This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Friday, 1 August 2014

கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பி.எட். முடித்த மாணவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வை எழுத முடியுமா? அமைச்சர் விளக்கம்


சென்னை, ஆக.2-சட்டசபையில் நேற்று கேள்விநேரத்தின்போது, உறுப்பினர் பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு),
கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பி.எட். எம்.எட். முடித்தவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதுவதற்கு அரசு ஆவன செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பதில் அளித்து, கூறியதாவது:-அத்தகைய பிரிவு மாணவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவது குறித்து முதல்-அமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும். இனிவரும் காலங்களில் பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பது குறித்தும் முதல்-அமைச்சரின் பார்வைக்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அங்கீகாரம் பெறாத பள்ளிகள் மீதான நடவடிக்கை விவர அட்டவணை அரசு தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு


சென்னை, ஆக.2-அங்கீகாரம் பெறாத மழலையர் பள்ளிக்கூடங்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான அட்டவணையை தாக்கல் செய்யும்படி அட்வகேட் ஜெனரலுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த வக்கீல் கே.பாலசுப்பிரமணியன்.
இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-மழலையர் பள்ளிகள்தமிழ்நாடு தனியார் பள்ளி அங்கீகாரம் சட்டத்தின்படி, கல்வி வாரியத்தின் இணைப்பை பெறுவதற்கு முன்பு தனியார் பள்ளிகள் அரசிடம் அங்கீகாரத்தினை பெற்று இருக்கவேண்டும். ஆனால், தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மழலையர் பள்ளிகள் எந்த ஒரு அங்கீகாரமும் பெறாமல் செயல்பட்டு வருகின்றன. நடவடிக்கை எனவே, சட்டவிரோதமாக செயல்படும் இந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், இந்த பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை, அரசு அங்கீகாரம் பெற்றுள்ள பள்ளிகளுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது;-எதிர்மனுதாரர்களான தனியார் பள்ளிகளின் சார்பில் ஆஜரான வக்கீல்களில், பல கோணங்களில் வாதம் செய்தனர்.அட்டவணை ஒருசிலர், தங்களது கட்சிக்காரர்கள் பள்ளிகளுக்கு முறையான அங்கீகாரம் பெற்று செயல்படுவதாகவும், வேறு சிலர் தங்கள் கட்சிக்காரர்கள் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் அங்கீகாரச்சட்டத்தின்படி, பகல் நேர குழந்தைகள் பாதுகாப்பு மையங்களை நடத்துவதாகவும் வாதிட்டார்கள். இதற்காக, ஒவ்வொரு பள்ளிகளின் அங்கீகாரத்தையும் எங்களால் சரி பார்க்க முடியாது. அதே நேரம், அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி, அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான விவர அட்டவணையை தாக்கல் செய்வதாக கூறினார்.எனவே, இந்த வழக்கு விசாரணை வருகிற 14-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அன்று அந்த அட்டவணையை அட்வகேட் ஜெனரல் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதி கூறியுள்ளனர்.

சோழிங்கநல்லூர்-காரப்பாக்கம் 10 ஏக்கர் நிலத்தில் ரூ.95 கோடியில் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக கட்டிட வளாகம் சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு


சென்னை, ஆக.2-சோழிங்கநல்லூர்-காரப்பாக்கத்தில் 10 ஏக்கர் நிலத்தில் ரூ.95 கோடியில் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக வளாக கட்டிடம் கட்டப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.
சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- உயர்கல்வி பயிலுவதை மேலும் ஊக்குவிக்கும் வகையில், கீழ்க்காணும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். ரூ.95 கோடியில் பல்கலைக்கழக கட்டிட வளாகம்* 665 கல்வியியல் கல்லூரிகளின் இணைப்புடன், ஆராய்ச்சிப்பட்டப்படிப்பினையும் நடத்திக்கொண்டிருக்கும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், தற்காலிகமாக காமராஜர் சாலையில் அமைந்துள்ள லேடி வெலிங்டன் கல்லு£ரி வளாகத்தில் மிகுந்த இட நெருக்கடிக்கிடையே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த இட நெருக்கடியை களையும் பொருட்டு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு காஞ்சீபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூரில் உள்ள காரப்பாக்கம் கிராமத்தில் 10 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இங்கு பல்கலைக்கழகத்திற்கான கல்வியியல் வளாகமும் நிர்வாக வளாகமும் 95 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.*மயிலாடுதுறை மற்றும் சீர்காழி சட்டமன்ற தொகுதி மக்களின் கோரிக்கைக்கிணங்க, மயிலாடுதுறையில் ‘மணல்மேடு’ என்னுமிடத்தில் புதியதாக இரு பாலர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடப்பாண்டு முதல் துவங்கப்படும்.மாணவியர் விடுதிகள்*பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கான வசதிகள் ஏற்படுத்தித்தரப்பட வேண்டும் என்பதைக் கருத்திற்கொண்டு, சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகத்தில் பயிலும் இளநிலை மாணவ, மாணவியர்களுக்கென புதிய மாணவர் மற்றும் மாணவியர் விடுதிகள்; குரோம்பேட்டை, மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி-க்கு என நிர்வாகக் கட்டிடம் மற்றும் அங்கு பயிலும் இளநிலை மாணவியர்களின் வசதிக்கென புதிய விடுதிக்கட்டிடங்கள் ஆகியவை 30 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும். 1,112 உதவிப்பேராசிரியர் பணியிடங்கள்*2013-14-ம் கல்வியாண்டில் பதவி உயர்வு, பணி ஓய்வு ஆகியவற்றால் ஏற்பட்ட காலிப் பணியிடங்கள் மற்றும் புதிய பாடப்பிரிவுகளுக்கு ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்கள் சேர்த்து மொத்தமாக, 1,112 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நிரப்பப்படும். *திருச்சி மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் 10 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அதே போல், கோயம்புத்தூர் மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் 8 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த இரண்டு மண்டல அலுவலகங்களில் அதிக மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளதால், நிர்வாக வசதிக்காக திருச்சி மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தை இரண்டாக பிரித்து தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், நாகப்பட்டினம்; ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கி தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் அலுவலகம் உருவாக்கப்படும். இவ்வலுவலகம் மன்னர் சரபோஜி அரசு கலை கல்லூரி வளாகத்தில் செயல்படும். மேலும் கோயம்புத்தூர் மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தை இரண்டாகப்பிரித்து, சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கி தர்மபுரியில் ஒரு மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் அலுவலகம் உருவாக்கப்படும். இவ்வலுவலகம் அரசுக்கலை கல்லூரி வளாகத்தில் செயல்படும். இதன் தொடர்ச்சியாக, வேலூர் மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் சேர்க்கப்படும். இதற்கான தொடர் மற்றும் தொடராச் செலவினம் 3 கோடியே 22 லட்சம் ரூபாய் ஆகும்.*இந்தியாவின் அறிவுத்தலைநகரமாகவும், புதுமைத்தளமாகவும் தமிழகத்தை மாற்றுவது தான் எனது அரசின் குறிக்கோளாகும். தற்போதுள்ள எண்ணியல் தொழில்நுட்பயுகத்தில், உயர் கல்வித்துறையின் 13 பல்கலைக்கழகங்களில், நூலகம் சார்ந்த தகவல்கள், ஆராய்ச்சி மற்றும் பாடப்பொருள்களை இணைய தளம் மூலம் இணைத்து அண்ணா பல்கலைக்கழகத்திலும், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்திலும் மின் தொடர்பு நூலக களஞ்சியங்களை இணைய தள வசதியுடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மின்- நூல்கள், மின்-இதழ்கள், ஒளிப் படங்கள் மற்றும் அனைத்து பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆகியவற்றை, மாணவ-மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து எளிதில் பெற இத்திட்டம் வழிவகை செய்யும். அனைத்து பல்கலைக்கழகங்களும், அவற்றில் இணைவு பெற்ற கல்லூரிகளும், இந்த களஞ்சியத்துடன் இணைக்கப்படும். உலகளாவிய அறிவு வளங்களை எளிதில் பரிமாறிக் கொள்ள வகை செய்யும் இத்திட்டம் 1 கோடியே 86 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.புதிய பாடப்பிரிவுகள்*தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாணவ மாணவியருக்கும் தரமான கல்வியை அளிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்கள் சிறப்பான சூழ்நிலையில் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் 93 அரசு, பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு 100 கோடி ரூபாயை அரசு வழங்கியுள்ளது. தற்போது திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகங்கள் தனியார் கட்டிடங்களில் அதிக வாடகை செலுத்தி செயல்பட்டு வருகின்றன. இதனை தவிர்க்கும் பொருட்டும் பணியாளர்கள் அனைத்து அடிப்படை வசதிகளுடன் நல்லதொரு சூழ்நிலையில் பணி புரிவதற்கென இம்மூன்று அலுவலகங்களுக்கும் மொத்தமாக 24,300 சதுர அடி பரப்பளவில் 4 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சொந்த கட்டிடங்கள் கட்டப்படும்.*2014-15-ம் கல்வியாண்டில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 26 இளங்கலை பாடப் பிரிவுகள், 23 முதுகலை பாடப் பிரிவுகள், 62 எம்.பில் பாடப்பிரிவுகள் மற்றும் 52 பி.எச்.டி. பாடப் பிரிவுகள் என மொத்தம் 163 பாடப்பிரிவுகள்அறிமுகப்படுத்தப்படும்என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.

தாமதம் -பிளஸ் 1, பிளஸ் 2 பாடத் திட்டங்கள் ஒன்பது ஆண்டுகளாக, பழைய பாடப் புத்தகங்களே தொடரும் அவலம்

தமிழகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத் திட்டம் அமல்படுத்துவதில், கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஒன்பது ஆண்டுகளாக, பழைய பாடப் புத்தகங்களே தொடரும் அவலம் காணப்படுகிறது.
கடந்த, 2006ல், பிளஸ் 1 புதிய பாடத் திட்டமும், அடுத்த ஆண்டில், பிளஸ் 2 புதிய பாடத் திட்டமும் அமல்படுத்தப்பட்டன. ஒன்பது ஆண்டுகள் முடியும் நிலையில், இன்னும், புதிய பாடத் திட்டங்கள் அறிமுகப்படுத்தவில்லை.அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பிற்கு, புதிய பாடத் திட்டங்களை அமல்படுத்த நடவடிக்கை எடுத்தது.

அரசின் ஒப்புதலுக்கு...:இதற்காக நியமிக்கப்பட்ட வல்லுனர் குழு, வரைவு பாடத் திட்டங்களை தயாரித்து முடித்ததும், தமிழக அரசின் ஒப்புதலுக்கு, கல்வித் துறை, கோப்பை அனுப்பியது. பல மாதங்கள் ஆகின்றன; இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை.நடப்பு கல்வி ஆண்டில் (2014 - 15), பிளஸ் 1 புதிய பாடத் திட்டமும், அடுத்த ஆண்டு (2015 - 16), பிளஸ் 2 புதிய பாடத் திட்டமும் அறிமுகப்படுத்தப்படும் என, முதலில் அறிவிக்கப்பட்டது.பணிகள் முடியாததால், அடுத்த கல்வி ஆண்டில் (2015 - 16), பிளஸ் 1 பாடத் திட்டமும், அதற்கு அடுத்த கல்வி ஆண்டில் (2016 - 17) பிளஸ் 2 பாடத் திட்டமும்

அறிமுகப்படுத்தப்படும் என, பின்னர் அறிவிக்கப்பட்டது. வரைவு பாடத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த பின், பாடங்களை எழுதுவதற்கான குழுக்களை ஏற்படுத்தி, பாடங்கள் எழுத வேண்டும். இதற்கு, ஒரு ஆண்டு முழுமையாக தேவைப்படும் என, கல்வித் துறை வட்டாரம் தெரிவிக்கிறது.இது குறித்து, வரைவு பாடத் திட்டங்களை தயாரித்த ஆசிரியரில், ஒருவர் கூறியதாவது:பாடத் திட்ட தயாரிப்பு பணிகளை, மற்ற பணிகளைப் போல், வேகமாகச் செய்ய முடியாது. சிறிய தவறுகள் வந்தாலும், அது, மாணவர்கள் மத்தியில், தவறான கருத்துக்களை கற்பிப்பது போல் ஆகிவிடும்.வரைவு பாடத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதில், ஆறு மாதங்களுக்கு மேலாக இழுபறி உள்ளது. இதைப் பற்றி, முதல்வரிடம் எடுத்துக் கூற, அதிகாரிகள் தயங்குகின்றனர். முதல்வரிடம், விவரத்தை தெரிவித்தால், அவர், உடனடியாக ஒப்புதல் அளிப்பார்.நெருக்கடி கொடுத்தால்...:பாடத் திட்டங்களை எழுத, குறைந்தபட்சம், ஒரு ஆண்டு தேவைப்படும். எழுதி முடித்த பின், பிழைகள் பார்ப்பது உள்ளிட்ட, பல பணிகள் உள்ளன. எனவே, இனிமேல், தமிழக அரசு ஒப்புதல் அளித்தாலும், எங்களது பணியை,முழுமையாகச் செய்ய முடியாது.

. நெருக்கடி கொடுத் தால், புத்தகங்கள், முழு தரத்துடன் வெளி வராதுதமிழக அரசு, போதிய நிதியை ஒதுக்கீடு செய்து, போதிய கால அவகாசம் தர வேண்டும். அப்போது தான், தரமான பாடத் திட்டங்களை தயாரிக்க முடியும்.இவ்வாறு, அந்த ஆசிரியர் தெரிவித்தார்.திட்டமிட்டபடி, நடப்பாண்டில், பிளஸ் 1 வகுப்பிற்கு, புதிய பாடத் திட்டங்களை அமல்படுத்தாமல், கால தாமதம் செய்வதால், ஒன்பது ஆண்டுகளாக, பழைய பாடப் புத்தகங்களே தொடரும் அவலம் ஏற்பட்டுள்ளது.
- நமது நிருபர் -

ஆசிரியர் பயிற்சி பள்ளி அட்மிஷன் : 10,000 இடங்களுக்கு ஒருவர் கூட வரவில்லை.

ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக நடந்த கவுன்சலிங்கில் 10 ஆயிரம் இடங்களை மாணவர்கள் தேர்வு செய்யவில்லை.
மாணவர்களிடையே ஆர்வம் குறைந்தது மற்றும் தகுதி தேர்வும் காரணங்களாக கூறப்படுகிறது.தமிழகத்தில் அரசு ஆசிரியர் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனங்கள் 29, மாவட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் 9 இயங்கி வருகின்றன.
அவற்றில் இந்த ஆண்டு 3000 இடங்கள் இருந்தன. தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் 400 உள்ளன. அவற்றில் 10 ஆயிரம் இடங்கள் உள்ளன. மேற்கண்ட இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான கவுன்சலிங் கடந்த 3ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை நடந்தது. கவுன்சலிங்கில் 2,240 பேர் பங்கேற்று இட ஒதுக்கீடு உத்தரவுகளை பெற்றனர்.அரசு ஆசிரியர் கல்வியியல் நிறுவனங்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் 760 இடங்களை யாரும் தேர்வு செய்யவில்லை.அதேபோல தனியார் பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்ட 10 ஆயிரம் இடங் களையும் மாணவர்கள் தேர்வு செய்யவில்லை. இதனால் இந்த ஆண்டு தனியார் பள்ளிகளுக்கான அரசு ஒதுக் கீட்டு இடங்கள் முழுவதும் காலியாகவே உள்ளன.மேலும், தனியார் பள்ளிகளில் உள்ள நிர்வாக பிரிவு இடங்களிலும் போதிய மாணவர்கள் சேராத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் இந்த ஆண்டு ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மாணவர்கள் இன்றி வெறிச்சோடின. மாணவர்களிடம் ஆர்வம் குறைந்தது மற்றும் தகுதி தேர்வு காரணமாகவே 10 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளதாக தெரிகிறது.
ஆர்வம் குறைந்தது; யாரும் விண்ணப்பிக்கவில்லை

TNTET: அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆனந்தம் தருமா இந்த ஆகஸ்ட் 1....

ஆசிரியர் தகுத்தேர்வு இரண்டாம் தாள்  மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 43ஆயிரம் தேர்வர்களில் இருந்து வெய்ட்டேஜ் மதிப்பெண் மூலம் 11ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்  தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும் அதற்கான தேர்வுப்பட்டியல் வெள்ளிக்கிழமை வெளிவரும் என

தினமனி மற்றும் தினமலர் போன்ற நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளதால் இன்று காலையிலிருந்தே 72,711 ஆசிரியர்களும் அவர்களை சார்ந்த குடும்பங்களும் ஒவ்வொரு ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை ஆசிரியர் தேர்வுவாரிய இனையதளத்தை விரதம் கொண்ட பக்தன் போல  பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.....

மேலும் தாள் 1ஐ சார்ந்த இடைநிலை ஆசிரியர்களும் நமக்கு இன்று வெய்ட்டேஜ் மதிப்பெண்னை சரிபார்த்து கொள்ள பட்டியலாவது வெளியிடுவார்களா என காத்திருக்கினறனர்........

விரைவில் விரைவில் என்று சொல்லி வந்த அலுவலர்கள்...சில நாட்களுக்கு முன்பு  அலுவலர்களும் பல ஊடகங்களும் வெள்ளிக்கிழமை என கூறியது ...ஆனால் ஆசிரியர் தேர்வுவாரியம் தாமாக முன்வந்து தேர்வுப்பட்டியல் வெளிவரும் தேதியெ உறுதியாக  கூறாதது ஏன்???இந்த ஆகஸ்ட் 1ல் தேர்வுப்பட்டியல் வெளிவந்து ஆசிரியர்களின் மனதில் ஆனந்தம் கொடுக்குமா???ஏமாற்றத்தை மட்டுமே சந்தித்த தேர்வர்களுக்கு இன்றாவது மாற்றம் கிடைக்குமா??

எதிர்பார்த்து காத்திருப்போம் நல்லதே நடக்குமென்று.....

1,112 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நிரப்பப்படும் - சட்டசபையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு.

சட்டசபையில் முதல்– அமைச்சர் ஜெயலலிதா 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:–


நாட்டை வளப்படுத்துவதிலும், மக்களை மேம்படுத்துவதிலும், அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதிலும் முக்கியப் பங்கு வகிப்பது உயர் கல்வி என்பதைக் கருத்திற் கொண்டு, உயர் கல்வியை அனைத்துத் தரப்பினரும் கற்பதற்குத் தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

உயர் கல்வி பயிலுவதை மேலும் ஊக்குவிக்கும் வகையில், கீழ்க்காணும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

1. 665 கல்வியியல் கல்லூரிகளின் இணைப்புடன், ஆராய்ச்சிப் பட்டப் படிப்பினையும் நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், தற்காலிகமாக காமராஜர் சாலையில் அமைந்துள்ள லேடி விலிங்டன் கல்லூரி வளாகத்தில் மிகுந்த இட நெருக்கடிக்கிடையே செயல் பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த இட நெருக்கடியை களையும் பொருட்டு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூரில் உள்ள காரப்பாக்கம் கிராமத்தில் 10 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இங்கு பல்கலைக்கழகத்திற்கான கல்வியியல் வளாகமும் நிர்வாக வளாகமும் 95 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

2. தமிழ்நாட்டிலுள்ள மாணவ, மாணவியர் குறிப்பாக கிராமப்புற பகுதியைச் சார்ந்த, சமூக பொருளாதார நிலைகளில் பின்தங்கிய மாணவ,மாணவியர் உயர் கல்வியை பெறும் வகையில், கடந்த மூன்றாண்டுகளில் பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்; அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் என 37 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, மயிலாடு துறை மற்றும் சீர்காழி சட்ட மன்ற தொகுதி மக்களின் கோரிக்கைக்கிணங்க, மயிலாடுதுறையில் ‘மணல்மேடு’ என்னுமிடத்தில் புதியதாக இருபாலர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடப்பாண்டு முதல் துவங்கப்படும்.

3. தமிழகத்தை தொழிற் கல்வியில் முதன்மை மாநிலமாக திகழச் செய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன் செயல்பட்டு வரும் எனது தலைமையிலான அரசு, இந்தியாவில் உள்ள முன்னணி தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் மண்டல மையங்கள் மற்றும் உறுப்புப் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்குச் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த 150 கோடி ரூபாய் நிதியை அளித்து, அதற்கான கட்டு மானப் பணிகள் நடை பெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கான வசதிகள் ஏற்படுத்தித்தரப்பட வேண்டும் என்பதைக் கருத்திற் கொண்டு, சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகத்தில் பயிலும் இள நிலை மாணவ, மாணவியர்களுக்கென புதிய மாணவர் மற்றும் மாணவியர் விடுதிகள்; குரோம்பேட்டை, எம்.ஐ.டி.க்கு என நிருவாகக் கட்டடம் மற்றும் அங்கு பயிலும் இளநிலை மாணவியர்களின் வசதிக்கென புதிய விடுதிக் கட்டடங்கள் ஆகியவை 30 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

4. கல்லூரிகளை துவக்குவதோடு மட்டுமல்லாமல், மாணவ, மாணவியருக்கு தரமான கல்வியினை அளிக்க தகுதியான ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில்காலியாக உள்ள 1,623 பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நிரப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதே போன்று, 2013–14 ஆம் கல்வியாண்டில் பதவி உயர்வு, பணி ஓய்வு ஆகியவற்றால் ஏற்பட்ட காலிப் பணியிடங்கள் மற்றும் புதிய பாடப் பிரிவுகளுக்கு ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்கள் சேர்த்து மொத்தமாக, 1,112 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நிரப்பப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

5. திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் 10 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அதே போல், கோயம்புத்தூர் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் 8 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.இந்த இரண்டு மண்டல அலுவலகங்களில் அதிக மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளதால், நிர்வாக வசதிக்காக திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தை இரண்டாக பிரித்து தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், நாகப்பட்டினம்; ஆகிய நான்கு மாவட்டங்களைஉள்ளடக்கி தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகம் உருவாக்கப்படும். இவ்வலுவலகம் மன்னர் சரபோஜி அரசு கலை கல்லூரி வளாகத்தில் செயல்படும்.மேலும் கோயம்புத்தூர் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தை இரண்டாகப் பிரித்து, சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கி தர்மபுரியில் ஒரு மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகம் உரு வாக்கப்படும். இவ்வலுவலகம் அரசுக் கலை கல்லூரி வளாகத்தில் செயல்படும். இதன் தொடர்ச்சியாக, வேலூர் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் சேர்க்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கான தொடர் மற்றும் தொடராச் செலவினம் 3 கோடியே 22 லட்சம் ரூபாய் ஆகும்.

6. இந்தியாவின் அறிவுத் தலைநகரமாகவும், புதுமைத் தளமாகவும் தமிழகத்தை மாற்றுவது தான் எனது அரசின் குறிக்கோளாகும். தற்போதுள்ள எண்ணியல் தொழில்நுட்ப யுகத்தில், உயர் கல்வித் துறையின் 13 பல்கலைக்கழகங்களில், நூலகம் சார்ந்த தகவல்கள், ஆராய்ச்சி மற்றும் பாடப் பொருள்களை இணைய தளம் மூலம் இணைத்து அண்ணா பல்கலைக்கழகத்திலும், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்திலும் மின் தொடர்பு நூலக களஞ்சியங்களை இணைய தள வசதியுடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மின்நூல்கள், மின்இதழ்கள், ஒளிப் படங்கள் மற்றும் அனைத்து பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆகியவற்றை, மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பதி விறக்கம் செய்து எளிதில் பெற இத்திட்டம் வழிவகை செய்யும்.அனைத்து பல்கலைக் கழகங்களும், அவற்றில் இணைவு பெற்ற கல்லூரிகளும், இந்த களஞ்சியத்துடன் இணைக்கப்படும். உலகளாவிய அறிவு வளங்களை எளிதில் பரிமாறிக் கொள்ள வகை செய்யும் இத்திட்டம் 1 கோடியே 86 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.

7. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாணவ மாணவியருக்கும் தரமான கல்வியை அளிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்கள் சிறப்பான சூழ்நிலையில் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் 93 அரசு , பல்கலைக் கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு 100 கோடி ரூபாயை அரசு வழங்கியுள்ளது. தற்போது திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும்திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகங்கள் தனியார் கட்டடங்களில் அதிக வாடகை செலுத்தி செயல்பட்டு வருகின்றன.இதனை தவிர்க்கும் பொருட்டும் பணியாளர்கள் அனைத்து அடிப்படை வசதிகளுடன் நல்லதொரு சூழ்நிலையில் பணி புரிவதற்கென இம்மூன்று அலுவலகங்களுக்கும் மொத்தமாக 24,300 சதுர அடி பரப்பளவில்4 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சொந்த கட்டடங்கள்கட்டப்படும்.

8. தமிழ்நாட்டின் மொத்த சேர்க்கை விகிதத்தினை, உயர்த்தும் பொருட்டும், கிராமப்புறம் மற்றும் பொரு ளாதாரத்தில் நலிவுற்ற மாணவ, மாணவியர் உயர் கல்வி பெறும் பொருட்டும், கடந்த மூன்று ஆண்டுகளில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 797 புதிய பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இப்பாடப் பிரிவுகளில் 10,204 மாணவ மாணவியர்கள் சேர்ந்து பயனடைந்துள்ளனர்.இதன் காரணமாகவும், மொத்த சேர்க்கை விகிதம் 38.2 ஆக உயர்ந்துள்ளது. இதே போன்று 2014–15 ஆம் கல்வியாண்டில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 26 இளங்கலை பாடப் பிரிவுகள், 23 முதுகலை பாடப் பிரிவுகள், 62எம்.பில் பாடப் பிரிவுகள் மற்றும் 52 பிஎச்.டி பாடப் பிரிவுகள் என மொத்தம் 163 பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்காணும் நடவடிக்கைகள் மூலம், உயர் கல்வி வளம் அடைவதோடு தமிழ்நாடும் வளர்ச்சி அடையும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.