சென்னை,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு பொது சுகாதார பணியிலுள்ள சுகாதார அலுவலர் பதவியில் 33 காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பதவிக்கு துப்புரவு அறிவியலில் பட்டம், பொது சுகாதாரத்தில் டிப்ளமோ, பொது சுகாதாரத்தில் லைசன்சியேட், எம்.பி.பி.எஸ்., டி.எம்.எஸ்., எல்.எம்.பி., ஆகிய படிப்புகள் ஏதாவது ஒரு கல்வித்தகுதியினை உடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பங்கள் www.tnpscexams.net என்ற முகவரியில் ஆன்–லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இப்பதவிக்கான எழுத்துத்தேர்வு வருகிற பிப்ரவரி (2015) மாதம் 22–ந் தேதி முற்பகல் மற்றும் பிற்பகல் சென்னை மையத்தில் நடைபெறும். இந்த பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற ஜனவரி (2015) மாதம் 9–ந் தேதி ஆகும்.
வயது வரம்பு, கல்வித்தகுதி, பொதுவான தகவல்கள், தகுதி குறித்த விவரங்கள், எழுத்து தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வு திட்டம், தேர்வு மையம், விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள், தடையின்மை சான்று, சலுகைகள் மற்றும் பிற முக்கிய அறிவுரைகள் தொடர்பான விவரங்களை www.tnpsc.gov.in தேர்வாணையத்தின் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ள விரிவான அறிவிக்கையில் காணலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment