Sunday, 7 December 2014

மத்திய அரசு ஊழியர்கள் கோரிக்கை ஏற்புஎளிதாகிறது கணக்கு காட்டும் படிவம்

புதுடில்லி:மத்திய அரசு அதிகாரிகளின், சொத்து விவர படிவம் நீண்டதாகவும், குழப்பமாகவும் உள்ளதாக, அதிகாரிகள் தரப்பில் புகார் கூறப்பட்டதை அடுத்து, அந்தப் படிவங்கள் மாற்றி யமைக்கப்படுகின்றன. விரைவில் புதிய படிவங்கள், அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டு, டிச., 31ம் தேதிக்குள், விவரங்கள் அளிக்க கேட்டுக் கொள்ளப்படுவர்.


லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்களின் படி, அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், தங்களின் அசையும், அசையா சொத்து விவரங்கள், கடன் விவரங்கள், முதலீட்டு விவரங்களை தெரிவிக்க வேண்டியது கட்டாயம். மேலும், தங்கள் மனைவி, வாரிசுகள் வசம் உள்ள சொத்து விவரங்களையும், அரசுக்கு அளிக்க வேண்டியது அவசியம்.

ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 31ம் தேதிக்குள், இந்த விவரங்களை தெரிவிக்க வேண்டும். இந்த ஆண்டு முதல், இந்த விதிமுறை பின்பற்றப்படுவதால், செப்டம்பருக்குள் அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டனர். அதன்பின், கெடு நீட்டிக்கப்பட்டு, இம்மாதம் 31க்குள், அந்த விவரங்களை சமர்ப்பிக்க, மத்திய அரசு ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

0 comments:

Post a Comment