' என்பது வடமொழிச் சொல்.

அதனால், அது சரியான பதில் இல்லை எனத் தெரிவித்தனர். "சமுத்திரம்' என்பது தமிழ்ச் சொல் இல்லையென்றால், தமிழ் அகராதியில் அந்த சொல் இடம் பெற்றிருக்காது. ஆனால், தமிழ் அகராதியில் அதற்கு 3 பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதனால், ஆசிரியர் தகுதித் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு கொடுக்கப்பட்ட பதில் முழுவதும் (நான்கும்) சரியானது இல்லை. அதேபோல் மனுதாரருக்கு எந்த ஒரு நன்மை வழங்கினாலும், அது தொடர்பான மற்றவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வில் கேட்கப்பட்ட 33-ஆவது கேள்விக்கு பி மற்றும் டி பதில் அளித்திருந்த அனைத்து தேர்வர்களுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும்.

மேலும், அனைத்து விடைத்தாள்களையும் ஆசிரியர் தேர்வு வாரியம் மறுமதிப்பீடு செய்து, திருத்தப்பட்ட தேர்ச்சிப் பட்டியலை வெளியிட வேண்டும். இந்த பணியை ஒரு வாரத்துக்குள் ஆசிரியர் தேர்வு வாரியம் முடிக்க வேண்டும் என உத்தரவில்

தெரிவிக்கப்பட்டுள்ளது.

TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்

TRB PG TAMILபி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக வழக்கு தொடுத்த ஏராளமானோருக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 

கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில்ஐகோர்ட் உத்தரவை கல்வி செயலாளரும், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரும் அமல்படுத்தவில்லை. எனவே, இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள் வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்,பள்ளிக் கல்வி செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

டி.என்.பி.எஸ்.சி., தலைவராக பாலசுப்ரமணியன் நியமனம்

டி.என்.பி.எஸ்.சி.,( அரசுப்பணியாளர் தேர்வாணையம்) உறுப்பினர், பாலசுப்ரமணியனிடம் தலைவர் பதவி, கூடுதல்பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேர்வாணைய தலைவர் பதவியில் இருந்த,

நவநீதகிருஷ்ணன், .தி.மு.., சார்பில், ராஜ்யசபாஎம்.பி., தேர்தலில் போட்டியிட்டதால், டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பதவியை, 10 நாட்களுக்கு முன் ராஜினாமா செய்தார். இதனையடுத்து தேர்வாணைய உறுப்பினர்களில் ஒருவரான, பாலசுப்ரமணியன், தலைவர் பதவியை கூடுதல்பொறுப்பாக வகிப்பார் எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தலைவர்நியமிக்கப்படும் வரை, தலைவர் பதவியை, பாலசுப்ரமணியம் கவனிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களின் திறனையும் ஆய்வு செய்து பள்ளிகளுக்கு 'கிரேடு' வழங்க திட்டம்

படைப்பாற்றல் மற்றும் செயல்வழிக்
கல்வி வகுப்புகளில், அரசு பள்ளி குழந்தைகளை மட்டுமின்றி, ஆசிரியர்களின் திறனையும் ஆய்வு செய்து, பள்ளிகளுக்கு 'கிரேடு'
வழங்கும் முறையை செயல்படுத்த, திருப்பூர் மாவட்ட கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

அரசு துவக்க
மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு கல்விச்
செயல்பாடுகள், படைப்பாற்றல் கல்வி,
கல்வி இணைச் செயல்பாடுகள், எளிய
செயல்வழிக் கற்றல், எளிய படைப்பாற்றல்
கல்வி உள்ளிட்ட கல்வி கற்பிக்கும் முறைகளை,
அனைவருக்கும் கல்வி இயக்கத்தினர்
ஆய்வு செய்கின்றனர்.
இதில், தொடர் மற்றும் முழுமையான
மதிப்பீடு என்னும் அடிப்படையில், ஏ,பி,சி,டி, என்ற
கிரேடுகளை கல்வித்துறை மூலம்,
அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.நடப்பு
கல்வியாண்டில், பள்ளிகளில்
அனைத்து வகுப்புகளுக்கும் சேர்த்து,
இக்கல்வி முறைகளை ஆய்வு செய்வதை காட்டிலும்,
வகுப்பு வாரியாகவும், பாட ஆசிரியர்கள்
மற்றும் மாணவர்கள் உட்பட அனைவரிடத்தும்,
படைப்பாற்றல் மற்றும் செயல்வழிக்
கல்வி முறைகள் குறித்து ஆய்வு நடத்தி, கிரேடு வழங்க
திருப்பூர் மாவட்ட கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மாணவர்களின்
கற்பனைத்திறன்களை வெளிப்படுத்தவும்,
பாடங்கள் எளிதில் மனதில் பதிய வேண்டிய
செயல்வழி மற்றும் படைப்பாற்றல்
கல்வி வகுப்புகள் முறையை பின்பற்றப்படுகிறது.
இம்முறை முழுமையாக பயனுள்ளதாக இருக்க,
ஆசிரியர்களும் இக்கல்வி முறைகள்
குறித்து அறிந்திருக்கவும், பின்பற்றவும் வேண்டும்.
ஆசிரியர்களுக்கு பாடவாரியாக
பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன்
செயல்பாடுகள் குறித்து பள்ளிகளில்
ஆய்வு மேற்கொள்ளப்படும்.இவ்வாறு
அதிகாரிகள் கூறினர்.

பங்கேற்ற அனைவருக்கும் அந்தந்த மாவட்டத்திலேயே பணியிடங்கள்.

பட்டதாரி ஆசிரியர்களுக்குநடந்த பணி நிரவல் (சர்பிளஸ்) கலந்தாய்வில் பங்கேற்ற அனைவருக்கும், அந்தந்த மாவட்டத்திலேயே பணியிடங்கள் கிடைத்தன.

இதனால், ஜூனியர் ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களுக்கு துாக்கியடிப்பது தவிர்க்கப்பட்டது.பள்ளிகளில் மாணவர், ஆசிரியர் விகிதம் ஆய்வு செய்யப்பட்டு கூடுதலாக உள்ள பணியிடங்கள் ஆண்டுதோறும் கணக்கிடப்படுகின்றன.

இதன்படி கூடுதலாக (சர்பிளஸ்) உள்ள ஆசிரியர்கள், பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு பணிநிரவல் அடிப்படையில் மாற்றப்படுவர்.வெளி மாவட்டங்களுக்கு துாக்கியடிக்கப்படுவதால், ஆசிரியர்கள் அச்சத்தில் இருந்தனர். நேற்று, இதற்கான மாறுதல் கலந்தாய்வு நடந்தது. ஆனால் கலந்தாய்வு துவங்கியதும், 2014-15ம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட கூடுதல் பணியிடங்களும் சேர்த்து காண்பிக்கப்பட்டன; இதனால் 600 சர்பிளஸ் ஆசிரியர்கள் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்படாமல், உள் மாவட்டங்களிலேயே பணியிடம் பெற்று மகிழ்ச்சி அடைந்தனர்.இந்நிலையில், இன்று (ஜூன் 27) பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடக்கிறது. இதிலும், நேற்றுபோல கூடுதல் பணியிடங்களை காண்பித்தால், அனைவருக்கும் உள் மாவட்டங்களிலேயே பணி கிடைக்கும்.

இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் நாகசுப்பிரமணியன், செயலாளர் முருகன் கூறுகையில், "சர்பிளஸ் ஆசிரியர்களை வேறு மாவட்டங்களுக்கு மாற்ற இருந்தது தவிர்க்கப்பட்டது மகிழ்ச்சி. அதேபோல் இன்று (ஜூன் 27) நடக்கும் பொது மாறுதலிலும் கூடுதல் பணியிடங்கள் காண்பிக்க வேண்டும். அப்படி காண்பிக்கும் பட்சத்தில், மதுரை மாவட்டத்தில் மட்டும் 200 பணியிடங்கள் கூடுதலாக கிடைக்கும்" என்றனர். 

தேர்வுத்துறைக்கு உத்தரவு.

+2 கணித தேர்வு விடைத்தாள் காணாமல் போனதால் பாதிப்பு என மாணவர் வழக்கு.புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தை சேர்ந்த

மாணவர் பிரகாஷ் உயர்நீதிமன்ற கிளையில் மனு.
வழக்கில் தேர்வுத்துறை இயக்குநர் 2 வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணை.கணித விடைத்தாளில் 40மதிப்பெண்ணுக்குரிய பக்கங்கங்களை காணவில்லை: மனுதாரர்.தேர்வுத்துறை அலட்சியத்தால் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்பதில் பாதிப்பு: மனுதாரர்.40 மதிப்பெண்கள் வழங்கி கலந்தாய்வில் பங்கேற்க நடவடிக்கை தேவை. 

SPECIAL TET: மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாளை மறுபரிசீலனை செய்ய ஆணை.

மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாளை மறுபரிசீலனை செய்ய ஆணை.மாற்றுத்திறனாளி ஈஸ்வரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

1 வாரத்துக்குள் விடைத்தாளை மறுமதிப்பீடு செய்து புதிய பட்டியல் வெளியிட வேண்டும்:ஆசிரியர் தகுதித் தேர்வில் 33-வது வினாவுக்கு 2 சரியான பதில்களால் பாதிப்பு: மனுதாரர்மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு மே மாதம் நடைபெற்றது.

உயர்நீதிமன்ற உத்தரவின்படி நியமன நாளின் அடிப்படையில் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்ற தமிழ் பண்டிட்களுக்கு எதிராக தொடுத்த வழக்கு இன்று விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு - TNPPGTA

இதுகுறித்து தமிழ்நாடு பதவி உயர்வு முதுகலை ஆசிரியர் சங்கத்தின் நிறூவன தலைவர் திரு.வேம்பன், மாநில தலைவர் திரு.பொன்.செல்வராஜ்  அளித்த பேட்டியில்; தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் அண்மையில் நடந்த உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி தமிழ் பண்டிட்களுக்கு அவர்கள் நியமனம் செய்யப்பட்ட நாளிலிருந்து பதவி உயர்வு வழங்கப்பட்டு, இதை எதிர்த்து தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் தொடுக்கப்பட்ட மேல் முறையீட்டு மனுவினால், நியமன ஆணை  வழங்காமல் இருந்தது.

இந்த வழக்கு இன்று இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இறுதி தீர்ப்பு அடுத்த வாரத்தில் வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Thursday, 26 June 2014

FOR NEWLY PROMOTED PG TEACHERS - AN IMPORTANT NOTE REGARDING NEXT INCREMENT BENIFIT - TNPPGTA

தற்போது நடைபெறும் பதவி உயர்வு கலந்தாய்வில் பதவி உயர்வு ஆணை பெற்றவர்களில் முந்தைய பணியில் 1,4 மற்றும்

10ம் மாதங்களில்  ஊதிய உயர்வு பெற்று வந்தவர்கள்  வரும் ஜூன் 30க்குள் பணியில் சேர்ந்தால் அடுத்த ஆண்டுக்கான காலமுறை ஊதிய உயர்வினை ஏப்ரல் மாதம் பெறலாம். ஜூன் 30க்குப்பின் பணி ஏற்பவர்கள் ஜூலை மாதம் காலமுறை ஊதிய உயர்வு பெறுவார்கள்.

ஆசிரியர் கலந்தாய்வு: இன்றும்கூடுதல் பணியிடங்கள் காட்டப்படுமா

பட்டதாரி ஆசிரியர்களுக்கு நேற்று நடந்த பணிநிரவல் (சர்பிளஸ்) கலந்தாய்வில் பங்கேற்ற அனைவருக்கும், அந்தந்த மாவட்டத்திலேயே பணியிடங்கள் கிடைத்தன. இதனால், 'ஜூனியர்'

ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களுக்கு துாக்கியடிப்பது தவிர்க்கப்பட்டது.பள்ளிகளில் மாணவர், ஆசிரியர் விகிதம் ஆய்வு செய்யப்பட்டு கூடுதலாக உள்ள பணியிடங்கள் ஆண்டுதோறும் கணக்கிடப்படுகின்றன. இதன்படி கூடுதலாக (சர்பிளஸ்) உள்ள ஆசிரியர்கள், பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு 'பணிநிரவல்' அடிப்படையில் மாற்றப்படுவர். வெளி மாவட்டங்களுக்கு துாக்கியடிக்கப்படுவதால், ஆசிரியர்கள் அச்சத்தில் இருந்தனர்.நேற்று, இதற்கான மாறுதல் கலந்தாய்வு நடந்தது. ஆனால் கலந்தாய்வு துவங்கியதும், 2014-15ம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட கூடுதல் பணியிடங்களும் சேர்த்து காண்பிக்கப்பட்டன; இதனால் 600 'சர்பிளஸ்' ஆசிரியர்கள் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்படாமல், உள் மாவட்டங்களிலேயே பணியிடம் பெற்று மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், இன்று (ஜூன் 27) பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடக்கிறது. இதிலும், நேற்று போல கூடுதல் பணியிடங்களை காண்பித்தால், அனைவருக்கும் உள்மாவட்டங்களிலேயே பணி கிடைக்கும்.இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் நாகசுப்பிரமணியன், செயலாளர் முருகன் கூறுகையில், 'சர்பிளஸ் ஆசிரியர்களை வேறு மாவட்டங்களுக்கு மாற்ற இருந்தது தவிர்க்கப்பட்டது மகிழ்ச்சி. அதேபோல் இன்று (ஜூன் 27) நடக்கும் பொறுமாறுதலிலும் கூடுதல் பணியிடங்கள் காண்பிக்க வேண்டும். அப்படி காண்பிக்கும் பட்சத்தில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 200 பணியிடங்கள் கூடுதலாக கிடைக்கும்' என்றனர்.

தமிழக அரசில் புள்ளியியல் ஆய்வாளர் பணி: TNPSC அறிவிப்பு

தமிழக அரசின் கால்நடைத் துறையில் காலியாக உள்ள புள்ளியியல் ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: புள்ளியில் ஆய்வாளர்

காலியிடங்கள்: 06

சம்பளம். மாதம் 9,300 - 4,800 + தர ஊதியம் ரூ.4800.

வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: புள்ளியியல், கணிதம் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. (தேர்வுக்கட்டணம் ரூ.100 + விண்ணப்பக்கட்டணம் ரூ.50) இதனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையிலும் செலுத்தலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.07.2014

மேலும் எழுத்து தேர்வு மற்றும் தகுதி மதிப்பெண்கள், வயதுவரம்பு சலுகைகள் போன்றமுழுமையான விவரங்கள் www.tnpsc.gov.in பார்க்கவும். 

ரிசர்வ் வங்கியில் உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணி.

இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள 53 Assistant/office Attendant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்:53

பணி:உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர்

கல்வித் தகுதி:
உதவியாளர்:ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர்:பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (அறிவிப்பு மண்டலத்துக்குள்)

வயது வரம்பு:18 - 26க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:உதவியாளர் பணிக்கு மாதம் ரூ. 22,732.அலுவலகம் உதவியாளர் பணிக்கு மாதம் ரூ. 15,631.

விண்ணப்பக் கட்டணம்:பொது பிரிவினருக்கு ரூ.100. SC,ST பிரிவினர் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:மண்டல இயக்குநர், இந்திய ரிசர்வ் வங்கி, (அந்தந்த ஆட்சேர்ப்பு பகுதி மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்)

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:21.07.2014

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.rbi.org.in/scripts/bs_viewcontent.aspx?Id=2841#A1 என்ற இணையதளத்தைப் பார்க்கவும். 

BE கலந்தாய்வு ஒத்திவைப்பு!

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது.கலந்தாய்வு தேதி

பின்னர் அறிவிக்கப்படும்:

பொறியியல் சேர்க்கைக்கான செயலர் அறிவிப்பு.நாளை தொடங்கவிருந்த பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒத்திவைப்பு ஏன்?

புதிய கல்லூரிகளுக்கு அங்கீகாரம் தர ஏஐசிடிஇ உச்ச நீதிமன்றத்தில் கால அவகாசம் கேட்டது.ஏஐசிடிஇ-க்கு ஜூலை 3 வரை அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.புதிய கல்லூரிக்கான அனுமதி பற்றி முடிவு எடுக்க அவகாசம் தரப்பட்டதால் கலந்தாய்வு ஒத்திவைப்பு. 

ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்த பள்ளிக் கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தஞ்சாவூர்மாவட்டம் மதுக்கூர் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில்பட்டதாரி ஆசிரியராக இருந்த வி.வையணன், கலந்தாய்வு
 
மூலம்தூத்துக்குடி மாவட்டம் கடல்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்குபணியிட மாற்றம் செய்யப்பட்டார். கடந்த2012-ஆம்ஆண்டு ஜனவரி மாதம் முதுநிலைப்பட்டதாரி ஆசிரியராக (உயிரியல்)பதவி உயர்வு பெறுவதற்குவையணன் தகுதியானார்.
இந் நிலையில் 2012-13- ஆம் ஆண்டில் 100 உயர்நிலைப்பள்ளிகளை, மேல்நிலைப் பள்ளியாக தரம்உயர்த்தி அரசு உத்தரவிட்டது. அதில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 4 அரசு மேல்நிலைப்பள்ளிகளில்முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (உயிரியல்) காலியாகஇருந்தன. அந்தக் காலிப்பணியிடங்கள் கலந்தாய்வின்போதுவெளிப்படுத்தப் படவில்லை. அதனால், வையணனுக்கு ராமநாதபுரம்மாவட்டத்துக்கு மாறுதல் வழங்கப்பட்டது. கலந்தாய்வின்போது திருநெல்வேலி மாவட்டத்தில் காலியாக இருந்த 3
பணியிடங்கள்குறித்து அறிவிக்கவில்லை. அதனால்,திருநெல்வேலி சுத்தமல்லிஅரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றம் செய்ய உத்தரவிடக்கோரி வையணன் உயர் நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்தார். அதில், அந்தப் பள்ளியில்வேறு யாரையும் பணியமர்த்துவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்தது. ஆனால், அந்தப் பணியிடம்முன்னதாகவே நிரப்பப்பட்டதாக பள்ளிக் கல்வித் துறைகூறியதையடுத்து,மனுதாரரின் கோரிக்கையை விதிகளுக்குள்பட்டு பரிசீலிக்க வேண்டும் எனஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந் நிலையில், கடந்த ஆண்டு ஜூலைமாதம் 20 மற்றும் 22-ஆம் தேதிகளில்முதுநிலைப் பட்டதாரிஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வின்போது தூத்துக்குடி மாவட்டம் ராமானுஜம் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலிருந்த காலிப் பணியிடம் காண்பிக்கப்படவில்லை. அந்தக் காலியிடத்தை கலந்தாய்வில் காட்டாமலேயே பள்ளிக் கல்வித் துறைநிரப்பியுள்ளது. இந்த உத்தரவை ரத்துசெய்து விட்டு, புதிதாக
பணியிடமாறுதல் கலந்தாய்வை நடத்த உத்தரவிடுமாறு வையணன்மற்றுமொரு வழக்கைத் தாக்கல் செய்தார். இந்தமனு நீதிபதி டி.ஹரிபரந்தாமன்முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், அந்தப்பள்ளியில் ஏற்கெனவே ஒருவர் நியமிக்கப்பட்டு விட்டார். அதனால் அவரை தொந்தரவு செய்யவேண்டாம் எனத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, ஜூன் 24-ஆம் தேதிமுதல் நடைபெற்று வரும் கலந்தாய்வில் மனுதாரரைபங்கேற்க அனுமதிக்க வேண்டும். மேலும், இந்தப் பணியிடமாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்த வேண்டும் எனநீதிபதி உத்தரவிட்டார்.