This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Friday, 28 November 2014

ஆசிரியர்களுக்கான உயர்கல்வி அனுமதி

பட்டதாரிமற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களின் உயர்கல்விபடிப்பதற்கான அனுமதியை சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்களே வழங்கும் வகையில் கல்வித்துறை உத்தரவிடவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில்
பணியில் சேர்ந்த பின்எம்.பில்., பி.எச்டி., போன்ற உயர்கல்வி படித்தால் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படும். இதனால் பலர் உயர்கல்வி படிக்கஅனுமதி கோரி ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானஆசிரியர்கள் விண்ணப்பம் செய்வர்.
தொடக்கம், பட்டதாரி மற்றும் மேல்நிலை பள்ளிகளின்ஆசிரியர்கள் அத்துறைக்கு உட்பட்ட இணை இயக்குனர்அந்தஸ்தில் உள்ளவர்களிடம் அனுமதி பெற வேண்டும். இதில் காலதாமதம் ஏற்படுவதாக சர்ச்சை எழுந்தது. இதனால்தொடக்கக் கல்வியில் சம்பந்தப்பட்ட உதவித் தொடக்கக் கல்விஅலுவலரே அதற்கான அனுமதியை அளிக்கலாம்என உத்தரவிடப்பட்டது. இதேபோல் பட்டதாரி மற்றும்மேல்நிலை பள்ளி ஆசிரியர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Direct Recruitment of Postman / Mail Guard in Postal Divisions | தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள, 806 தபால்காரர் மற்றும் மெயில்கார்டு பணியிடங்களுக்கு, இணையம் மூலம், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கடைசி நாள், டிசம்பர், 7ம் தேதி.

தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள, 806 தபால்காரர் மற்றும் மெயில்கார்டு பணியிடங்களுக்கு, இணையம் மூலம், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அஞ்சல் துறையின் முதன்மை அஞ்சல்துறை தலைவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அஞ்சல் வட்டத்தில்,

அஞ்சலக கோட்டங்கள் மற்றும் அஞ்சலக பிரிப்பக கோட்டங்களில் காலியாக உள்ள, தபால்காரர்- - 797, மெயில்கார்டு - 9 என, மொத்தம், 806 பணியிடங்களுக்கு, இணையம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். சம்பள விகிதம், 5,200 முதல், 20,200 ரூபாய் வரை. மேலும், விவரங்களுக்கு,www.dopchennai.in என்ற இணையதளத்தை பார்க்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள், டிசம்பர், 7ம் தேதி.இவ்வாறு, செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Thursday, 27 November 2014

பணி பாதுகாப்பு வழங்கிட கோரி கறுப்பு பேட்ஜ் அணிந்து இன்று பணியாற்ற முடிவு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

புதுக்கோட்டை, : தமிழகத்தில் அனை த்து பள்ளி ஆசிரியர்களுக்கு பணியின் போது பாதுகாப்பு வழங்கிட கோரி தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் இன்று கறுப்பு பேட்ஜ் அணிந்து பணி மேற்கொள்ள உள்ளனர். 

 இது குறித்து புதுக்கோட்டையில் தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில துணைத் தலைவர் பிச்சைவேல் விடுத்துள்ள அறிக்கை: கோடம்பாக்கம் லயோலா தனியார் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பாஸ்கர் என்பவரை அப்பள்ளியில் பயின்ற 8ம் வகுப்பு மாணவர் அர்னால்டுவின் தந்தை அருளானந்தத்தின் தூண்டுதலின் பேரில் 100க்கும் மேற்பட்ட அடியாட்கள் பள்ளி வளாகத்திலேயே தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தை கண்டித்தும், அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு பணி பாதுகாப்பு வழங்கிட கோரியும், தமிழகத்தில் உள்ள 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் இன்று (28ம் தேதி) கறுப்பு பேட்ஜ் அணிந்து பள்ளிக்கு சென்று வழக்கமான கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரூ.3,500 மாத ஊதியத்தில் பரிதவிக்கும்அரசு பள்ளி துப்புரவு பணியாளர்கள்

விருதுநகர்:அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இரண்டு ஆண்டுகளாக பணி புரியும் 3,000 துப்புரவு பணியாளர்கள், ரூ. 3,500 ஊதியத்தில் குடும்பம் நடத்த முடியாமல் பரிதவிக்கின்றனர்.தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 2012 நவ., 11 ல் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் சீனியாரிட்டி அடிப்படையில் துப்புரவு பணியாளர் 3,000 பேர், இரவு காவலர் 2,000 பேர் நியமிக்கப்பட்டனர். 
 
                     தமிழ், ஆங்கிலம் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும் என்ற தகுதியில் பணி வழங்கப்பட்டது.துப்புரவு பணியாளர்களை முழுநேர பணியாளர் எனக் கூறி சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கினர். அதன்படி மாதம் ரூ. 3,500 ஊதியம் பெறுகின்றனர். இந்த ஊதியத்தில் குடும்பம் நடத்த முடியாததால் 200 க்கும் மேற்பட்டோர் வேறு பணி சென்றுவிட்டனர்.பணியில் இருப்போரில் உயர் கல்வி படித்தவர்களுக்கு பணி வரன்முறை செய்யாததால் பதவி உயர்வு பெற முடியவில்லை. வேலைவாய்ப்பு பதிவும் ரத்து செய்யப்பட்டதால் வேறு பணிக்கும் செல்ல முடியவில்லை.

இவர்களுக்கு பணிப் பதிவேடும் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இவர்களின் தகுதியுடன் இவர்களுடன் பணிக்கு சேர்ந்த இரவு காவலருக்கு ஊதியமாக ரூ. 13,500 வழங்கப்படுகிறது. எனவே தங்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என, முதல்வர், கல்வி அதிகாரிகளுக்கு மனு கொடுத்துள்ளனர்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருதம் 3–வது மொழியாக இருக்கும் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6–ம் வகுப்பு முதல் 8–ம் வகுப்புவரை சமஸ்கிருதம் மூன்றாவது மொழியாக இருக்கும் என்று மத்திய அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது.
 
ஜெர்மன் நீக்கம்
கடந்த மாதம் 27–ந்தேதியன்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிருதி இரானி தலைமையிலான கேந்திரிய வித்யாலயா சங்காதன் அமைப்பின் நிர்வாகக் குழு கூட்டத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழிப்பாடத்தை உடனடியாக ரத்து செய்து விட்டு அதற்கு பதிலாக சமஸ்கிருத பாடத்தை அறிமுகப்படுத்த முடிவு எடுக்கப்பட்டது.

எதிர்ப்பு
மத்திய அரசின் இந்த முடிவு நாடு முழுவதும் உள்ள 500 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6–ம் வகுப்பில் இருந்து 8–ம் வகுப்பு வரை படித்து வரும் சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏற்கனவே படித்து வரும் ஜெர்மன் மொழிக்கு பதிலாக புதிதாக சம்ஸ்கிருதம் மொழியை படிக்க வேண்டியிருக்கும்.

இதுகுறித்து பெற்றோர்கள் மற்றும் தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் இடையில் பெருத்த எதிர்ப்பு கிளம்பியது.

தவறு
மத்திய அரசின் இந்த முடிவை ரத்து செய்யக்கோரி கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:–

கல்வியாண்டில் இடையில், பல மாதங்கள் பாடங்கள் நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வுக்கு தயார் செய்து கொள்ளும் இந்த இடைப்பட்ட காலத்தில் பாடத்திட்டத்தில் உள்ள மொழியை மாற்றும் முடிவை கேந்திரிய வித்யாலயா சங்காதன் எடுத்தது தவறானது.

இந்த முடிவானது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களைக் கலந்து ஆலோசிக்காமலேயே எடுக்கப்பட்ட அவசரமான முடிவாக உள்ளது. எனவே, இதை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

சமஸ்கிருதம்
இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் ஏ.கே.சிக்ரி அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6–ம் வகுப்பில் இருந்து 8–ம் வகுப்புவரை சம்ஸ்கிரும் மூன்றாவது மொழியாக கற்றுத்தரப்படும் என்றும், இதுகுறித்து மத்திய அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்வதற்கு அனுமதி வேண்டும் என்றும் கோரினார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த மனு தொடர்பான விசாரணை வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெறும் என்று உத்தரவிட்டனர்.

FLASH NEWS ; NAGAI, PUDUKKOTTAI, KARAIKKAL, TIRUVARUR DISTRICT SCHOOLS HOLIDAY TODAY DUE TO HEAVY RAIN

NAGAI  PUDUKKOTTAI KARAIKKAL, TIRUVARUR DISTRICT SCHOOLS HOLIDAY TODAY DUE TO HEAVY RAIN