சுகாதார அலுவலர் (Health Officer) பதவிக்கானஅறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர்தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்வெளியிட்டுள்ள அறிவிக்கையில்,
தமிழ்நாடு பொது சுகாதார பணியிலுள்ளசுகாதார அலுவலர் (Health Officer)
பதவியில் 33காலிபணியிடங்களை நேரடி நியமனம் மூலம்நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிட்டுள்ளது.இப்பதவிக்கு B.S.Sc., (Bachelor of SanitaryScience) அல்லது Diploma in Public Healthஅல்லது Licentiate in Public Healthஅல்லது M.B.B.S அல்லது DMS அல்லது LMPகல்வித்தகுதியினை உடைய விண்ணப்பதாரர்கள் விண்ணபிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் www.tnpscexams.netஎன்ற முகவரியில் உள்ளன. இணைய வழியில் (Online) மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.இப்பதவிக்கான எழுத்து தேர்வு 22.02.2015 அன்று முற்பகல் மற்றும் பிற்பகல் சென்னை மையத்தில் நடைபெறும்.
இப்பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 09.01.2015.
மேலும் இப்பதவிக்கானவயதுவரம்பு, கல்வித்தகுதி, பொதுவான தகவல்கள், தகுதி குறித்த விவரங்கள்,எழுத்து தேர்வுக்கான பாடத்திட்டம்,தேர்வு திட்டம், தேர்வு மையம்,விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள், தடையின்மைச் சான்று, சலுகைகள் மற்றும் பிறமுக்கிய அறிவுரைகள் தொடர்பானவிவரங்களை தேர்வாணையத்தின் இணையதள முகவரியான www.tnpsc.gov.in–ல் வெளியிடப்பட்டுள்ள விரிவான அறிவிக்கையில்காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment