கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் விவரங்களை ஆன்-லைனில் இன்று முதல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில், வரும் 2015ம் ஆண்டு மார்ச் மாதம் நடக்கும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வை எழுத உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார், மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளின் பெயர் பட்டியல் தயார்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் கடலூரில் நேற்று நடந்தது. மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி பாலமுரளி தலைமை தாங்கி பேசினார். மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் பிச்சையப்பன், முதன்மைக் கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். வரும் 2015ம் ஆண்டு மார்ச் மாதம் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளின் பெயர், பிறந்த தேதி, பாடப்பிரிவு, புகைப்படம் உள்ளிட்ட உள்ளிட்ட விவரங்களை எந்தவித பிழையும் இன்றி இன்று (2ம் தேதி) முதல் ஆன்-லைனில் பதிவேற்றம் செய்யும் பணியை சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் துவங்க வேண்டும். விவரங்கள் பதிவேற்றம் செய்யும் பணியை ஒரு வார காலத்திற்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் 220 பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
0 comments:
Post a Comment