Tuesday, 2 December 2014

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்: 13 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள குரூப்–4 தேர்வு 21–ந்தேதி நடக்கிறது


சென்னை,
5 ஆயிரம் பணிகளுக்கான குரூப்–4 தேர்வு 21–ந்தேதி நடக்கிறது. இந்த தேர்வை 13 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.

13 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வருகிற 21–ந்தேதி காலை குரூப்–4 பணிகளில் 4,963 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வை நடத்த உள்ளது. இந்த தேர்வுக்கு 13 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து உரிய விண்ணப்பக்கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களின் விவரங்கள், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in –ல் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பித்த விவரம் தொகுதி–4 பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை உள்ளீடு செய்து தங்களது விண்ணப்பம் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பெறப்பட்டதற்கான விவரத்தினை சரிபார்த்துக்கொள்ளலாம்.
சரியான முறையில் விண்ணப்பங்களை பதிவு செய்து உரிய விண்ணப்பக்கட்டணம் செலுத்தியும் அதன் விவரம் மேற்படி இணையதளத்தின் இல்லாவிடில் அந்த விண்ணப்பதாரர்கள், பணம் செலுத்தியதற்கான செலுத்துச்சீட்டின் (செல்லான்) நகலுடன் கீழ்கண்ட விவரங்களை தேர்வாணையத்தின் முகவரியான contacttnpsc@gmail.com–க்கு 5–ந்தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தேர்வுக்கூட சீட்டு விண்ணப்பதாரரின் பெயர், குரூப்–4 பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான விண்ணப்பப் பதிவு எண் விண்ணப்பம், தேர்வுக்கட்டணம் (ரூபாய்) கட்டணம் செலுத்திய இடம் (அஞ்சலகம் அல்லது இந்தியன் வங்கி) கிளை முகவரி மேற்படி இணையதளத்தில் உள்ள விவரங்கள், விண்ணப்பம் பெறப்பட்டதற்கான ஒரு ஒப்புகை மட்டுமே. விண்ணப்பங்களின் உள்ள விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்வது குறித்த தகவல் விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

0 comments:

Post a Comment