"மதுரை  மாவட்டத்தில் பிளஸ் 2 அரையாண்டு தேர்வுக்கான சிறப்பு 'ஆன்சர் கீ'  தயாரிக்கப்பட்டு அதன்படி விடைத்தாள் திருத்தப்படும்" என முதன்மை கல்வி  அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி தெரிவித்தார். 
             பிளஸ்  2 பொதுத்தேர்வு குறித்து தலைமையாசிரியர்களுக்கான சிறப்பு ஆலோசனை கூட்டம்  நடந்தது. கல்வி மாவட்ட அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி (மதுரை), லோகநாதன்  (மேலுார்), ராமகிருஷ்ணன் (உசிலம்பட்டி) பங்கேற்றனர்.
ஆஞ்சலோ இருதயசாமி  பேசியதாவது: பிளஸ் 2 தேர்வு 275 மையங்களில் நடக்கின்றன. மைய எண்கள்,  மையங்களின் இணைப்பு பள்ளிகள் உட்பட பல்வேறு தகவல்களை தலைமையாசிரியர்கள்  சரியாக அளிக்க வேண்டும். ஏதாவது மாற்றம் இருந்தால் உடனடியாக திருத்தம்  செய்யலாம்.
மாணவர்களுக்கு  தனித்தனியே ஆசிரியர் குழு ஏற்படுத்தி சிறப்பு வகுப்புகள் நடத்தி தேர்ச்சியை  அதிகரிக்க வேண்டும். பாடம் வாரியாக சிறப்பு வினா- விடை தயாரித்து வழங்க  தலைமையாசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரையாண்டு தேர்வு  விடைத்தாள்களை மாவட்ட அளவில் சிறப்பு 'ஆன்சர் கீ' தயாரித்து அதன்படி  திருத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.






0 comments:
Post a Comment